Category Archive: அனுபவம்

சின்னஞ்சிறு வெளி

  நாளிரவு பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு ஒரே இடத்தில் புறவுலகை முழுக்க உதறி அமைவது என்பது எத்தனை ஆழமானது என்று நாள்செல்லச் செல்ல புரிகிறது. ஒன்று இந்த இடமே பிரம்மாண்டமாக விரிந்துவிடுகிறது. நிலத்தளம், இரண்டு மொட்டைமாடிகள். மூன்று பரப்புகளுக்கும் மூன்று தனியியல்புகள் இருக்கின்றன. நிலத்தில் தலைக்குமேல் விரிந்த மலர்மரத்தின் கூரை. முதல்தளத்தில் சூழ்ந்திருக்கும் மரக்கிளைகள். இரண்டாம் மாடியில் வானம். நோய்க்கூறெனச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130882/

நாளிரவு

பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு தினராத்ரம் என்று ஒரு மலையாளச் சொல்லாட்சி உண்டு வள்ளத்தோள் கவிதையிலிருந்து கசிந்து அரசியல் மேடைக்கு வந்து சீரழிந்து கிடக்கும் சொல். நாளிரவு என தமிழ்ப்படுத்தலாம். நாளும் இரவும். அல்லது புலரந்தி. அதுதான் இப்போது. ஒரு முழுநாளையும் இப்படி உள்ளங்கையில் வைத்துப் பார்க்க முன்பு நேரிட்டதில்லை. இன்றைய தேவை என்பது நாட்களை எண்ணாமலிருப்பது. ஒவ்வொரு நாளும் காலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130743/

பொற்கொன்றை!

  இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு கோவிட் நோய்த்தொற்று, ஊரடங்கு குறித்து எதுவும் எழுதவேண்டாம் என்பதே என் எண்ணம், இனிமேலும் எழுதப்போவதில்லை. என்னை ஒவ்வொருநாளும் கருத்துரைக்க, விவாதிக்கவும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு “இல்லை, நான் பேச விழையவில்லை” என்பதே என் பதில். இந்த விஷு நன்னாளில் ஒருசில சொற்கள். ஒரு குடும்பச்சூழலில் அக்குடும்ப உறுப்பினர்களிடையே உச்சகட்ட வன்முறை எப்போது நிகழும் என்றால் அக்குடும்பமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130664/

இன்றைய மலர்

  வான் அலை நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள். ஒரு கணிப்பொறிப் பட்டியலை வைத்துக்கொண்டு பெயர், வயது, உடல்நிலை ஆகியவற்றை சரிபார்த்தனர். கோவிட் வைரஸ் எப்படி வரும் என்பதை ஓரிரு வரிகளில் சொல்லி, வெளியே போகவேண்டாம், கேட் உட்பட எதைத்தொட்டாலும் கை கழுவவேண்டும் என்பது போன்ற செய்திகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130529/

வான் அலை

நாற்புறமும் திறத்தல் இன்று காலையும்  ஆறுமணிக்கே எழுந்து மொட்டைமாடிக்கு நடைசென்றேன். சூரியன் தென்னைமரஙக்ளுக்கு அப்பால் எழுவதை பார்த்துக்கொண்டு நின்றேன். ஒவ்வொருநாளும் ஒரு கொடை என்று சொல்லலாம். ஆனால் அதை அணுக்கமாக உணர இப்படி நோயின், இறப்பின், நிலையில்லாமையின் நிழலில் நின்றாகவேண்டியிருக்கிறது. கதிரொளி ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியம். முடிவேயற்ற ஓவியநிரை மானுடர் நாம் பறவைகளை விலங்குகளை இத்தனை தூரம் துன்புறுத்தியிருக்கிறோமா என்ன? இந்த திடீர் விடுதலையை அவை கொண்டாடுகின்றன. பல நண்பர்கள் வீட்டுக்கு அருகே யானைகளை, காட்டுவிலங்குகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130503/

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள். ஒவ்வொன்றையும் மிகமிகச் சிறிதாக்கிக்கொள்ளவும் மிகமிகப் பெரிதாக்கிக்கொள்ளவும் முடியும்போலும். இந்த வீடு அத்தனை பெரிதாகிவிட்டிருக்கிறது. இதற்குள் இத்தனை இடம், இத்தனை வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், அதற்கேற்ற உள\நிலைகள். நான் அவ்வப்போது எண்ணியதுண்டு. நான் உலகநாடுகள் பலவற்றுக்குச் சென்றவன். ஜப்பான் முதல் கனடாவரை என்று பார்த்தால் உலக உருண்டையைச் சுற்றிவந்துவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால் என் அப்பா வெறும் ஐந்து கிமீ வட்டத்திற்குள் வாழ்ந்தவர். அவருடைய நண்பர்கள் அனைவருமே அவருடன் ஒன்றாம் வகுப்பு முதல்படித்தவர்கள். இறப்புவரை நாளும் சந்தித்தவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130450/

