Category Archive: அரசியல்

யோகி- கடிதங்கள்

அன்பிற்கினிய ஜெ, வணக்கம்! நலமா? நீங்கள் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை பற்றி பேசியிருப்பது மறுக்க முடியாதது.ஜனநாயக விழுமியத்தில் ஒரு மடாதிபதி அதுவும் பழங்கால பண்ணையாரிய மரபில் ஊறிய  பகுதியில் இருந்து அவர் உருவாகி வந்தது எதை நோக்கி உ.பியை கொண்டு செல்லும் என்று வருத்தப்பட்டிருந்தீர்கள்.உ.பியில் இதற்கு முன் ஜனநாயக விழுமியங்களின் எச்சங்களா ஆட்சி செய்தார்கள்? யாதவ் குண்டாராஜ்தானே நடந்தது? அரசியல்வாதிகளின் எருமை மாட்டை காணவில்லை என்றால் காவல்துறை ஆய்வாளரே விரட்டி பிடிக்க வேண்டும் என்பதுதானே நிலை. சட்டையும்/பேண்ட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97039

யோகி

அன்புள்ள ஜெமோ இருகட்டுரைகளில் சமகால அரசியல் பேசியிருக்கிறீர்கள். ஒன்று, மகாபாரதம் பற்றிய அரசியல். இரண்டு, முஸ்லீம்களிடையே வளர்ந்துவரும் மதஅடிப்படைவாதம். அந்த தளத்தில் இந்த வினாவுக்கு தவிர்க்காமல் பதில் சொல்வீர்கள் என நினைக்கிறேன். உபியில் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் செந்தில்குமார் *** அன்புள்ள செந்தில்குமார், பெரும்பாலான கருத்துக்களை நான் என் சொந்த அனுபவத்தில் சொந்த சிந்தனையில் இருந்தே சொல்கிறேன். அவை தவறாக இருக்கலாம், நான் நம்புவதால் அதைச் சொல்கிறேன், அவ்வளவுதான். செய்தித்தாள்களை நம்பிக் கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96973

காஷ்மீரும் ஊடகங்களும்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,   வணக்கம்.   ஏற்கனவே ஒரு முறை – எனது கேள்விக்கு பதிலாக – நீங்கள் காஷ்மீரில்  நமது ராணுவத்திற்கும்,காவல்துறைக்கும் எதிராக நடக்கும் கல்லெறிதல் சம்பவங்களின் பின்னணி பற்றி  விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.நேற்று அதே போன்று ஒரு சம்பவம் நீண்ட நாள்களுக்கு பிறகு நடந்துள்ளது.ஆனால் இதில் மேலும்  ‘முன்னேற்றமாக’ (?!) இந்த தடவை ஒரு இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதியை கொல்வதற்காக நமது ராணுவமும் ,காவல்துறையினரும் சுற்றி சூழ்ந்தபோது அவனை காப்பாற்றி தப்ப வைப்பதற்காக ஒரு இளைஞர் கும்பல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96965

வெறுப்புடன் உரையாடுதல்

  அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2760

புரட்சி வரவேண்டும்!

  ஓர் எழுத்தாளனாக இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அரசியல் குறித்த எந்தப் பேச்சையும் அவர்கள் “ஒரு புரட்சி வரணும் சார்!” என்று தொடங்குவதைப்பார்க்கிறேன். புரட்சி எவ்விதம் எங்கு நிகழவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் புரட்சி வந்தே தீரவேண்டும் என்பதில் மாற்றமில்லை. நானும் அவ்வாறே இருந்தவன் என்பதால் எனக்கு அதில் வியப்போ எதிர்ப்போ இல்லை. ஆனால் என் இளமையில் புரட்சி போன்ற  உருவகங்களை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள நான் முயன்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87228

மபொசி,காமராஜ், ராஜாஜி..

