Category Archive: அறிவிப்பு

நிறைவு

இந்தக் கதைகளை எழுதத் தொடங்கியபோது எந்த நோக்கமும் இல்லை. முன்னரே சிறுகதைக்கான உந்துதல் இருந்தது . யாதேவி வரிசை சிறுகதைகளை எழுத தொடங்கியிருந்தேன். நான் சிறுகதைகளை எழுதுவது வெண்முரசின் நடையில் இருந்து வெளியே வருவதற்காகத்தான். என் இயல்பான நடையையும் மனநிலையையும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு. வெண்முரசின் நடை தூயதமிழ், செவ்வியல் பார்வை , கனவுத்தன்மை கொண்டது. அன்றாடத்தை ஒட்டிய நடையையும் யதார்த்தம் சார்ந்த பார்வையையும் புறவயத்தன்மையையும் தக்கவைத்துக்கொள்ள எப்போதுமே முயல்வேன். வெண்முரசு எழுதுவதற்கு நடுவே முப்பதுக்கும் மேல் சிறுகதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131731/

சத்யானந்த யோக மையம்

நண்பர் சௌந்தர் நடத்திவரும் சத்யானந்த யோகமையம் சென்னையில் எங்கள் இலக்கியக் கூடுகை நிகழும் இடமும்கூட. சென்ற பல ஆண்டுகளாகவே வெவ்வேறு நண்பர்கள் அவர்களின் உச்சகட்ட உள அழுத்தம் சோர்வுகளில் இருந்து சௌந்தரின் மரபார்ந்த, முறையான யோகப் பயிற்சியின் வழியாக வெளிவந்திருக்கிறார்கள். இப்போது இணையத்தில் பயிற்சியை தொடங்கியிருக்கிறார்   ஜெ http://www.satyamtraditionalyoga.com/ https://barnasalai.blogspot.com/ இடம்: Sathyam Traditional  Yoga -Chennai 11/15, South Perumal Koil Lane Near Murugan temple Vadapalani       – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130840/

மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?

அன்பு ஜெ.. கோவையில் தங்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இலக்கியத்துக்கு என்று பிரத்யேக சேனல் ஆரம்பிக்க போகிறோம் உங்களது ஆதரவு வேண்டும் என்றேன். தொடக்க விழாவுக்கு உங்களை அழைத்தேன், தாங்களும் வருவதாக சொன்னீர்கள். நன்றி. தற்போது உள்ள சூழ்நிலையில் விழா எதுவும் எடுக்கவில்லை, நேரடியாக சமூக வளைதளங்கள் மூலம் YouTube ல்  Shruti TV Literature  சேனல் தொடங்கப்பட்டு விட்டது,   சேனல் சுட்டி : https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw   இந்த சேனலில் தாங்கள் சென்னையில் ஆற்றிய உரையினை பதிவேற்றியுள்ளோன். ஆகுதி வழங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130722/

அரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்

  அன்புள்ள ஜெமோ, அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 அளித்த சில மகிழ்ச்சியான எண்ணங்களைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 66-ஐத் தொட வாய்ப்பில்லை என்கிற எங்களது அனுமானத்தைப் பொய்த்து, இம்முறை வந்த மொத்த கதைகள் – 98! இலக்கியச் செயல்பாட்டில் எண்ணிக்கை என்றுமே முக்கியமில்லைதான். ஆனால், நீங்கள் கடந்த முறை சொன்னது போல ‘அறிவியல் புனைவு’ என்கிற குறுகிய சட்டகத்துக்குள் இத்தனை பேர் ஆர்வமுடன் எழுதுவது வியப்பளிக்கிறது. பலரிடம் சொல்ல நல்ல கதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130566/

குக்கூ- உரையாடல் அறிவிப்பு

குக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள் தர்க்கவயப்பட்ட இலக்கியச்சூழலிலிருந்து தனித்துவிலகி, அழகியல் நேர்மறையோடு உள்ளடக்கப் பொருண்மையும் நிறைகலந்து வெளிப்படுபவை எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள். இந்திய தேசத்தின் தொன்மானுட மனங்களுக்குள் உள்ளுறைகிற ஞானவிசையை, கலாச்சார மரபின் தரிசனமாகக் கண்டடைந்து எழுத்துப்படுத்தியவர். உண்மைசார்ந்த உரையாடலின்மீது தீராத நம்பிக்கையுற்றிருந்த சுந்தர ராமசாமி அவர்களின் இலக்கிய குருமரபிலிருந்து எழுந்துகிளம்பி, அறிவுண்மை சார்ந்த எல்லா தளங்களிலும் இயங்கும் சமகால இளைஞர்களோடு தொடர்ந்து உரையாடி வருபவர். இலக்கியத்தின்வழி இருதயங்களின் மென்னுணர்வில் அகமலர்தலையும் உளவெழுச்சியையும் உருவாக்கி, பின்தொடரும் மனிதர்கள் தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130539/

