Category Archive: அறிவிப்பு

சென்னை கட்டண உரை இன்று

சென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள் இன்று மாலை சென்னையில் கட்டண உரை நிகழ்கிறது. அதிகபட்ச இலக்கு என வகுக்கப்பட்ட 300 பேர் பங்கெடுக்கிறார்கள். ஓர் அதிரடியாக நெல்லைபோல ஹவுஸ்ஃபுல் அறிவித்துவிடலாமா என நண்பர்கள் கேட்டார்கள். அதுவும் ஒரு சீண்டல்தானே? ஆனால் அதைவிட கொஞ்சம் கூடுதல் இருக்கை போடலாம் என்று நான் சொன்னேன். அரங்குக்கே வரும் சிலர் இருக்கக்கூடும். சில சிறப்பு அழைப்பாளர்களும் உண்டு. இன்று நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அருண்மொழியும் உடனிருக்கிறாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118816

சென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள்

சென்னை கட்டண உரையை திட்டமிட்டபோது அகரமுதல்வன் சொன்னார் ”எத்தனை குறைந்தபட்ச வருகை இருந்தால் சரி என நினைப்பீர்கள்?” நான்  “200 இருக்கைகள் நிறைந்திருந்தால்” என்றேன். அகரன் “முந்நூறு என் இலக்கு… முந்நூறுபேர் வசதியாக அமரும் கூடம் பார்க்கப்போகிறேன்” என்றார். பொதுவாக இந்தவகையான அறிவிப்புகளில் ஒரு சவால்தான் உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஓர் இலக்கிய- பண்பாட்டு உரையை, எந்த விதமான கேளிக்கையம்சங்களும் இல்லாத நிகழ்வை பணம் கொடுத்துக் கேட்கவும் இங்கே ஆளிருக்கிறார்கள் என்னும் அறைகூவல். ஆனால் அறிவிப்பு முடிந்ததுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118659

புதியவாசகர் சந்திப்பு நாமக்கல்

  நண்பர்களே, இந்த வருடம் தொடர்ச்சியான  நான்காம் ஆண்டாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்   சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பு  ஈரோட்டில் நடைபெற்றது.  அதில் சிலருக்கு இடமளிக்க இயலவில்லை, ஆகவே இந்த இரண்டாவது சந்திப்பு.   இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார்.  இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118461

சென்னை கட்டண உரை – நுழைவுச்சீட்டு வெளியீடு

சென்னையில் ஒரு கட்டண உரை அன்பின் ஜெ!   கட்டண உரை நிகழ்வின் முதல் நுழைவுச்சீட்டினை டிஸ்கவரி பேலச் வேடியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்ட போது. கிடைக்குமிடங்கள் டிஸ்கவரி புக் பலஸ்  பனுவல் புத்தக நிலையம்   தொடர்புக்கு 9962371849 நுழைவுச்சீட்டினை இணையத்தளம் வழியாகவும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். டிஸ்கவரி புத்தக நிலையம் மற்றும் பனுவல் புத்தக நிலையத்திலும் பணம் செலுத்தி பெறலாம். https://www.discoverybookpalace.com/-0

Permanent link to this article: https://www.jeyamohan.in/118385

உரையாடும் காந்தி – ஓர் உரையாடல் – வேலூர்

அன்புள்ள ஜெ, வணக்கம் நான் க. விக்னேஷ்வரன் வாசகசாலை அடிப்படை உறுப்பினர்களில் ஒருவன். கடந்த ஒரு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் வாசகசாலை மற்றும் வேலூர் மாவட்ட தந்தை பெரியார் நூலகம் இணைந்து இலக்கிய கூட்டங்களை வேலூரில் நடந்துகிறோம். இந்த முறை உங்களின் “உரையாடும் காந்தி” என்ற கட்டுரைத் தொகுப்பை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம். (அழைப்பிதழை கிழே இணைந்துள்ளேன்.) என்னளவில் “உரையாடும் காந்தி” தொகுப்பு இன்றைய சமூக சூழ்நிலையில் அதுவும் காந்தி போன்ற ஆளுமையை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118406

குளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு – இன்று

  2018 ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது பெற்றுள்ள குளச்சல் மு யூசுப்  அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.நான் யூசுப் அவர்களின் மொழியாக்கத் திறன் குறித்துப் பேசுகிறேன் நாள் பிப்ரவரி 23 அன்று காலை 930 இடம் நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா, செட்டிகுளம். அனைவரும் வருக

Permanent link to this article: https://www.jeyamohan.in/117992

வெண்முரசு உரையாடல் அரங்கு, சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், பிப்ரவரி மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது கடந்த மூன்று மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக  ஜா. ராஜகோபாலன் உரையாடினார். அவ்வுரையாடல்கள்  மிகச்செறிவானதாகவும் சொல்வளர்காடு நாவலை அணுக ஒரு வழிகாட்டியாகவும் இருந்தன. ஆனால் அனைத்து குருகுலங்கள் பற்றியும் இம்மூன்று அமர்வில் உரையாட இயலாததால் நேரம் கருதி உரையாடியவரை நிறுத்திக்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக ஜா.ராஜகோபலன்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118410

நாகர்கோயில் புத்தகக் கண்காட்சி

  நாகர்கோயிலில் சென்ற பிப்ரவரி 15 முதல் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பாதலால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, நற்றிணை,தமிழினி போன்ற இலக்கியப் பதிப்பகங்கள் அனைத்தும் பங்கெடுத்திருக்கின்றன இன்று [ 20 ஆம் தேதி மாலை ] நானும் நாஞ்சில் நாடனும் பேசுகிறோம். நான் இன்றைய இலக்கிய ஆக்கங்கள் என்னும் பொதுத்தலைப்பில் பேசுகிறேன்  Kind

Permanent link to this article: https://www.jeyamohan.in/118375

புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு

வழக்கம்போல புதியவாசகர்கள் சந்திப்புக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். ஈரோட்டில் இருபதுபேருக்கே இடமிருக்கும். ஆகவே இன்னொரு புதியவாசகர் சந்திப்பை நிகழ்த்தலாமென்று திட்டமிட்டிருக்கிறோம். ஈரோடு வாசகர் சந்திப்புக்கு இருபதுபேருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அருகமைவு, அகவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தெரிவு நிகழ்த்தப்பட்டுள்ளது. பிறருக்கு அடுத்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டபின் கடிதம் அனுப்பப்படும். மொத்த ஈரோட்டுக் கும்பலும் கும்பமேளாவுக்கும் கேரளத்தில் கதகளி நிகழ்வுக்குமாக கிளம்பிச் சென்று மீண்டமையால் ஏற்பாடுகள் பிந்திவிட்டன. மன்னிக்கவும். ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/117920

ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி

அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி   அரூவின் இரண்டாவது இதழில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சரவணன் விவேகானந்தன் செய்த நேர்காணல் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒர் அறிவியல்புனைகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது இதன்படி இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படம் சிறந்த மூன்று கதைகளுக்கு தலா ரூ. 10000[பத்தாயிரம்] பரிசு. அரூவின் ஏப்ரல் இதழில் வெற்றிபெறும் கதையும் தேர்ந்தெடுக்கப்படும் சில கதைகளும் வெளியாகும்.   போட்டியின் விதிமுறைகள் 1. அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும் 2. அந்தப்பேட்டியில் ஜெயமோகன் பல அறிவியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117483

Older posts «

» Newer posts