Category Archive: இதழ்

வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

  வல்லினம் இம்மாத இதழ் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சு.வேணுகோபால்,சுனீல் கிருஷ்ணன், கிரிதரன் ராஜகோபாலன், சுரேஷ் பிரதீப்,சுசித்ரா, அர்விந்குமார், அனோஜன் பாலகிருஷ்ணன், ப.தெய்வீகன், ம.நவீன் சிறுகதைகளும் என் கதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மலாய்மொழிச் சிறுகதையும் சிங்களச் சிறுகதையும் உள்ளது   வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129998

வல்லினம் இமையம் சிறப்பிதழ்

வல்லினம் மார்ச் மாத இதழ் இமையம் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இமையத்தின் நாவல்களைப் பற்றி சுனீல் கிருஷ்ணனும் செல்லாத பணம் பற்றி கடலூர் சீனுவும் செடல் பற்றி சுரேஷ் பிரதீப்பும் ஆழமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்  ஆறுமுகம் பற்றிய ரெ.பாண்டியனின் கட்டுரை குறிப்பிடத்தக்கது. எங்கதே நாவலை ஆண்களின் உளவெளி என வகைப்படுத்தி அழகுநிலா எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று தமிழில் எப்போதுமே இலக்கிய ஆக்கங்களைப்பற்றி எழுத்தாளர்கள்தான் பொருட்படுத்தும்படியான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.  பிறருக்கு இன்னமும்கூட இலக்கியப்படைப்பை அணுகும் முறை தெரியவில்லை. தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118813

இந்த மாபெரும் சிதல்புற்று

நத்தையின் பாதை 2 ஊட்டியில் நாங்கள் சென்ற ஏப்ரல் 2017ல் ஆண்டுதோறும் நடத்தும் இலக்கியக்கூடுகையில் பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலை வரலாற்றைப் பற்றிப் பேசினார். அதன் இறுதியில் ‘இந்தியச் சிந்தனைமுறை என ஒன்று உண்டா’ என்ற வினாவை எழுப்பிக்கொண்டு ஆனந்தக் குமாரசாமி, அரவிந்தர் வழியாக அவ்வினாவுக்கான விடை நோக்கிச் சென்றார். அதில் அவர் முன்வைத்த ஆனந்தக்குமாரசாமியின் ஒரு கருத்து இது. ‘தனிப்பட்ட வாழ்க்கைத்தரிசனம் அல்லது சிந்தனை என ஒன்று இல்லை. ஒருபண்பாட்டின் பகுதியாக, அதில் முன்னரே இருந்தவற்றின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100158

புரட்சி வரவேண்டும்!

  ஓர் எழுத்தாளனாக இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அரசியல் குறித்த எந்தப் பேச்சையும் அவர்கள் “ஒரு புரட்சி வரணும் சார்!” என்று தொடங்குவதைப்பார்க்கிறேன். புரட்சி எவ்விதம் எங்கு நிகழவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் புரட்சி வந்தே தீரவேண்டும் என்பதில் மாற்றமில்லை. நானும் அவ்வாறே இருந்தவன் என்பதால் எனக்கு அதில் வியப்போ எதிர்ப்போ இல்லை. ஆனால் என் இளமையில் புரட்சி போன்ற  உருவகங்களை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள நான் முயன்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87228

விசித்திரபுத்தர்

  சம்பவாமி யுகே யுகே என்பது தெய்வங்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஞானாசிரியர்களுக்கு பொருந்துகிறது. அந்தந்தக் காலகட்டத்தின் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ப அவர்கள் தோற்றம்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரைப்போல் பிறிதொருவர் இல்லை. இது வரை வந்தவர்களை வைத்து இனிவரும் ஒருவரை புரிந்து கொள்ள முடியாது. ஆனால்… ஆம் அந்த பிழையையே எப்போதும் செய்கிறோம். ஞானாசிரியர்களுக்கு என்று நம் மரபு ஒரு நிலைச்சித்திரத்தை அளிக்கிறது. அதில் அத்தனை ஆசிரியர்களையும் கொண்டு சென்று பொருத்துகிறோம். நம் புனிதர்கள் அத்தனை பேருக்கும் ஒரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93210