கோடையின் சுவை

என் வீட்டுக்கு நேர்முன்னால், எதிர்வீட்டு வளைப்புக்குள் ஒரு மாமரம் நிற்கிறது . அதற்கு ‘சீசன்’ எல்லாம் பொருட்டல்ல. பெரும்பாலும் ஆண்டு முழுக்க ஓரிரு காய்களாவது இருக்கும். அது ஓர் ஆச்சரியம் என்று வேளாண்துறை நண்பர்கள் சொன்னார்கள். சீசன் தொடங்குவதற்கு முன்னரே காய்த்துக் குலுங்கும். சீசன் முடிந்த பின்னரும் “என்னது, முடிஞ்சிருச்சா? அதுக்குள்ளயா?” என்று காய்களுடன் நின்றுகொண்டிருக்கும்.   நான் சின்னவயசில் சில அக்கா, மாமிகளை இப்படிப் பார்த்திருக்கிறேன். எப்போதும் கையில் இடையில் வயிற்றில் குழந்தைகள் இருந்துகொண்டிருக்கும். இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130101/

அந்தி கடிதங்கள்

அந்தி எழுகை அன்புள்ள ஜெ   அந்தி எழுகை அருமையான ஒரு கட்டுரை. அதில் நிஜத்திற்கும் கற்பனைக்குமான ஒரு அலைவு இருக்கிறது. அது பகலில் இருந்து இரவுக்குப்பொவதுபோல. அதுதான் அந்தி என்று தோன்றிவிட்டது.   இரவு வருவது அல்ல அந்தி. ஒரு பொழுது இன்னொன்றாக ஆகும்போது நம் கண்ணெதிரே இந்தப் பிரபஞ்சம் உருமாறுகிறது. ஆகவேதான் இந்த சந்திப்பொழுதுகள் எல்லாமே தெய்வ வணக்கத்துக்குரியவை என்று சொன்னார்கள்.   அந்தி ஒருவருக்கு தனிமைக்காக அளிக்கப்பட்டுள்ளது என்று எங்கள் தியானமரபில் சொல்வார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129877/

அக்ஷயபாத்திரம் உணவு

அக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்: எதிர்ப்புகள் ஏன்?   இஸ்கான் [The International Society for Krishna Consciousness] அமைப்பின் அக்ஷ்யபாத்ரா அமைப்பு அவர்களின் உணவுக்கொடை நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும் விழாவுக்கு என்னையும் விருந்தினராக அழைத்திருந்தனர். நான் அதை தவிர்த்துவிட்டேன். ஒன்று, அதைப்பற்றி முழுமையாக அறியாமல் கலந்துகொள்ளக் கூடாது என்பது. இன்னொன்று, கவர்னர் முதல்வர் போன்றவர்களின் நிகழ்ச்சியில் நான் சங்கடமாகவே உணர்வேன் என்பது. கொஞ்சம் ஆணவம்தான், ஒன்றும் செய்வதற்கில்லை   இஸ்கானின்  பொறுப்பில் இருக்கும் துறவியான ஷியாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130027/

கோடை மழை

  கோடைகாலம் தொடங்குவதற்குள்ளாகவே இங்கே கோடைமழை பெய்யத் தொடங்கிவிட்டது. சென்ற பிப்ரவரி இருபதாம் தேதி நல்ல மழை. அன்று சிவராத்திரி. எவனோ சுங்கான்கடை மலையடிவாரத்தில் தீயிட்டுவிட்டான். காய்ந்த புல் பற்றிக்கொண்டு மேலேற மலை நின்றெரிந்தது. இரவில் வானில் தழல்கொடி. பகலில் புகைமூடியிருந்தது பாறைமுடிகளை. ஆனால் உடனே மழைபெய்து தீ அணைந்துவிட்டது   அதன்பின் இன்று. நேற்றே கருமைகொண்டிருந்தது தெற்குவானம். சவேரியார் குன்றின்மேல் கரும்புகைப்படலம். மலைப்பாறைகள் தெளிந்து அருகிலென வந்து நின்றன. பறவையோசைகள் மாறுபட்டன. சிறிய ஈ ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130024/

Older posts «

» Newer posts