Category Archive: இதழ்

சிறுகதையின் வழிகள்

    [ 1 ] ஒரு பண்பாட்டுச்சூழலில் குறிப்பிட்ட இலக்கிய படிவம் ஏன் உருவாகிறது என்ற வினா அவ்வடிவத்தில் எழுதப்படும் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்வதற்கான முதல் திறவுகோலாக அமைய முடியும். உதாரணமாக பெரும்பாலான நாட்டுப்புறப்பாடல்கள் ஏதேனும் தொழிலுடன் இணைந்ததாக உள்ளன. அத்தொழிலின் இயல்புக்கேற்ப அவற்றின் வடிவம் அமைந்துள்ளது. ஆகவே,கணிசமான நாட்டுப்புறப்பாடல்க்ள் ஒன்றிலிருந்து ஒன்று தொற்றி ஏறுவனவாகவும்,எத்தனை நேரம் வேண்டுமென்றாலும் ஒரு குறிப்பிட்ட கருவை நீட்டிக்கொண்டு போகும் தன்மை கொண்டதாகவும் உள்ளன. அவற்றுக்கேற்ப சுழன்று வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88141

முழுடிக்கெட்!

    நான் 1985ல் லா.ச.ரா எழுதி முத்துப்பதிப்பகம் வெளியிட்ட த்வனி என்னும் சிறுகதைத்தொகுதியை வாங்கினேன். மூன்று ரூபாய் விலை. 1978ல் வெளியானது. முத்துப்பதிப்பக உரிமையாளர் என்னிடம் சொன்னார். ”முந்நூறு பிரதி அடிச்சேன் சார். இன்னும் எம்பது இருக்கு” எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அதற்கு மூன்று மாதம் முன்னால் நாகர்கோயில் ஜெயகுமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தகம் மற்றும் எழுதுபொருள் கடை நகுலனின் நினைவுப்பாதையை வெளியிட்டிருந்ததை நான் வாங்கினேன். நகுலனின் செலவில் வெளியான நூல். நாற்பதுபிரதிகள் பத்துவருடங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88268

வாசிப்பு அன்றும் இன்றும்

  1982ல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அன்றைய வார இதழ் ஒன்றில் புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் என்னும் கதை மறுபிரசுரமாகியிருந்தது. உடன் ஒரு குறிப்பு, ‘இவர் பெயர் புதுமைப்பித்தன். இவர் தமிழின் முதன்மையான சிறுகதை ஆசிரியர். இவர் எழுதிய காஞ்சனை என்னும் தொகுப்பில் உள்ள கதை இது’ தமிழின் முதன்மையான இலக்கியமேதையை அவற் மறைந்து முப்பத்தைந்தான்டுகளுக்குப்பின் இப்படி அறிமுகம்செய்ய வேண்டிய நிலை அன்றிருந்தது. மௌனியின் சிறுகதைத்தொகுதியை அவரது நண்பர் கி.ஆ.சச்சிதானந்தம் என்பவர் பீக்காக் பதிப்பகம் என்னும் பெயரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88225

தினமலர் 40,மீளும் வாசல்

  தேர்தல் அரசியல் குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக என் கோவை நண்பர் நடராஜன் உணர்ச்சிகரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமான அனைவருமே தகுதியற்றவர்கள் என்று எனக்குத் தோன்றுமென்றால் நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? தலைவலிக்கு பதிலாக திருகுவலியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே தமிழர்களுக்கு இன்று உள்ளது? தேர்தல்நேரத்தில் நாம் பேசுவது என்ன? எந்தக் கட்சி “பரவாயில்லை?” என்றுதானே? ஊழலா, எதேச்சாதிகாரப்போக்கா, பொறுப்பின்மையா, குடும்ப ஆட்சியா, உள்ளூர் ரவுடி அரசியலா எது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87392

தினமலர் – 39 , கேளாக்குரல்களைக் கேட்போம்

  ஒவ்வொரு தேர்தலிலும் நாம் அடிக்கடி காதில் கேட்கும் ஒரு ஏளனக்குரல், ‘அவர்களுக்கு வைப்புத்தொகைகூட திரும்பக்கிடைக்காது’ .டெபாசிட் காலி என்பது ஒரு கேலிச் சொல்லாகவே நம் நாவில் விளங்குகிறது. ஓர் அரசியல் தரப்பை மட்டம் தட்டவும், இழிவுபடுத்தவும் அவர்களுக்கு தேர்தலில் படுதோல்வி தான் கிடைக்கும் என்ற சொற்றொடரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஜனநாயகத்தை புரிந்து கொண்ட ஒருவர் இந்த கூற்றிலுள்ள அபத்தத்தை அறிந்திருப்பார். ஒரு தரப்பு முழுமையாகவே மக்களால் புறக்கணிக்கப்படும் என்றால் அது இழிவானதா என்ன ?மக்கள் அத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87382

