Category Archive: அரசியல்

அ.வரதராஜன்

  அன்புள்ள ஜெ   ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒரு உதவியைச் செய்திருக்கிறது. யார் அந்த அ.வரதராஜன் என்று தேடச்செய்திருக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்   ஆர்.எஸ்.பாரதி பேசியதை ‘பெரியார் வழியில் இருந்து’ பிறழ்ந்தவர் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் அம்பேத்கர் உள்ளிட்ட அத்தனைபேரையும் பற்றி அலட்சியமாக, ஆணவமாகத்தான் பேசியிருக்கிறார். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, தான்தான் எல்லாம் சொல்லிக்கொடுத்தேன் என்ற வகையிலே பேசியிருக்கிறார்   தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம் தியோசபிக்கல் சொசைட்டியால் முன்னெடுக்கப்பட்டது. கிறித்தவ கல்விநிறுவனங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129924/

திராவிட இயக்கம், தலித்தியம்

  அன்புள்ள ஜெ,   சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி என்பவர் பேசும்போது தலித்துக்களின் மேம்பாடு என்பது பெரியாரும் கருணாநிதியும் போட்ட பிச்சை என்று பேசியிருந்தா. தொடர்ச்சியாக தலித் இயக்கங்களை திராவிட இயக்கம் அணுகும் முறையில் இருக்கும் இடைநிலைச் சாதி மேட்டிமைப் பார்வையை நீங்கள் சுட்டிக் காட்டிவருகிறீர்கள். அந்த பேச்சு அதை பொட்டில் அறைந்ததுபோல காட்டியது.   எஸ்.அறிவழகன் அன்புள்ள அறிவழகன்,   ஆர்.எஸ்.பாரதியின் உரை ஓர் உள்ளரங்க உரை. அவர் சரியான நிலையிலும் இல்லை. ஆகவே அது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129850/

ஊழும் பொறியியலும்

பார்வதிபுரம் பாலம்   பார்வதிபுரம், தொடுவட்டி மேம்பாலங்களுக்குப்பின் இங்கே வாகனநெரிசல் குறைந்திருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். கேட்கப்பட்டவர் யதார்த்தவாதி. “மேம்பாலங்களுக்கு மேலே நெரிசல் இல்லேண்ணுதான் சொல்லணும்” என்றார். என்ன ஆச்சரியம் என்றால் கேட்டவரும் யதார்த்தவாதிதான். “அப்டியா… கடுப்பத்திலே ஒரு சாயா” என்று அவரும் நிறைவடைந்துவிட்டார். எனக்குத்தான் ஒரு குழப்பம். நான்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ?   பார்வதிபுரம் உட்பட சமீபத்தைய மேம்பாலங்களின் பொறியியல் நவீனமானது, ஆகவே புரிந்துகொள்ளச் சிக்கலானது, கடந்துபோவதிலும் அந்தச் சிக்கல் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. உதாரணமாக பார்வதிபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129634/

அறிவெதிர்ப்பும் ஆணவமும்

பேசிக்கொண்டிருக்கும்போதே துப்பாக்கியுடன் வந்தார் – விகடன் ஜெ சென்ற ஆண்டு ஜூன் மாதம் நீங்கள் தாக்கப்பட்டபோது பாலபாரதி என்ற மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ எழுதியிருந்த ஒரு செய்தி அப்போது முகநூலில் பிரபலமாகச் சுற்றியது நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதை இணைத்திருக்கிறேன். அதில் அவர் அகிம்சையின் உச்சத்தில் நின்று, நீதிநெறியின் உருவமாகவே தோற்றமளித்து நீங்கள் எப்படியெல்லாம் சட்டபூர்வமாக அணுகியிருக்கவேண்டும், என்னென்ன செய்திருக்கக் கூடாது என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருந்தார். அப்போதே அந்த அரசியல்வாதியின் பந்தாவான ஆடம்பரக் கார்ப் பயணங்கள்,  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129519/

குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…

குடிமக்கள் கணக்கெடுப்பு குடிமக்கள் கணக்கெடுப்பு குறித்த முதன்மையான ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன். அதைப்பற்றிய எல்லா முக்கியமான தரப்புகளையும். மிகமிகக் குறைவாகவே நடுநிலையான, உண்மையைச் சொல்லும் பதிவுகளைக் கண்டேன். பெரும்பாலானவை தங்கள் அரசியலுக்கேற்ப எல்லாவற்றையும் வளைத்துக்கொள்பவை. அதற்கேற்ற தரவுகளை சமைப்பவை. மிகையுணர்ச்சிக் கொந்தளிப்புகள்; இன்றைய சூழலில் ஒருவன் உண்மை நிலையை உணர முதலில் தன்னை எளியகுடிமகனாக நிறுத்தி தன் புரிதலை நம்பி, நீதியுணர்வைச் சார்ந்து பேசவேண்டியிருக்கிறது. இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவிலிருந்து தொடங்கவேண்டும். பெரிய அளவில் நிதியளிக்கும் தொழிலதிபர்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128701/

