Category Archive: ஆய்வு

செயல்

ஒளியேற்றியவர்   அன்பின் ஆசிரியருக்கு,   நான் அரசில் பணி செய்ய முயன்றதற்கு காரணமே செயல் தான். எந்த பெரிய பொது செயலை செய்யவும் அதன் பயனை பெறவும் அரசின் பங்கு மிக முக்கிய ஒன்று. சிறிய செயல்களாக பலவற்றையும் தனி நபர்களோ சிறு குழுக்களோ செய்யலாம் ஆனால் அதை நிறுவனமயமாக்குவதென்பது அரசு மட்டுமே செய்ய முடியும். அதனாலேயே நான் இந்த பணியில்சேருவதற்கு முயன்றேன். இந்த பணியில் சேர்வதற்கு முயலும் அனைவரும் அப்படியே எண்ணுகிறார்கள் என்றே நம்புகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129530/

அபியின் அருவக் கவியுலகு-4

அபியின் அருவக் கவியுலகு-1 அபியின் அருவக் கவியுலகு-2 அபியின் அருவக் கவியுலகு-3 பகுதி நான்கு- மெத்திடும் மாலை   தமிழிலக்கியத்தில் அபியை முக்கியமானவராக ஆக்கும் இரண்டு சாதனைகள் தன் கவிவாழ்வின் பிற்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதை வரிசைகளான காலம், மாலை ஆகியவை. இவற்றில் காலம் ஒரு தொடக்க முயற்சியாக பல பகுதிகள் கொண்ட ஒரு நீள்கவிதைத் தன்மையுடன் உள்ளது. மாலை ஒரு வகையான நவீன காவியம்.   தத்துவம், அறிவியல், இலக்கியம் ஆகிய மூன்றிலும் எப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127843/

அபியின் அருவக் கவியுலகு-1

பகுதி ஒன்று: காலொடிந்த நிமிடம்   கவிதையைப் பொறுத்தவரை முடிவே சாத்தியமில்லாத வினாக்கள் சில உண்டு.இலக்கியத்தின் பிற வடிவங்களில் உள்ள கவித்துவத்திற்கும் கவிதை எனும் வடிவத்தில் உள்ள கவித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? கவிதையின் வடிவத்துக்கும் அதன் சாரத்துக்கும் இடையே என்ன உறவு?(அதாவது வடிவமே கவிதை என்பது எத்த னை தூரம் உண்மை?) கவிதைக்கும் கருத்தியலுக்கும் இடையேயான உறவு என்ன? கவிதைக்கும் இசைக்குமான பொருத்தம் எப்படிப்பட்டது? கவிதைக்கும் சமகாலத்து சிந்தனையோட்டங்களுக்கும் இடையே உள்ள உறவு என்ன? ஒரு கவிதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127805/

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா?” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116365/

இமையம் என்னும் சொல்

  அன்புள்ள ஜெ,   உங்கள் இமையத்தனிமை கட்டுரையில் இமையம் என்று சொல்லியிருந்தது தவறு, சரியான சொல் இமயம் என்பதுதான், உங்கள் ஆசானுக்குச் சொல் என்று என் அலுவலக நண்பர் சொல்லிக்கொண்டே இருந்தார். நையாண்டியாகவும் இமையம் என்ற சொல்லைவைத்துப் பேசினார்.  வயதானவர், நன்றாகத் தமிழ் தெரிந்தவர். இலக்கணத்திலே ஆர்வம் கொண்டவர். நான் பார்த்தபோது முன்பு பழைய கட்டுரையில் இமயச்சாரல் என்றுதான் பயன்படுத்தியிருந்தீர்கள். இப்போதுதான் இமையம் என எழுதியிருக்கிறீர்கள். எது சரியானது? தவறான சொல்லாட்சி என்றால் திருத்திக்கொள்வீர்களா?   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107512/

