Category Archive: அறிவிப்பு

தருமபுரி இலக்கிய விழா

அன்புள்ள ஜெ   வணக்கம்   நலந்தானே ? ஒருமுறை நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் போதுதான் என்னளவில் இந்நிகழ்ச்சி முழுமை பெறும். அதற்காக எங்கள் தொடர் செயல்பாடுகளை உங்களுக்கு கவனப்படுத்தவே இதை அனுப்புகிறேன். நன்றி. தங்கமணி மூக்கனூர்ப்பட்டி E.Thangamani Teacher, GH School, Sandapatti, Morappur Via, Dharmapuri DT, 635305. Cell:9442448322 Mail: [email protected] Facebook: Thangamani Elasiappan Blog : teacherthangamani.blogspot.com

Permanent link to this article: https://www.jeyamohan.in/129577/

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

By வினவு  – February 24, 2020 67 அன்பார்ந்த தோழர்களே,                                                            24.02.2020 மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும், இவையன்றி வேறு சில பொறுப்புகளிலும் செயல்பட்டு வந்த நான், எல்லா பொறுப்புகளிலிருந்தும், குறிப்பாக, இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்து விலகுகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற காரணத்தினாலும், தமிழகமெங்குமுள்ள அமைப்புத் தோழர்களுக்கு எனது விலகலையும்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129968/

விடைபெறுகிறோம்- வினவு

  அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே நேற்று (24-02-2020) தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோரது விலகல் கடிதத்தை வெளியிட்டிருந்தோம். வினவு ஆசிரியர் குழு அவ்வாறு வெளியிட்டதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருட்டு அமைப்பின் தலைமை எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமானால் அதனை எதிர்கொள்கிறோம். வினவு தளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அமைப்பு சார்புள்ள தளங்கள், தோல்வியுறும் சூழலில், வினவு ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் இணையச் சூழலில் வினவு தளம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை இங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129967/

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020

வணக்கம், அரூ அறிவியல் சிறுகதைகள் 2019″ வம்சி பதிப்பக வெளியீடாகத் தற்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. தேர்வான பத்து கதைகளும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சுனில் கிருஷ்ணனின் முன்னுரைகளுடன் இடம்பெற்றுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்திய நண்பர் சரவணனுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்குத் தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். அரூவின் ஏப்ரல் இதழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129158/

நாளை மறுநாள் சென்னையில்..

    இந்த ஆண்டில் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. புத்தாண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இருந்தேன். தொடர்ந்து மதுரை, பாண்டிச்சேரி. இப்போது மீண்டும் சென்னையில். நாளை மறுநாள் [10-1-2020] சென்னையில் இருப்பேன். ஈரோடு பாண்டிச்சேரி தஞ்சை நண்பர்கள் வருகிறார்கள். அனைவரும் தங்குவதற்கு ஒரு பொதுவான இடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காலைமுதல் இலக்கிய அரங்கு ஒருவகையில் தொடங்கிவிடும். 10 மாலையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் பத்தாண்டு நிறைவு விழா. அது கோவையில் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. ஆனால் சென்னையில் நிகழும் நூல்வெளியீட்டை வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129160/

பாண்டிச்சேரியில்…

  ஜனவரி ஐந்தாம் தேதி பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு மறுபதிப்பு வெளியாகிறது. அந்நிகழ்வில் பங்கெடுக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம். பாண்டிச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி , இந்து ஆசிரியர் என்.ராம், நீதியரசர் தாவீது அன்னுச்சாமி, இமையம், கி.ராஜநாராயணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மு.முருகேஷ், அ.வெண்ணிலா ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். தொகுப்பாசிரியர் மு.ராஜேந்திரன் ஏற்புரை வழங்குகிறார் இடம் ஓட்டல் ஜெயராம் , காமராஜர் சாலை பாண்டிச்சேரி நாள் 5-1-2020 பொழுது மாலை ஐந்துமணி ***

Permanent link to this article: https://www.jeyamohan.in/129075/

மதுரை அயோத்திதாசர் நூல்வெளியீட்டு விழாவில்

மதுரையில் பேராசிரியர் டி.தர்மராஜ் எழுதிய அயோத்திதாசர் நூல்வெளியீடு வரும் ஜனவரி 4 அன்று நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். சு.வெங்கடேசன், சமஸ் ஆகியோர்  கலந்துகொள்கிறார்கள்.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/128925/

குரு நித்யா ஆய்வரங்கம், ஊட்டி- 2020 அறிவிப்பு

  ஊட்டியில் ஆண்டுதோறும் நிகழும் குரு நித்யா இலக்கிய முகாம் முடிவு செய்யப்பட்டுள்ளது   நாள் MAY 1, 2, 3 [வெள்ளி சனி ஞாயிறு]   இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருவது இந்த இலக்கிய முமாம். இலக்கியம் குறித்த அறிமுகம்- உரையாடல் என்பது இதன் நோக்கம். நட்பார்ந்த ஒரு சூழலில் இலக்கியத்தை பயில்வது இது. பெரிதும் இளம் வாசகர்களுக்கு என இலக்குகொள்ளப்பட்டது. இலக்கியவாசகர்கள் இதில் பங்குகொள்ளலாம்.   பங்கேற்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129987/

மலேசியா- இரு விருதுகள்

  மலேசியாவிலிருந்து நேற்று [25-12-2109] நள்ளிரவில் திருவனந்தபுரம் வந்திறங்கினோம். பின்னிரவு மூன்று மணிக்கு நாகர்கோயில். தூங்கி விழித்து இன்று [26-12-2109] மாலை கோவை விழாவிற்கு. கோவை விழாவில் என்னுடைய பங்கு என்பது அவ்வளவுதான். முழுக்கமுழுக்க நண்பர்களே நடத்தும் விழாவாக மாறிவிட்டிருக்கிறது. நான் கடைசி நேரத்தில் மற்ற விருந்தினர்களுடன் ஒருவராகச் சென்று சேர்கிறேன். என்ன நடக்கிறது என அதற்குமேலும் கண்டுகொள்வதில்லை.   சொல்லப்போனால் விழா முதல் ஆண்டுமுதலே இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதன் அமைப்பாளர்கள் தொழில்முறையாகவே நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள். இதைவிடப்பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128896/

விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்

  விஷ்ணுபுரம் விருதுவிழா, மற்றும் அரங்குகள் தொடங்கும்போது ஒவ்வொரு முறையும் அதன் முறைமைகள் நெறிகள் குறித்து எழுதவேண்டியிருக்கிறது. இம்முறையும்   முறைமையும் நெறிகளும் இல்லாத அரங்கு என ஒன்று இல்லை, அப்படியொன்று உலகில் எங்கும் நிகழ்வதுமில்லை. ஆனால் தமிழகத்தில் முதிரா இலக்கியவாதிகள் நடுவே இலக்கியம் முறைமையும் நெறிகளும் இன்றியே நிகழமுடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அது நம் மதுக்கடை உளறல்களில் இருந்து உருவானது. கூடுதல்குடித்தவர் கூடுதலாக உளறுவது என்பதே அங்குள்ள நெறி.   தமிழகத்தில் அவ்வாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128551/

Older posts «

» Newer posts