அன்புள்ள ஜெ, இந்தக்கருத்தை உங்கள் மீதான மாற்றுக்கருத்தாக முன்வைக்கவில்லை. எனக்கு தமிழக அரசியலில் அந்த அளவுக்கு பழக்கம் இல்லை. நான் பிறந்ததே எண்பத்திரண்டில்தான். ஆனால் வழக்கமாக கேள்விப் படும் சில விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். திராவிட இயக்கத்தவரின் மேடைகளில் சொல்லப் படும் கருத்துக்கள்தான். அதாவது தமிழகத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் ராஜாஜியும் காமராஜும் தோல்வியடைந்து விட்டார்கள். காமராஜ் கவனக் குறைவாக இருந்த காரணத்தால்தான் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகள் பறிபோயின. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. ராஜாஜி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11070

ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்

    ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும் 1.கென்ய மலர் மன்றம் தன் சுற்றறிக்கையில், ப்ரெக்ஸிட் முடிவினால் கென்ய கொய்மலர் ஏற்றுமதி குறிப்பிட்ட அளவு சரிவடையக்கூடும் என்று அறிவித்துள்ளது. 2.உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், மலரும், மலர் சார்ந்த பொருட்களிலும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் யூரோக்கள் சந்தை பங்கு கொண்டதும், நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையுமாகும். அதன், 2015-ன் நெதர்லாந்திலிருந்து கொய்மலர் மற்றும் உள்ளரங்க செடிகள் இறக்குமதி மதிப்பு 900 மில்லியன் யூரோக்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88875

கேரள வன்முறை

http://www.bbc.com/news/world-asia-india-36299827 அன்புள்ள ஜே எம் மேலே உள்ள இணைய முகவரியில் உள்ள கட்டுரையை வாசித்தேன்.  கல்வி அறிவு மேம்பட்ட கேரளத்தில் இது என்றால் நம்ப முடியவில்லைதான். காரணம் என்ன?  வன்முறையை செயற் களமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கமா?  இல்லை, இந்தியா முழுதும் சீழ்ப் படுத்திக் கொண்டு இருக்கும் சுயநலமும் அரசியல் சீர் கேடும் தானா ? அன்புடன் சிவா *** அன்புள்ள சிவா வழக்கம்போல இதையும் முன்னரே எழுதிவிட்டேன் வடகேரள வன்முறை வடகேரள வன்முறை ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87903

அரசியல் கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன், உங்களது ‘ஏஷியா நெட்’ பேட்டியில் இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். முதலாவது ‘பாடி லாங்குவேஜ் (body language)’. மலையாளிகளுக்கென்று தனித்துவமான உடல் மொழி இருக்கிறது. சக மலையாளிகளிடம் சம்சாரிக்கும் போது அந்த உடல்மொழி அவர்களிடம் தூக்கலாக இருப்பதனைக் கவனித்திருக்கிறேன். உங்களிடம் அந்த உடல்மொழி மிஸ்ஸிங். இரண்டாவது உச்சரிப்பு. உங்களின் மலையாள உச்சரிப்பு ஏறக்குறைய தமிழைப் போல இருந்ததாக என்னுடைய தனிப்பட்ட எண்ணம். மூக்கின் உபயோகம் குறைந்தது தமிழில் புகுந்து விளையாடி கஸரத் எடுத்ததன் காரணமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87969

இன்றைய அரசியல்

. அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே? பொதுவாகவே உங்களைத் தொடர்பு கொள்வதென்றால் சற்று தயங்குவேன். உங்களை தொந்தரவு செய்கிறோமோ என்ற தயக்கம். ஆனால் இந்த முறை ஆர்வம் தாங்காமல் இதை எழுதுகிறேன். சமீபத்திய தமிழக தேர்தல் முடிவுகளை கவனித்திருப்பீர்கள். பெருநகர் சார்ந்த பலரும் இந்த எதிர்திசை மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த முடிவு, எதிர்பாராததாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது. நிர்வாக மெத்தனத்திற்கும் அராஜகத்திற்கும் பரவலான ஊழலிற்கும் மக்கள் மீண்டும் எப்படி ஆதரவளித்தார்கள் என்று தெரியவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87956

Older posts «

» Newer posts