குடிமக்கள் கணக்கெடுப்பு

  இப்போது குடிமக்கள் கணக்கெடுப்பு, குடியுரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பலரும் கேட்கிறார்கள். இச்சிக்கலின் முழுவடிவை உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அரசியல் நோக்கங்களுக்கு உட்பட திரித்து, மிகையாக்கி, கூறப்படும் கூற்றுக்களே நீண்ட கட்டுரைகளாகக் கிடைக்கின்றன. இருதரப்பிலும் இவற்றுக்கு அப்பாற்பட்டு மெய்யாகவே இதை புரிந்துகொள்ள முடியவில்லை. என்னைப்போலத்தான் இன்று பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் தெளிவாகவே ஒன்று புரிகிறது, இஸ்லாமியர்களிடம் உருவாகியிருக்கும் அச்சமும், ஆவேசமும். அது இப்பிரச்சினையில் இருந்து தொடங்குவதல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128765/

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்

பிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை ஆசிரியருக்கு,     உங்களது சமீபத்திய சினிமா பேட்டியில் தமிழகத்தில் பொது வெளியில் ஒரு புத்தக வாசகனுக்கு மதிப்பில்லை, வாசிக்கும் ஒருவனிடம் அவன் குடும்பமும் சரி சுற்று வட்டமும் சரி அதை கைவிட அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள், நாம் ரகசியமாக தான் வாசிக்க வேண்டும் என்று கூறினீர்கள்.     அப் பேட்டியின் பின்னூட்டத்தில் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.     நான் உங்களது கருத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128025/

மும்மொழிக்கொள்கை -இரண்டாம் மறுப்பு

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு   அன்புள்ள ஜெ,   புதிய கல்விக் கொள்கை மீதான விவாதங்களின் சூடு ஆறிய இந்த நேரத்தில் சாய் மகேஷ் அவர்களின் எதிர்வினை https://www.jeyamohan.in/127827#.XdzE_ugzZPY குறித்து சிலவற்றைச் சொல்லலாமென நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதால் எனக்கும் கற்க எதாவது கிடைக்கிறது.   புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிகழப்போவதாக அறிந்தேன். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற அரசின் முடிவுகள் குறித்த விவாதங்கள் இந்த நேரத்தில் மீண்டும் இத்தளத்தில் முன்னுக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127908/

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு

மும்மொழி கற்றல் மும்மொழி- கடிதம் மும்மொழிகற்றல்- மறுப்பு வணக்கம் ஜெ, சா.விஜயகுமாரின் எதிர்வினையை (https://www.jeyamohan.in/126335#.Xdl3ZWZS9PY)  படித்தேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ் இணையச் சூழலில் வரைவு தேசியக் கல்விக்கொள்கை தொடர்பாக எழுத்துப் பூர்வமான, கொள்கையை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட ஒன்றை முதன்முதலில் பார்க்கிறேன்.  பொதுவாக இதுகுறித்து சில காணொலிகளும், மேடைப் பேச்சுகளுமே அதிகம் பகிரப்பட்டன. இனி, அவரது கடிதத்தில் உள்ளவற்றுக்கு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். அ. பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் தமிழில் கல்விக்கொள்கை வெளியிடப்பட்டிருப்பது நல்ல செயல். சமூக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127827/

திராவிட இயக்கம் – கடிதங்கள்

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்   அன்புள்ள ஜெ   ஒரு வேடிக்கையான விஷயம்   எனக்கும் நண்பர்களுக்கும் ஒரு போட்டி. திமுகவினரின் வாசிப்புப் பழக்கம் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ’எந்த ஆதாரத்துடன் இப்படிப் பேசுகிறார்?”என்று நண்பர் கேட்டார். “அவர் தன் மனப்பதிவைச் சொல்கிறார். திமுகவினரே பாய்ந்துவந்து அவருக்குச் சாதகமான ஆதாரங்களை அள்ளி அள்ளி வைப்பார்கள்” என்று நான் சொன்னேன்   அப்படியே பேச்சு வளர்ந்தது. ஒரு பந்தயம் வைத்தேன். நான்  சொன்னது இது. “அத்தனை திமுகக்காரர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127480/

Older posts «