Category Archive: ஆவணப்படம்

இரண்டு – சத்யஜித் ரே

. இனிய ஜெயம் சத்யஜித் ரே  இயக்கிய ஆவணப்படம் ஒன்றினை தேடியபோது [அவர் தாகூர் குறித்து எடுத்த ஆவணப்படத்தில் தாகூரே சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடும் காட்சி ஒன்று உண்டு என்றொரு வதந்தி] ரே இயக்கிய  இந்தக் குறும்படம் கிட்டியது . பத்தே நிமிட குறும்படத்தில் எத்தனை வலிமையானதொரு உணர்வு நிலையை பொதிந்து, கலையாக்கி, காலத்தில் நிறுத்திவிட்டார் மனிதர் .  காமிரா நோக்கு முழுதுமே ,பெரும்பாலும் மேலிருந்து கீழே பார்க்கும் கோணம் . காலுக்குக் கீழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116659

பாட்டும் தொகையும் – கடிதங்கள்

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு அன்புள்ள ஜெ பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே காட்டுகிறது. அது வெளியே இருந்து ஒலிக்கிறது. உள்ளிருந்து போதிய குரல்கள் கிடைக்கவில்லை என்பதற்கான சான்று அது. ஒரு இடத்தைப்பற்றிச் சொல்லும்போதோ தத்துவம்பற்றிச் சொல்லும்போதோதான் பின்னணிக்குரல் ஒலிக்கவேண்டும். பேராசிரியரின் கவனமில்லாத உடல்மொழி, அலைபாயும் நடை, அவருடைய முகத்தில் மாறிமாறி வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116789

பாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதால் விஷ்ணுபுர விழாவுக்கு வர இயலவில்லை.விழா குறித்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடிதங்கள் வாயிலாகவும்,உங்கள் கட்டுரை,   காணொளிகள் வாயிலாகவும் விழா பற்றித்.தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் வேறுபட்ட கோணங்களில் விழாவைக் காட்டினார்கள்.இரண்டு நாட்களின் நேர நிர்வாகமும்,நிகழ்ச்சி நிர்வாகமும் பிற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல,எல்லா விழாக்களுக்கும் ஒரு பாடம்.உச்சத்தை எட்டிவிட்டதாக அரங்கசாமியும், கிருஷ்ணனும் மகிழட்டும்.ஆனால் மெருகூட்டுவதற்கு முடிவேயில்லை.ராஜ் கௌதமன் பற்றிய ஆவணப் படம் ஒரு அற்புதம்.தமிழ் இலக்கியக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116695

வண்ணதாசன் ஆவணப்படம்

வண்ணதாசனைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம். வண்ணதாசனைப்பற்றி முழுமைப்படுத்தப்பட்ட முதல் ஆவணப்படம் இது      வண்ணதாசன் விழா அனைத்து இணைப்புக்களும்               ஆ

Permanent link to this article: https://www.jeyamohan.in/94047

வண்ணதாசனுடன் இரண்டுநாட்கள்

    வண்ணதாசனைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கவேண்டும். அஜிதன் மணிரத்னத்தின் படத்தில் இரவு பகலில்லாமல் தீவிரமாக இருக்கிறான். வேறு சிலரை அணுகினோம். அரைலட்சத்துக்குக் குறையாமல் பட்ஜெட் சொன்னார்கள். வேறுவழியில்லாமல் நாங்களே எடுத்துவிடலாமென முடிவுசெய்தோம். செல்வேந்திரன் இயக்குநர், சக்தி கிருஷ்ணன் உள்ளூர் ஒருங்கிணைப்பு. சென்ற டிசம்பர் 5,6 தேதிகளில் நெல்லைக்குச் சென்றோம். நான் நாகர்கோயிலில் இருந்து சென்றிருந்தேன். நெல்லைக்குச் செல்லும் முன்னரே ஜெயலலிதா உடல்நிலை மோசமாக இருக்கும் செய்தி வந்தது. கிளம்பவேண்டுமா வேண்டாமா என்று செல்வேந்திரனே குழம்பிக் கொண்டிருந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93267

