ஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு? ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு …
Category Archive: சமூகம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/26932
அற்பத்தனமும் அகங்காரமும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா? அன்புடன், அருண் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/36883
அணையாவிளக்கு
சமீபத்தில் ஒரு சிறிய நண்பர் குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும் பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாதென்றும், ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே என்றும் சொன்னேன். உதாரணமாக எந்த ஊடகவியலாளரும் மதுரை தினகரன் அலுவலகத்தில் நிகழ்ந்த கொலையைப்பற்றி இன்று எழுதிவிடமுடியாது. அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/31402
கலை இலக்கியம் எதற்காக?
அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன் சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/46
நாராயண குரு எனும் இயக்கம்-2
தொடர்ச்சி நடராஜகுரு நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …
Permanent link to this article: https://www.jeyamohan.in/7524
நாராயண குரு எனும் இயக்கம் -1
நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …
Permanent link to this article: https://www.jeyamohan.in/7522
நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?
ஜெ எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை தயக்கத்துடன்தான் சொல்கிறேன் – அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி கூத்து கூட என்னால் தாங்க முடியவில்லை. அதை விட எம்ஜிஆரின் எவ்வளவோ மோசமான படங்கள் – தேர்த்திருவிழா, முகராசி மாதிரி நிறைய உண்டு – சுவாரசியமாக இருந்தன. இத்தனைக்கும் அவை அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற ஒரு குழு நடத்தியதுதான். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/12635
தொடங்குமிடம்
அன்புள்ள ஜெ , நம்மை சுற்றியிருக்கும் வறுமையையும், பாலின அத்துமீறலையும், குழந்தைகள் அனுபவிக்கும் வன்கொடுமைகளையும், எளியோர் ஏமாற்றப்படுவதையும் எப்படித்தான் பார்த்துக்கொண்டு கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம்? இன்று காலை இறந்த ஒரு தாயிடம் குழந்தை பால்குடித்து கொண்டிருந்தது பற்றி செய்தி படித்து மனம் கலங்கிப்போனேன். இந்த மாதிரி சோகங்களை தவிர்க்கவே மனம் நினைக்கிறது. வர வர படம் பார்த்தல் கூட ஜி.வி.பிரகாஷ் படம் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கப் பிடிக்கவில்லை. புத்தகங்களில் கூட நல்ல முடிவுடன் கூடிய சோக நிகழ்வுகள் இல்லாத …
Permanent link to this article: https://www.jeyamohan.in/99888
பார்ப்பனன் என்னும் சொல்
அன்புள்ள ஜெயமோகன், ‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.” சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கத்தினரின் பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று …
Permanent link to this article: https://www.jeyamohan.in/99998
நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு
பக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபாய் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைச் செய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால் நிரப்பிக் கொள்வதுமாகும். இவ்வாறு உணர்ச்சிப்பெருக்கால் நிரப்புவது மனிதர்களால் இயல்பாக சாத்தியமற்றது என்பதனால் அதற்கு உதவும்பொருட்டு நாமாவளிகள், மந்திரங்கள், தோத்திரங்கள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/316