Category Archive: அழைப்பிதழ்

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா   அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிஸாரி மோகன் கங்கூலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மகாபாரதத்தின் தமிழாக்கத்தை ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் என மொழியாக்கம் செய்து வெளியிட்டு முழுமைசெய்திருக்கிறார். அவரை கௌரவிக்கும்பொருட்டும் முழுமகாபாரதம் இணையதளத்தை அறிமுகம் செய்யும்பொருட்டும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது   இடம் : இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம்,. அவினாசி சாலை, கோவை நாள் 1-2-2020 பொழுது மாலை 6 மணி பங்கெடுப்போர் இயகாகோ சுப்ரமணியம்,டி.பாலசுந்தரம், பி.ஏ.கிருஷ்ணன், ராஜகோபாலன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129560/

விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களுக்கு கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா இவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128300/

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா

எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால  நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார். நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு  நீடித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107783/

சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து

சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக.  மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!  

Permanent link to this article: https://www.jeyamohan.in/94288/

பல்லவ மல்லை – சொற்பொழிவு அழைப்பிதழ்

அன்பு ஜெமோ, தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி குறித்து அறிமுகம் தேவையில்லை. 2011ல் முதல்முறையாக பேச்சுக்கச்சேரி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் நிகழ்வாக ‘குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்னும் தலைப்பில் சங்க இலக்கியங்கள் குறித்த தங்களது சிறப்புரை இடம்பெற்றது. வெற்றிகரமாக ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறோம். இம்முறை ‘பல்லவ மல்லை’ என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரியாக, வரும் டிசம்பர் 24 & 25 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93594/

விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். விழாவில் வண்ணதாசன் பற்றிய நூல் ஒன்றும் அவரைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் என்னும் ஆவணப்படமும் வெளியிடப்படும் முந்தையநாள், 24-1-2016 சனிக்கிழமை காலைமுதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93437/

நிலம்பூத்து மலர்ந்த நாள்

  மலையாளத்தில் என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்த நாவல் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள். சங்ககாலப்பின்னணியில்  எழுதப்பட்ட முக்கியமான சிறுநாவல் இது. மலையாளத்தில் குறுகியகாலத்தில் எட்டு பதிப்புகளுக்குமேல் கண்ட புகழ்மிக்க படைப்பு தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. வெளியீட்டுவிழா திருவண்ணாமலையில் 16 ஆம் தேதி நிகழ்கிறது இடம் சாரோன் பள்ளி வளாகம், திருக்கோயிலூர் சாலை திருவண்ணாமலை நேரம் மாலை 6 மணி பங்கேற்பாளர்கள். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்காணம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88863/

“நம் நாயகம்”

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, சிறுகுழந்தைகள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த 63 சம்பவங்களின் அடிப்படையில் “நம் நாயகம்” என்ற நூலை, – ஆங்கிலத்தில் Bed time stories இருப்பது போல, தத்தமது குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இரவு நேரத்தில் கதை சொல்வது போல –  நாயகத்தின் வாழ்க்கையிலிருந்து நல்ல விசயங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு, வழக்கு மொழியிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83485/

இன்று விஷ்ணுபுரம் விருது விழா

இன்று முதல் விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது. இன்று காலைமுதல் ராஜஸ்தானி நிவாஸில் நண்பர்கள் கூடுகிறார்கள். சென்னை, பெங்களூர், திருச்சி பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். அனைவருக்கும் எளிய கூட்டான தங்குமிடமாக ராஜஸ்தானி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளது- பெண்களுக்கு தனி அறைகள் உண்டு. சனி ஞாயிறு இருநாட்களும் உணவும் ஏற்பாடாகியிருக்கிறது. தேவதச்சன் 26 ஆம் தேதியே வருவார். பல எழுத்தாள நண்பர்களும் கலைஞர்களும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடனான முறைமைப்படுத்தப்படாத கலந்துரையாடல்கள் நிகழும். எழுத்தாளர்களுடன் நேரடி உரையாடல்களுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82226/

நாளைமுதல் கோவையில் விழா

  டிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும். துறைவன் நாவல் வெளியீடு ஜோ டி குரூஸ் விருது வழங்குபவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் தேவதச்சன் ஆவணப்படம் வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன் தேவதச்சன் நூல் வெளியிடுபவர் யுவன் சந்திரசேகர் வாழ்த்துரை லட்சுமி மணிவண்ணன் வாழ்த்துரை ஜெயமோகன் ஏற்புரை தேவதச்சன்      

Permanent link to this article: https://www.jeyamohan.in/82101/

Older posts «