திரிலோக சீதாராம் ஆவணப்படம் – அஸ்வத்

சென்ற  3.4.2016  அன்று  ரவி சுப்ரமணியன்  இயக்கிய  கவிஞர்  திருலோக  சீதாராம்  குறித்த  ஆவணப்  படத்தை  புதுதில்லி  தமிழ்ச் சங்கத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரம் ஓடிய  இப்பபடத்தில்  கவிஞரின்  வாழ்க்கை  நிறையவும்,   கவிதைகள்  கொஞ்சமும்   பார்க்கக் கிடைத்தன.   கவிஞர்   தமிழ்க் கவிஞர்  என்றாலும்  தமிழ்ச் சூழலில்  வெகு ஜனப்   பிராபல்யம்  இல்லாதிருந்தவர்.  பாரதிக்குப்  பிறகு  தமிழில்  வந்த  கவிஞர்களில்  மிகவும்  முக்கியமானவர்.  அவரே   சொல்லிக்  கொண்டது போல்  பாரதியை  ஞானத் தந்தையாக   வரித்துக்  கொண்டவர். எழுத்துக்கும்  வாழ்க்கைக்கும்    முரண்பாடுகள்  இல்லாது பார்த்துக் கொண்டவர்.   1914ஆம் வருடம்  பிறந்த  இவர்  தெலுங்கைத்  தாய் மொழியாகக்  கொண்டவர்.   அத்யயனம்  செய்து  புரோகிதத்தை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87597

தேவதச்சன் ஆவணப்படம்

தேவதச்சனைப்பற்றி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நண்பர் சரவணன் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டம்  https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_ojE_WJS6ic ஆவணப்படம் யூ டியூபில் பார்க்க

Permanent link to this article: https://www.jeyamohan.in/82210

இலைமேல் எழுத்து- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நண்பர் கெ.பி. வினோத் (உங்களுக்கு நண்பரென்றால் அவர் எனக்கும் நண்பரே!) கவிஞர் ஞானக்கூத்தனைக் குறித்து எடுத்த ஆவணப்படத்தை உங்கள் தளத்தில் பார்த்தேன். சமீபத்தில், அதுவும் தமிழில், சந்தேகமில்லாமல் நான் பார்த்த மிகச் சிறந்த ஆவணப்படங்களில் ஒன்று இது. ஆற்றொழுக்காக, எந்த விதமான அனாவசிய சலனங்களுமின்றி, எடுக்கப்படும் பொருளை மட்டுமே மையமாக வைத்து தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் தமிழில் அரிதினும் அரிது. நான் இதுவரை பார்த்த தமிழ் ஆவணப்படங்கள் அத்தனையுமே வெற்றுக் கூச்சலும், இரைச்சலும் கொண்டவை. ஜெயகாந்தனைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73696

இலைமேல் எழுத்தின் கலை

[கெ.பி.வினோத்] ஜெ கே.பி.வினோத் எடுத்திருக்கும் இலைமேல் எழுத்து ஞானக்கூத்தன் மீதான ஆவணப்படம் எடுத்தேன். 40 நிமிடங்கள் செறிவான அழகிய அனுபவமாக அமைந்தது. ஞானக்கூத்தனின் வீட்டுச்சூழல், அலுவலகச்சூழல், அவரது நண்பர்கள், வாழ்க்கை எல்லாமே மிகச்சீராக அமைக்கப்பட்டிருந்தன. அவரைப்பற்றிய இலக்கிய விமர்சனக்குறிப்புகளும் சிறப்பாக இருந்தன. 40 நிமிடத்தில் இத்தனையையும் சொல்ல சினிமாவால்தான் முடியும் கடைசியில அவரது கவிதை படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. அதில் ஒரு மனிதமுகம்கூட வராமல் பார்த்துக்கொண்டிருப்பதில்தான் இயக்குநரின் நுட்பமான அழகுணர்ச்சி உள்ளது. இரண்டு இடங்கள் மேலும் முக்கியமானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73607

இலைமேல் எழுத்து

ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட ‘இலைமேல் எழுத்து; என்ற ஆவணப்படம். சா கந்தசாமி, ந.முத்துசாமி, தேவதேவன், கமலஹாசன், மனுஷ்யபுத்திரன், அழகியசிங்கர், சாம்ராஜ் என பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்களுடன் ஞானக்கூத்தனின் உலகம் குறித்து ஓர் ஆய்வு எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் கே.பி.வினோத் இயக்கம். தயாரிப்பு விஜி பாலா.

Permanent link to this article: https://www.jeyamohan.in/73460

Older posts «