Category Archive: ஆளுமை

எஸ்.ரா. – கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்   அன்புள்ள ஜெயமோகன் சார், இன்று எழுத்தாளர் ராஜ் கவுதமன் அவர்களை பற்றிய ஆவணப்படத்தை பார்த்தபொழுது அதில் அவர் தனது ஊரை பார்த்துவிட்டு”எல்லாம் மண்ணுக்குள்ள போய்டிச்சு, அந்த ஊரே இல்ல”என கூறுகிறார்.ஆனால் மழை பெய்து ஊர் நன்றாக இருப்பதுபோல் தான் தோன்றுகிறது.நானும் அந்த ஊர்களில் இருபது வருடத்திற்கு முன் அலைந்திருக்கிறேன். ஆனால் குளம் அழிந்து கிடப்பதை பார்த்து “நாசமாபோச்சு” என கூறும்போதுதான் உண்மை என புரிந்தது. ஒரு எழுத்தாளனாக அவருக்கு கோபம் வந்திருக்கும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117452

கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது

தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள் தொல்லியலாளர் கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நாளின் இன்னொரு நிறைவு. அவர் பெயரை சற்று கழித்தே என்னால் காணமுடிந்தது. கடந்த சில ஆண்டுகளில் பத்ம விருதுகளில் பொதுவாக அதிகார அமைப்புகளுடன் விலக்கம் கொண்டிருக்கும் பலர் தேடிப்பிடித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கே.கே.முகம்மது. தன் தொல்லியல் பணிகளுக்கு அப்பால் ஆர்வங்களில்லாதவர். குன்றாத ஊக்கம் கொண்டவர். சென்ற ஜனவரி மாதம் நாகர்கோயிலுக்கு என் விருந்தினராக வந்திருந்த கே.கே.முகம்மது அவர்களுடன் செலவழித்த ஒரு நாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117652

தேசத்தின் இரு தலைவணங்குதல்கள்

இவ்வாண்டின் பத்ம விருதுகளில் இரண்டு விருதுகள் மனநிறைவளிப்பவை. நானாஜி தேஷ்முக் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரத ரத்னா  இந்த நூற்றாண்டில் இந்தியா உருவாக்கிய மாமனிதர்களில் ஒருவரை தேசம் வணங்குவதற்கு நிகரானது. அவரை நான் கல்லூரி மாணவனாக இருக்கும்போது சந்தித்து வணங்கும் பேறு பெற்றிருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக அவர் அன்று இருந்தார். நெருக்கடி நிலை காலகட்டத்தை எதிர்த்துப் போராடியவர். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அணுக்கமான நண்பர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குள் அன்றிருந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் அவர். 1980-இல்  தீவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117639

வீரப்பன், அன்புராஜ் – கடிதங்கள்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி செய்தி தாளில் வரும் ஒரு செய்தியில் உள்ள ஒரு வார்த்தையாகவே என் போன்றோர்களால் பார்க்கபடும் நபரின் வாழ்க்கை கலையின் வழியே மீண்டுள்ளது என்பது மிக மிக ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.  இதை படிக்கும் பொழுது தான் சிறைச்சாலை  நடைமுறைகளில் நடைபெறும் சீரமைப்பின் மீது ஒரு நம்பிக்கையும்,  இது தொடர வேண்டும் என்ற எண்ணமும் பலமாக எழுகிறது. தண்டனைக்காலத்திற்கு முன்பே விடுதலை சரி தான் என்ற கருத்தின் மீது ஆதரவு  இயல்பாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117450

பிரபஞ்சன் – மதிப்பீடுகள்

பிரபஞ்சனும் ஷாஜியும் http://vallinam.com.my/version2/?p=5854 ஜெ, பிரபஞ்சன் சிறுகதைகள் பற்றி நானும் உங்கள் மனப்பதிவையே கொண்டிருந்தேன். ஆனால் ஒரு அஞ்சலி கட்டுரையில் அது அவசியம் இல்லை எனும் ரகத்தில் சில மறுப்புகள் வந்தன. உங்கள் வாசிப்புக்கு. நன்றி. ம.நவீன் பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன் அன்பிற்குரிய நவீன் நல்ல கட்டுரை ஆனால் அசாதாரணக் கலைஞன் என்பது ஒரு பெரிய வார்த்தை அல்லவா? ஜெ அன்புள்ள ஜெ பிரபஞ்சன் பற்றிய குறிப்பும் ஷாஜியின் கட்டுரையும் ஆத்மார்த்தமாக அமைந்திருந்தன. நான் பிரபஞ்சன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117333

