Category Archive: இயற்கை

காஞ்சிரம்

காடு நாவலில் வரும் ஒரு மரத்தைப்பற்றி பலர் எனக்கு கடிதம் எழுதிகேட்டிருந்தார்கள். காஞ்சிரம். அப்போது நான் அறிந்த ஒரு விஷயம் தமிழ்நாட்டில்மக்கள் பெரும்பாலும் நெருக்கமான தெருக்கள் அமைந்த ஊர்களிலேயே வசிக்கிறார்கள்.ஊரிலும் சுற்றி இருக்கும் பொட்டலில் சிலவகை மரங்களே உள்ளன. ஆகவேபெரும்பாலானவர்களுக்கு நிறைய வகையான மரங்களையும் செடிகளையும் தெரிவதேயில்லை.என்னுடையது போல மலையடிவாரக் கிராமத்தில் தோட்டம் சூழ்ந்த ஊரில் வாழ்வது இயற்கையைஅறிவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பு. காடு நாவலில் காஞ்சிர மரம் ஒரு யட்சிக்கதையின் பகுதியாக வருகிறது. காட்டில் ஒருமாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1885

பறக்கும் புல்லாங்குழல்

ஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்போது மிகவும் தாமதமாகும். முந்தின இரவில் நாளை விடுமுறைதானே என்று எண்ணி கிடத்தட்ட விடியும்வரை விழித்திருப்பேன். இரவு விழித்திருக்க நேர்வதென்பது எப்படியோ வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வது என்றே பொருள்படுகிறது. முட்டாள்கள்தான் இரவு தூங்குவார்கள் என்பது மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இதற்குக்காரணம் நம் ஊரில் மதியம் என்பது கடும் வெப்பம் காரணமாக சுறுசுறுப்பாக வேலைபார்க்க முடியாத ஒன்றாக இருப்பதே. குளிர்ச்சாதன வீடுள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு. ஆகவே ஞாயிறு மதியம் விரிவான ஒரு தூக்கம். மாலை நாலரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2204

வெண்முரசு -மழை

”நூற்றியிருபதாண்டுகளுக்கொருமுறை ஆரியவர்த்தத்தில் பஞ்சம் வரும் என்பது நிமித்திகர் கணக்கு. ஆறாண்டுகளுக்கொருமுறை கோடை எல்லை மீறும். ஆறின் மடங்குகளில் அது பெருகிச்செல்லும் என்பார்கள். ஆறாண்டுகளுக்கு முன்பு கோடை வளர்ந்து நீண்டு சென்று பெருமழையில் முடிந்ததையும் புராண கங்கை பெருகிவந்து நகரை மூழ்கடித்ததையும் விதுரன் எண்ணிக்கொண்டான். “மீண்டும் அந்தப் பெருமழையும் வெள்ளமும் வரக்கூடுமா?” என்று கேட்டான். வைதிகர் சிரித்து “பிந்திய மழை சேர்ந்து பெய்யும் என்பது கணக்கு. ஆனால் அந்த மழை இங்குதான் பெய்ய வேண்டுமென்பதில்லை. எப்போதும் இப்பக்கமாக வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56604

இமயம் ஓர் ஆவணப்படம்

ஜெயமோகன் தனது இமய மலைப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார். அது நமக்கு ஆழமான பல பரிமாணங்களை அளிக்கும். அவர் கண்ட காட்சிகளை தத்ரூபமாக அவரால் நம் கண்களுக்குக் காட்டி விட முடியும். இருந்தாலும் அதற்கும் மேலாக இமயமலையில் அவர் சென்ற இடங்களையும் செல்லாத இடங்களின் காட்சிகளையும் காண விரும்புபவர்கள் இந்த பிபிசி தொலைக்காட்சித் தொடரின் 6 எபிசோடுகளில் காணலாம். அந்தக் காட்சிகள் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகளுடன் நமக்கு மேலும் நெருக்கத்தை அளிக்க உதவலாம். பிபிசியின் பிரபல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39756

ஃபுகோகா ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், மசானபு ஃபுகோகாவின் “ஒற்றை வைக்கோல் புரட்சி” வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களிலேயே தெரிந்துவிட்டது என் வாழ்வின் மிக முக்கியமான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என. முக்கியமாக ஃபுகோகா தன் தாவரவியல் ஆராய்ச்சியாளர் பணியை உதறி விடக் காரணமாயிருந்த தருணம் கிட்டத்தட்ட ஒரு காவிய நிகழ்வு போல கண் முன்னே விரிந்தது. இள வயதிற்கே உரித்தான பெருங்கனவு கொண்டு இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். பல சமயம் கூடத்திலேயே மயங்கி விழுகிறார். கிடைத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37024