தாயுமாதல்

  மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜான்சி ரயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ரயில் பாதைகள் அங்குதான் சந்தித்துக் கொள்கின்றன. அது ஒரு சிலுவையின் மையம் போல. அந்த ஊர் அந்த ரயில்வே நிலையத்து அளவுக்கு பெரியது அல்ல. அன்று அது பெரும்பாலும் தகரக் கூரையிட்ட சிறிய வீடுகளும், குப்பைக் கூளங்களும் இடிபாடுகளும், மிகப்பழமையான கட்டிடங்களும் கொண்ட புழுதிமூடிய ஊர். அவ்வூருக்கு சற்று அப்பால் பிரம்மாண்டமான ஜான்சி கோட்டை இருந்தது. ஜான்சி ஊரின் சிறப்பு அங்கு ஜான்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88911

குமுதம் கடிதங்கள்

  அன்புள்ள ஜெ., குமுதம் கட்டுரை. என் விடலைப் பருவத்தைக் குமுதத்தில் இருந்து பிரிக்க முடியாது… இப்போது திரும்பிப் பார்க்கையில், குமுதம் வாசிப்பு என் வாழ்வின் இனிய தருணங்களில் ஒன்றாகவே மனதில் இருக்கிறது.. அதைவிட ஒரு வணிகப் பத்திரிக்கை வேறு என்ன பங்களிப்பை செய்திட  முடியும்… பழைய குமுதம் எல்லாவற்றையும் எள்ளி நகையாடியது – மிக முக்கியமாகத் தன்னையும்… “குமுதம் ஒரு குப்பை” என்று ஒரு பத்திரிக்கை எழுதிய விமர்சனத்தை முழுதும் வெளியிட்டது.. அடுத்த பக்கத்தில் ‘குப்பையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88749

குமுதம்

அன்புள்ள ஜெ. சார், என்னை பப்பரபாவென்று போட்டுக் கொடுத்துவிட்டீர்கள். யாருக்கும் தெரியாமல் ஓர் ஓரமாக எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். இனிமேல் பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக மென்றாக வேண்டிய நெருக்கடிக்கு நானும் உள்ளாகிவிட்டேன் :( எனினும், குமுதத்தின் தொடர்ச்சி என்று நீங்கள் கூறியிருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிப் பருவத்தில் என் பாடப்புத்தகங்களுக்கு இடையே ’குமுதம்’ எப்போதும் இருக்கும். அந்த இதழில் பணியாற்றிய ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி, ரஞ்சன் ஆகியோரை என்னுடைய முன்னோடிகளாக கருதுகிறேன். குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88650

சரியும் மானுடக்கனவு

பொதுவாக, இளைஞர்களும் குடியேற்றப் பின்னணி கொண்டவர்களும் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். முதியவர்கள், பெண்கள் பெரும்பாலும் வெளியேற வேண்டும் என்றே வாக்களித்தனர். என் இந்திய நண்பர் சிறில் அலெக்ஸ் பிரிட்டன் வெளியேற வேண்டும் என வாக்களித்தார். என்ன காரணம் என்று கேட்டேன். “இன்று தொழில்நுட்பம், மனிதவளம் இரண்டையும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே பிரிட்டன் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயப்படுத்துகிறது. பிரிந்து சென்றால், இந்தியாவிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு அது நல்லது” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88695

தமிழ் ஹிந்துவின் மொழி

  மியூனிச்சில் இருக்கிறேன். கிடைத்த சின்ன இடைவெளியில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த இந்தக்கட்டுரையை வாசித்தேன் அனேகமாக ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தெளிவற்ற உரைநடையில் கோவையாக அமையாத சொற்றொடர்களுடன் எழுதப்பட்டுள்ளது. மிகச்சாதாரணமான செய்தி. ஆனால் ஒரு சட்டச்சூத்திரத்தை வாசிப்பதுபோல வாசிக்கவேண்டியிருக்கிறது. இது தமிழின் தலையெழுத்தாகவே மாறிவிட்டிருக்கிறது. இந்தியா டுடே தமிழில் மிக முக்கியமான இதழியல்வருகை. தமிழில் அதன் அறிவுத்தளப் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால் பொறுப்பற்ற மொழியாக்கத்தால் அது வாசகர்களை இழ்ந்து  நின்றுவிட்டது. இன்று அதன் வெற்றிடத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88551

Older posts «