பிரபஞ்சனும் ஷாஜியும்

பிரபஞ்சனும் நானும் ஷாஜி இறந்தவர்களைப்பற்றி எழுதுவதற்கு தமிழகத்தில் ஒரு ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இறந்தவர் நல்லவர், இனியவர், சாதனையாளர், அரியவர் – அவ்வளவுதான். இதை எழுத தனக்கிருக்கும் தகுதி என்ன? எழுதுபவர் அவருக்கு எவ்வளவு அணுக்கமானவர், அவர் இவரை எவ்வளவு மதித்தார் என எழுதுவதுதான். சுந்தர ராமசாமி மறைந்தபின் வெளிவந்த ஏராளமான கட்டுரைகளைப் பற்றி அன்று ஒரு சுருக்கமான குறிப்பு எழுதினேன். அக்கட்டுரைகளை மூன்று அடிப்படைக் கருத்துக்களாக சுருக்கலாம். ‘சுரா இனியவர், நான் சென்றால் ரயில்நிலையம் வந்து வரவேற்பார். சுரா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117174

சந்தன வீரப்பன், அன்புராஜ் – கடிதம்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெ, அன்புராஜ் அவர்களின் பேட்டி மிக நெகிழ்ச்சியான அனுபவம். சந்தனக்கொள்ளையன் வீரப்பனுடன் இருந்திருக்கிறார். காட்டில் கொள்ளையனாக வாழ்ந்திருக்கிறார். எல்லா வகையான அனுபவங்களையும் அடைந்திருக்கிறார். அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்து ஒரு சமூகசேவையாளனாகவும் கலைஞனாகவும் வாழ்கிறார். எழுபதுகளில் இப்படி சம்பல் பகுதியில் கொள்ளையர்களாக வாழ்ந்த சிலர் வினோபாவே- ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியால் மனம்திருந்தி சிறைக்குச் சென்று மறுவாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே சிறையிலிருந்து வெளிவந்தபின் முற்றிலும் வேறுவகையான வாழ்க்கையையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116952

அ.மார்க்ஸ் பற்றி…

அன்புள்ள ஜெ , நீங்கள் “உரையாடும் காந்தி” நூலுக்கு  அ .மார்க்ஸ் அவர்களுக்கு  காணிக்கை அளித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன் .  ஏனெனில்  நான் உங்கள்  இருவரோட  வாசகன் .உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . நான் உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாக தான் இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன் .உங்களோட கட்டுரைகளை   இணையத்தளத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன் . சமீபத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். அ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116850

அன்புராஜ் – கடிதங்கள் – 2

[அன்புராஜ் பறவைகளின் குரலில் பறவைகளுடன் உரையாடுகிறார்] கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெயமோகன் அன்புராஜ் அவர்களின் பேட்டியை வாசித்தேன். ஒரு பெரிய நாவலை வாசித்ததுபோன்ற நிறைவு ஏற்பட்டது. எப்பேர்ப்பட்ட வாழ்க்கை. சாகசங்கள், போராட்டங்கள், மீட்பு. ஒருவர் இதன் வழியாக எவ்வளவோ துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் அவர் மீண்டு வந்துவிடுகிறார். தன்னை கண்டடைகிறர். ஒரு தவம்தான். சொல்லப்போனால் இந்தவகையான துன்பங்களே இல்லாமல் ஒருவாழ்க்கை இருந்தால் அதில் சொகுசு இருக்கும். ஆனால் கண்டடைதல் இருக்காது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116946

பிரபஞ்சன் : கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், ஒரு மனிதனுக்காக எனது வாழ்நாளில் ஒருவரை நினைவுகூர்ந்து எழுதும் முதல் அஞ்சலி. எனது துறையில் ஒரு பெரிய ஆளுமையிடம் எனது அகங்காரத்தினாலும், அறியாமையினாலும், சல்லிதனத்தினாலும் அவரின் ஏசி அறையில் திட்டுவாங்கி துரத்தபட்டு வெளியேறுகிறேன். மனது முழுதும் வீராப்பும் கடுப்புமாக வியர்க்க வியர்க்க முதல் மாடியில் இருந்து படிகளில் இறங்கி வரும்போது திடீர் என வெள்ளை வேட்டியும் ஜிப்பாவுமாக ஒரு தேவதூதனை போல் ஒருவர் என்னை பார்த்து சிரிக்கிறார். இடது கையில் வேட்டியின் ஓரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116598

Older posts «

» Newer posts