தொ.ப – ஒரு வினா

திரு ஜெமோ தொ.ப சமூக ஆய்வாளரோ வரலாற்றாய்வாளரோ அல்ல என்று அதிரடியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்களே அவர் எழுதிய அழகர்கோயில் குறித்த ஆய்வு ஒரு கிளாஸிக் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தக்குறிப்பிலும் அதைச் சொல்கிறீர்கள். ஒரு ஆய்வைச்செய்தவர் ஆய்வாளர் அல்லாமல் வேறு யார்? சரி, நீங்கள் என்ன ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள்? செந்தில் அன்புள்ள செந்தில், ஆய்வாளர்களுக்கு இரு அடிப்படைத்தகுதிகள் தேவை. ஒன்று தன்னுடைய துறைசார்ந்து மட்டுமே ஆய்வுக்கருத்துக்களைச் சொல்வது. தன் எல்லையை அறிந்து வகுத்துக்கொள்வதே ஒருவரை அறிஞராக ஆக்குகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88818/

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3

[மேலும்]  இம்முறையானது மிக விரைவிலேயே பெரும்பாய்ச்சலை உருவாக்கியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம். ஏற்கனவே உலகின் அனைத்துத் தகவல்தொகைகளையும் ஒருங்கிணைத்து ஒரே தகவல்வெளியாக ஆக்கியிருந்தனர். அத்தகவல்தொகையானது மூளைக்கு வெளியே கணிப்பொறிகளில் இருந்தாலும் எக்கணமும் எண்ணிய உடனே அதிலுள்ள அனைத்தையும் மூளைக்குள் நிரப்பிக் கொள்ள இயலும் என்ற நிலை உருவாயிற்று. அதாவது ஒரு தனி மூளையின் தகவல்திறனானது நடைமுறையில் உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கொண்டதாக மாறியது.மானுடமூளை என்பது கணிப்பொறிகள் மற்றும் புறஸீட்டா கதிர்களினாலான நரம்புவலையால் இணைக்கப்பட்ட ஒற்றைப்பெரும் மூளையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25092/

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2

[தொடர்ச்சி] மரபை எதிர்த்தும் உடைத்தும் திரித்தும் எழுதும் நவீனத்துவ எழுத்துக்கள் உருவானபோது அதுவரை வந்த கதைச்சரடுகள் கண்ணாடிப்பிம்பம் போல தலைகீழாக்கப்பட்டுத் தொடர்ந்தன. தி ஜானகிராமனின் மோகமுள்ளை[[1962] ஒருவகைத் தாய்தெய்வப்பாடல் என்றால், நான் சுந்தர ராமசாமியின் ‘ஜெஜெ சில குறிப்புகளை ‘ [1984]ஒருவகை வீரகதைப்பாடல் என்றால், நீங்கள் சற்று சிந்திக்காமலிருக்கமாட்டீர்கள். பலவகையான கதைவடிவங்கள் பரிசீலிக்கப்பட்ட காலம் இது. அப்பரிசீலனைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாவல் என்றார்கள் .சிறியவடிவங்களை சிறுகதை என்றார்கள். கதையற்ற வடிவங்களும் இவ்வகைமையில்சேர்க்கப்பட்டன. அவ்வாறாக புராதன கதைப்பாடல்கள் பழங்காலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25086/

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1

சான்றோர்களே அன்பர்களே, இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்றன. எல்லாக் காலத்திலும் இப்படித்தான் இருந்துள்ளது, இலக்கிய விவாதங்கள் அனைத்தும் இலக்கிய வடிவம் சார்ந்த விவாதங்களே. இலக்கியப்படைப்பின் உள்ளடக்கம் சார்ந்த விவாதங்கள் உண்மையில் இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட தளங்களுக்கு நகர்ந்துவிடுவதுதான் வழக்கம். ஆக, இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதென்றால் இலக்கிய வடிவத்தைப்பற்றியே பேசமுடியும். ஆகவேதான் உருவவியலாளர்கள் இலக்கியம் என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/51/