தினமலர் 37, தனித்து நடப்பவர்கள்

  ஜெ தினமலரில் வெளிவந்த தனித்துநடப்பவர்கள் முக்கியமான கட்டுரை. அரசியலில் அந்நியர்களின் இடமென்ன என்பது திடீரென்று உறைத்தது. மடியில் கனமற்றவர்கள். ஆகவே வழியில்பயம் அற்றவர்கள் அவர்கள் நாகராஜன்   மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன், தங்களது ‘நிபுணர்கள் வருக ‘கட்டுரை படித்தேன் .நிபுணர்களின் பங்களிப்பு அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்த உதவும் என்பது உண்மைதான் .ஆனாலும் ஒரு சிறு சந்தேகம் , இதில் நிபுணர்களின் தனிப்பட்ட ஆளுமைக்கும் , அவர்கள் மீதான கட்சி ஆதிக்கத்திற்கும் பங்கு இருக்கிறதல்லவா . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87330

தினமலர் கடிதங்கள்

இன்றைய தினமலர் கட்டுரை நடுநிலைமையை  அதன் definition  ஐ தெளிவாக விளக்கியது. இங்கு என்னால் நடுநிலைமையாக பார்க்கும் போது யாரையும் தேர்ந்தெடுக்க தோன்றவில்லை. ஏனெனில் அவர்களுடைய கடந்த கால ‘சாதனைகள்’.அப்படி இருக்க  எப்படி இப்போது அவர்களின் அள்ளி விடும் பொய்களை நம்புவது. இருப்பினும் மக்கள் முதிர்ச்சியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என நம்புவோம். நடராஜன் அன்பான எழுத்தாளர் அவர்களுக்கு, எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த கேள்விகளுக்கு அரசுகளும், அரசை இயக்குபவர்களும் பதில் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் எனது சந்தேகங்கள் மற்றவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87303

தினமலர் – 36, நிபுணர்கள் வருக!

எப்போதும் இல்லாதபடி இந்த தேர்தலில் வசந்திதேவி, சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற படித்தவர்கள் சற்று அதிகமாக போட்டியிடுகிறார்கள். வழக்கமாக தேர்தல்களில் படித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொகுதியை கட்சியரசியல் மூலம் தன் கட்டுப்பாட்டில் முன்னரே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதே அரசியல் கட்சிகளுக்கு வசதியானது என்று கருதப்படுகிறது. அவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் அப்படி கட்சி அரசியலில் ஈடுபட்டு ஒரு தொகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தொழில்முறை அரசியல்வாதியாக இருப்பார். மிக இளம் வயதிலேயே ஏதேனும் கட்சிக்குள் நுழைந்து, ஒரு முன்னோடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87301

தினமலர்-36, துலாக்கோலின் முள்

மகாபாரதத்தை வைத்து அடிப்படையாகக் கொண்டு நான் எழுதும் வெண்முரசு என்னும் தொடர்நாவலில் எனக்குப்பிடித்த ஒரு வரி வரும்.  ‘அத்தனை போர்வீரரும் பூமித்தாயுடன் தான் போர்புரிகிறார்கள்’. ஏனென்றால் தொடுக்கப்படும் அம்புகளில் நூற்றில் ஒன்றுதான் எதிரியைக் கொல்கிறது. பிற அனைத்தும் குறிபிழைத்து மண்ணில்தான் வந்து தைக்கின்றன. ஆகவே போரிடும் இருதரப்புமே பூமாதேவியைத்தான் அம்பால் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரங்களையும் விவாதங்களையும் பார்க்கையில் அதேபோல் ஒரு வரி தோன்றுகிறது, ‘அத்தனை அரசியல்கட்சியினரும் நடுநிலையாளர்களிடம்தான் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்’. ஃபேஸ்புக் விவாதங்களைச் சென்று பாருங்கள். மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87293

தினமலர் – 35 சுயேச்சைகளின் அரசியல்

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சாத்தான் குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மறைந்த காந்தியவாதியான நெல்லை ஜெபமணி அவர்கள் வாக்கு சேகரித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். கொதிக்கும் வெயிலில் நான் நின்றிருந்த டீக்கடைக்கு வந்து அவர் ஓட்டுக்கேட்டார். “ ஐயா இந்த வெயிலிலே ஏன் வரீங்க ?வயசாச்சில்ல?” என்றார் கடையில் நின்றிருந்தவர் பரிவுடன். “நீங்க ஓட்டுப்போடுங்க ஐயா” என்று கேட்டுவிட்டு அவர் சென்றார். “பாவம் நல்ல மனிதர் வெயிலில் இப்படி அலைந்து கஷ்டப்படுகிறார்” என்றார் அங்கு நின்றிருந்த ஒருவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87278

Older posts «

» Newer posts