Category Archive: இணையம்

பழைய அரிய தமிழ் புத்தகங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். போக முனிவர் அருளிய ஜெனன சாகரம்,தமிழ் சித்த வைத்திய அகராதி,ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்,சங்க இலக்கிய இன்கவி திரட்டு போன்ற *பழைய அரிய தமிழ் புத்தகங்கள்* வருடம் 1886 ல் இருந்து பதிப்பிக்கப்பட்டவை (5376 புத்தங்கள்) ‘pdf’ வடிவத்தில் கிடைக்கும் ‘சுட்டியை’ நண்பர் அனுப்பியிருந்தார்.அதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் நமது தளத்தில் பகிர வேண்டுகிறேன்.  http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700 அன்புடன், அ .சேஷகிரி ***.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/97480

மலம்

சிலசமயம் கண்ணில்படும் சில கட்டுரைகள் உருவாக்கும் ஒவ்வாமை பலநாட்களுக்கு நீடிக்கும். அத்தகைய கட்டுரைகளில் ஒன்று இது இணையம் ஒருவகைப் பொதுவெளி. முன்பு அச்சு ஊடகம் மட்டும் இருந்தபோது எப்படியோ பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டன. உண்மையில் சாதாரணமாகப் பலர் எண்ணுபவை கூட பொதுவெளியில் வராத நிலை இருந்தது. அதற்கு இன்னொரு காரணம் சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் இலட்சியவாதம் இன்னொருதலைமுறைக்காலம் நீடித்ததுதான். கடைப்பிடிக்க முடிகிறதோ இல்லையோ மானுட சமத்துவம், அடிப்படை மனிதாபிமானம் சார்ந்த முற்போக்கான இலட்சியங்களில் பரவலான நம்பிக்கை இருந்தது. காந்தி,நேரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97425

வாசகர்களின் நிலை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ சிலவாசகர்களின் கடிதங்களை புகைப்படத்துடன் இணையத்தில் பிரசுரிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட காரணத்துடனா? மகாதேவன் *** அன்புள்ள மகாதேவன், இணையத்தில் அவர்களின் புகைப்படம் இருக்கவேண்டும் என்பது முதல் விதி. புகைப்படத்தை பிரசுரிக்க முதன்மைக் காரணம் அவர்கள் தொடர்ச்சியாக எழுதுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு. அவர்களின் கருத்துக்களுக்கு அந்த முகம் ஒரு தொடர்ச்சியை அளிக்கிறது. கருத்துக்களுக்குப் பின்னால் ஓர் ஆளுமை இருப்பதை உறுதிசெய்கிறது. முகமில்லாமல் கருத்துக்கள் நிலைகொள்வது கடினம். முகம் பிரசுரமாகவில்லை என்றால் வாசகன் காலப்போக்கில் ஒரு முகத்தை கற்பனைசெய்துகொள்வான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97234

தளம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அபிடேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன். தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன். இது உங்கள் உழைப்பு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97191

அ.மி – கடிதங்கள்

ஜெ, அசோகமித்திரன் மறைந்தபோது நீங்கள் சொன்ன ஓர் உணர்வுபூர்வமான பேச்சின் எதிர்வினையாக வந்த செய்திகளைக் கேட்டு நானும் ஓர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் கடுமையாக வசைபாடி உங்களுக்கு ஓரு கடிதம் எழுதினேன் ஆனால் சமீபத்தில் அசோகமித்திரன் பேட்டி ஒன்றில் இந்த வரிகளை வாசித்தேன். உண்மையில் பல விஷயங்களுக்கு நான் பொறுப்பாளியே அல்ல. வேறு பலவற்றைச் செய்துதான் நான் பிழைக்க வேண்டியிருந்தது. நான் சம்பந்தப்பட்டவரை தரம் இருக்க வேண்டும், கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் பலமுறை அதில் தோற்றுப்போயிருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96999

ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா?

ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான் .– என ஆரம்பித்து ஒரு கீற்று கட்டுரை. என் நூல்களின் விற்பனையை தோராயமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். . மறுஅச்சு , மறுபதிப்பு இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு தெரியாமலிருப்பதையும், பல்வேறு தகவல்களை தோராயமாக அடித்துவிட்டிருப்பதையும் தவிர்த்தால் உட்கார்ந்து வேலைசெய்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். முதன்மையான எழுத்தாளர் என்று சொன்னவர்கள் எல்லாம் பெஞ்சின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96995

ரியாஸ் -கடிதம்

ஜெ, நான் உங்களுக்கு எழுதிய அதே கடிதத்தை மனுஷுக்கும் அனுப்பியிருந்ததாக அவர் எழுதியிருந்த பதிவைப் படித்ததுமே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்று உங்கள் தளத்தில் மனுஷ்யபுத்திரனின் அந்த பதிவைப் பற்றிய ஜெம்ஸ் ராஜசேகரின் கடிதத்தைப் பார்த்ததும், நான் மனுஷுக்கு எழுதிய அந்த கடிதத்தை உங்களுடன் பகிரலாம் என்று தோன்றியது. *** அன்புள்ள மனுஷ்யபுத்திரன், நான் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தை உங்களுக்கும் அனுப்பியிருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காகத் தான் அப்படி சொல்லியிருப்பீர்கள் என்றாலும், நானே உங்களுக்கு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97009

இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ   ரியாஸ் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே தனக்கும் எழுதியதாக சொல்லி மனுஷ்யபுத்திரன் தன் முகநூலில் நக்கலடித்திருக்கிறார் .உங்கள் வாசிப்புக்காக   ஜெம்ஸ் ராஜசேகர்   அன்புள்ள ராஜசேகர்,   நலம்தானே? அவர் நுணுக்கமாக கிண்டலடிக்கிறாராமாம். அதாவது ரியாஸ் என எவரும் இல்லை, அது பொய்யான கடிதம், அதைச் சுட்டிக்காட்டுகிறாராமாம். என்னத்தைச் சொல்ல   இது தொடர்ந்து நிகழ்கிறது, இணையத்தின் அரைவேக்காடுகள் என் தளத்தில் வரும் கடிதங்களை வைத்துக்கிண்டல்செய்வது. இது ஒருபெரிய அறிவார்ந்த வட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96989

இணையதளம் வருவாய்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அப்டேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன். தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கபட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன். இது உங்கள் உழைப்பு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96908

தளம் முடக்கம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, உங்கள் வெப்சைட் இயங்கவில்லையா? சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள்? இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே. அன்புடன் ஶ்ரீதர் *** வணக்கம். உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?’ என்ற கட்டுரைக்குப் பின் இன்று இரவு உங்கள் தளம் முடக்கியுள்ளதைப் பார்த்ததும் இதுபோன்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறது. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் எதுவும் தளத்தில் இல்லை. டம்மியாக ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96883

Older posts «