குப்பைச்சமூகம்

அன்புள்ள ஜெ, திரு ராம்குமார் youtube-இல் வலையேற்றியிருந்த உங்களின் நேர்காணல் முழுதும் நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன். மொழி, வரலாறு, சங்க இலக்கியம், சமணம், காந்தி இப்படி பல்வேறுபட்ட உங்கள் கருத்துக்களை, அவ்வப்போது உங்கள் வலைத்தளத்தில் வாசித்தவற்றைத் தொகுத்துக் கேட்க முடிந்தது. குப்பைகளை உருவாக்குவது மற்றும் சூழல் சமநிலை பற்றிய காந்தியின் அக்கறை பற்றி நீங்கள் கூறியதை நினைவு கூர்கிறேன். தூக்கி எறியப்படும் ஒரு காகிதம் எங்கே செல்லும் என்று காந்தி அப்போதே கொண்டிருந்த அக்கறை பேராச்சர்யப்பட வைக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37237

சூழல் கடிதங்கள்

வணக்கம். வேளச்சேரியில், பள்ளிக்கரணைக்கு அருகில் என் வீடு. கோவிலுக்கு சொந்தமான கருவேல மரங்கள் நிறைந்த ஒரு ஏக்கர் நிலத்தை அடுத்தது எங்கள் வீடு. google maps இல் பார்த்தால் இந்த இடத்திலேயே கொஞ்சம் பசுமையாக இருப்பது இந்த நிலம் மட்டும்தான். மழைக் காலத்தில் தண்ணீர் சேர்ந்து கொசு,பாம்பு, தவளை என்ற பல ஜந்துக்களும் வரும், மழை தொடங்கிவிட்டால் தவளைகளின் சத்தம் 24 மணி நேரமும் கேட்க்கும். கோடை காலங்களில் பல விதப் பறவைகள் இந்த சிறிய இடத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37220

பறவைச்சரணாலயங்கள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நான் பூபாலன்.ஏற்கனவே சில கடிதங்கள் தவிர கணிணி,செல்லிடப்பேசி குறுந்திரை என தினமும் தொடர்ந்து உங்களுடன் உரையாடி க்கொண்டிருப்பவன்.பிறந்து வளர்ந்தது,சித்திரங்குடி,முதுகுளத்தூர் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம்.தற்போது பிழைப்பிற்காய் சென்னையில்.எங்கள் ஊர் சித்திரங்குடி இந்தியாவின் மிகத்தொன்மையான வலசைப் பறவைகளின் வாழிடம்.(http://www.forests.tn.nic.in/WildBiodiversity/bs_cbs.html).சில நூற்றாண்டுகளாகவே பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கி தலைமுறைகளை உற்பத்தி செய்து செல்லும் தொன்மையான பறவைகள் சரணாலயம்.தொண்ணுறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அப்பத்தா, தான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போதே பல மாமாங்களாக இங்கு பறவைகள் வந்து போவதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36050

நுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு

கூடங்குளம் பயணம் முடிந்து திரும்பும் வழியில் ,தூரத்தில் அணு மின்நிலையம் புத்தனின் மௌனத்துடன் உறைந்து காட்சி அளித்தது . எத்தனை ஆற்றல் . எத்தனை சக்தி . அத்தனை வழியாகவும் நாம் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான் . நமது பூமியை ஒட்ட ஒட்ட சுரண்டி , விஷக் காற்று வீசும் பாலைநிலத்தை , நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது . சூழல் மாசுபடாமல் ,பொருளாதாரத் தன்னிறைவு இல்லை . இதற்கு எதிராக எழும் எந்தக் குரலும் தேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34486

அமெரிக்காவில் விவசாயம்

http://www.thehindu.com/opinion/columns/sainath/knowing-your-onions-in-new-york/article4156928.ece?homepage=true சாய்நாத்தின் இந்தக் கட்டுரை, அமெரிக்க விவசாயிகளின் நிலையைக் காட்டுகிறது. அங்கே நூறு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் சிறு விவசாயி. விவசாய மானியம் பெறுபவர்கள் ராக்ஃபெல்லர் போன்ற பெரும் விவசாயிகள். அடிப்படை உணவுப் பொருட்கள் மலிவாகக் கிடைக்க வேண்டும். ஆனால், விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்க வேண்டும். catch-22. எவ்வளவு inefficient ஆக இருந்தாலும் (ஒரு கிலோ அரிசியை விளைவிக்க ஜப்பானில் ஆகும் செலவு இந்தியாவை விட மிக அதிகம்), நாடுகள் தங்கள் food security ஐ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32490

Older posts «

» Newer posts