வெண்முரசு ‘செந்நா வேங்கை’- முன்பதிவு

மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்குருதி விழுகிறது. எரியில் விழும் முதல்துளி நெய்போல.   போரெழுகையின் ஓவியம் இந்நாவல். போர் என்பது புறத்தே நடப்பது மட்டுமல்ல. குருக்ஷேத்திரம் எவ்வகையிலோ எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து உயிர்களிலும். அனைத்து உடல்களிலும். அனைத்து உள்ளங்களிலும். இது அந்த முடிவிலாச் சமரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129724/

ஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது

கேந்திர சாகித்ய அக்காதமியின் 2019 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குறூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்னும் நாவலின் மொழியாக்கத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.   ஜெயஸ்ரீ திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். எழுத்தாளர் பவா செல்லத்துரையின் துணைவி கே.வி.ஷைலஜாவின் அக்கா. தொடர்ந்து மலையாளத்திலிருந்து மொழியாக்கங்களைச் செய்து வருகிறார்   ஜெயஸ்ரீக்கு வாழ்த்துக்கள் காடு பூத்த தமிழ்நிலம் கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது ஜெயஸ்ரீயின் வீடு  

Permanent link to this article: https://www.jeyamohan.in/129978/

ஈரோடு சந்திப்பு பற்றி

  ஈரோடு சந்திப்பு பற்றி சில ஐயங்கள் வந்தன. இது தொடர்ந்து நிகழ்வதனால் எல்லாருக்கும் இது எப்படி நிகழும் என தெரியும் என்று நினைத்தேன். அது பிழை என தெரிகிறது   1. நான் இரண்டுநாட்களும் புதிய வாசகர்களுடன் இருப்பேன், அவர்களுடன் தங்குவேன், உரையாடுவேன்   2. பெண்களுக்கு தனியாக தங்க இடம் ஒதுக்கப்படும்   மார்ச் 7,8 [சனி ஞாயிறு] இரண்டு நாட்கள் சந்திப்பு நிகழ்கிறது.   முன்னர் புதியவாசகர்களாக வந்தவர்கள் பலர் இன்று எழுத்தாளர்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129823/

மகாபாரத கருத்தரங்கு

காலடி சங்கரா பல்கலைக் கழகம் ஒருங்கிணைக்கும் ‘மகாபாரதம்- மரபிலும் இலக்கியத்திலும்’ என்னும் கருத்தரங்கு வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி நிகழ்கிறது. அதில் தொடக்கவுரை நிகழ்த்தவிருக்கிறேன். நான் பங்குகொள்ளும் எட்டாவது மகாபாரதக் கருத்தரங்கு இது என நினைக்கிறேன். இன்றும் மகாபாரதம் ஒர் அரசியல்பிரதியாகவே வாசிக்கப்படுகிறது, குறைவாகவே தொன்மப்பிரதியாக என்பது என் உளப்பதிவு. வெண்முரசு முடிந்ததும் முழுமையாகவே மகாபாரதத்தில் இருந்து வெளியேறிவிடவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருக்கிறேன்   MAHABHARATA IN LITERATURE AND TRADITION    —    13, 14 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129742/

தும்பி,தன்னறம் – வேண்டுகோள்

  மனதிலுதித்த எண்ணத்தின் போக்கில் செயல்பட்டுநிற்கும் மனிதர்களுக்கு காலத்தாலான புறக்கணிப்புகளும் நிராகரிப்புகளும் ஒவ்வொரு படிநிலையாக நிகழ்கிறது. அதன் பெருவலி பொறுத்து முன்னைவிட முனைந்து இன்னும் செயல்வேகம் கொள்வதென்பது, சுற்றியிருக்கும் வாழ்வுமனிதர்களின் நம்பிக்கையளிப்பைச் சார்ந்திருக்கிறது. இடர்கடக்க உதவுகிற இப்பெருஞ்செய்கை, எத்தனையோ செயல்தேக்கங்களை தாண்டிவிடுகிற உளப்பிடிப்பை நம்மையறியாமல் நல்கிவிடுகிறது. தமிழ் பதிப்பகச்சூழலில், அத்தகைய பொதுநம்பிக்கையினை தன்னறம் நூல்வெளியும் தும்பியும் அடைந்திருப்பது, வாழ்வுக்கான நன்றிக்கடனாகிறது.   தன்னறத்தின் ‘மீண்டெழ’ பதிவை மனமேற்று, கடந்த மூன்றுநாட்களாக, வெவ்வேறு ஊர்களிலிருந்தும் நண்பர்கள் தொகையுதவி அளித்திருந்தார்கள்.முதற்கட்டமாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129541/

Older posts «