Category Archive: அனுபவம்

குடும்பத்தில் இருந்து விடுமுறை

  கணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்?’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான். அரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் சொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித்து ”அங்க தங்கறதுக்கு ரூம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4816

சரியான வாழ்க்கையா?

  அன்புள்ள ஜெயமோகன், வெகு நாட்களாகக் கேட்க வேண்டும் என்று யோசித்த கேள்வி. உங்களிடம் இருந்து பதில் வருமென நினைக்கிறேன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறேன்; இந்தச் சூழலில் மாற்றம் என்பது நடந்துகொண்டே இருப்பது போல உணருகிறேன். மூன்று ஆண்டுங்கள் ஒரே அலுவகத்தில் வேலை செய்வது என்பது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. என் தந்தை ஒரு அலுவகத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணி புரிந்து அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35464

ஓரினச்சேர்க்கை

  ஜெ   நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன். எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12281

ரயில்மழை -கடிதங்கள்

ரயில்மழை அன்புள்ள ஜெ, எதனை உண்மை….இந்த வரியை நான் ஒரு நூறுமுறையாவது திரும்ப திரும்ப படித்திருப்பேன் , ஒவ்வொருமுறை படிக்கும் போதும் என்னுள் கண்டடைந்த திறப்பை வார்த்தைகளால் கூற இயலவில்லை;  மீண்டும் ரயில்மழை கட்டுரையை படிக்கப்போகிறேன்…… இவற்றை எச்சொற்களால் விவரிப்பது. எழுதுவதில் உள்ளத்தைச் சொல்வது எத்தனைக் கடினமோ அதைவிடக் கடினம் புறத்தைச் சொல்வது. நிறங்களை, வடிவங்களை சொல்ல மொழியால் இயலாது. ஒன்றை பிறிதொன்றால்தான் சொல்லமுடியும். கண்டுகேட்டு அறியும் பருவுலகை உவமைகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் என்பது எவ்ளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110775

நோயின் ஊற்று

அன்புள்ள திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு, கடந்த இரு வாரங்களாக மீண்டும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு, அலுவல் நிமித்தமாக சென்று வந்தேன். கோடைச் சூரியனின் மிக நீண்ட நேர பகற் பயணம், ஐரோப்பிய மண்ணை சொர்க்கமாகவும் அதன் மக்களை வண்ணமயமாகவும் மாற்றும் காலமிது. இன்னும் எப்படிச் சொல்வதென்றால், பொற் சிகைக் காற்றில் தவழ, இடது மணிக்கட்டில் கறுப்பும் வெண்முத்தும் கலந்த நெகிழ்வளை பிரள, பருத்தி வெள்ளையில் நீலச்சிறு பூக்கள் பதித்த சிறிய ஸ்கர்ட் அணிந்த மடந்தைப் பெண்ணொருத்தி, கண்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110187

குருவாயூரின் மேகம்

இன்று கிருஷ்ணன் இல்லாமல் ஒரு பாட்டு கேட்கமுடியாத உளநிலை. பழைய பாட்டு ஒன்றை கேட்டேன். ஏறத்தாழ எல்லாருமே தெரிந்தவர்கள்.     எழுதியவர் எஸ்.ரமேசன் நாயர். குமரிமாவட்டத்தில் குமாரபுரத்தைச் சேர்ந்தவர். நண்பர் கே.பி.வினோதின் தாய்மாமன். மலையாளத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். சிலப்பதிகாரம், திருக்குறள், மற்றும் சங்கப்பாடல்களை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இசையமைத்தவர் ஜயவிஜயன். இரட்டையர். செம்பை வைத்யநாத பாகவதரின் மாணவர்கள். ஜேசுதாஸுக்கு அவ்வகையில் இளையவர்கள். ஜயனின் மைந்தர்தான் மலையாள நடிகர் மனோஜ் கே ஜயன். நான் ஜயவிஜயனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110286

ரயில்மழை

சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டேன். காலை முதலே உக்கிரமான மழை. இங்கு தென்மேற்குப்பருவமழைக்கே ஒரு கம்பீரம் உண்டு. வடகிழக்குப்பருவமழை நின்று நெடுநேரம் அறைந்து ஊற்றி மெல்ல ஓய்ந்து நெடுநேரம் இடைவெளிவிட்டு அடுத்த அறையை தொடங்கும். ஆனால் தென்மேற்குப்பருவமழை ஓய்வதேயில்லை. ஓய்ந்ததுமே எழும். அறைந்தறைந்து பொழியும். மீண்டும் கருமைமூண்டு பொதிந்து நாற்புறத்தில் இருந்தும் வீசிச்சொடுக்கும். கிளம்பியதும் மழையில். ரயில் நிலையமே முகில்கூட்டங்களால் மூடப்பட்டிருந்தது. இடி மின்னல் ஏதுமில்லை. ஒரு மாபெரும் அருவிக்கடியில் நின்றிருந்தது நகரம். கொஞ்சம் நனைந்துகொண்டுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110044

அற்பத்தனமும் அகங்காரமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,   நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா?   அன்புடன், அருண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36883

மண்மணம்

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வரும் வழி பெரும்பாலான குமரி மாவட்டத்துக்காரர்களுக்குப் பிடித்தமானது. அவர்கள் குமரி எல்லையைத் தாண்டிச்சென்ற முதல் அனுபவமே திருச்செந்தூர் பயணமாகத்தான் இருந்திருக்கும். விடியற்காலை நாலரை மணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பும் பஸ்ஸில் தான் அனேகமாக சென்றிருப்பார்கள். பஸ் இலைவெளுக்கும் நேரத்தில் நெல்லைக்குள் நுழைந்து மண்வெளுக்கும் நேரத்தில் சாத்தான்குளம் தாண்டிச்செல்லும். நெல்லை நாகர்கோயில் சாலைபோல அகலமானதல்ல செந்தூர்சாலை. சின்ன ஓடை போல வளைந்து வளைந்து பல இடங்களில் தேங்கி நின்று தயங்கிச் செல்லக்கூடியது. வழியில் என்னன்னவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34389

ஹீரோ

ஹீரோவை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான். 2002 ல் நான் தக்கலையில் ஒரு டீக்கடையில் டீக்குடிக்கச் சென்றேன். அருகே ஒரு ‘பெட் ஷாப்’ . அதில் ஒரு கம்பிக்கூண்டுக்குள் கன்னங்கருமையாக பளபளப்பாக ஹீரோ அமர்ந்திருந்தான். ஒரு பழையபாணி பாக்லைட் டெலிபோன் போல. கடையில் எவருமில்லை. ஹீரோ சாலையைப்பார்த்து சலிப்படைந்திருந்தான். என்னைப்பார்த்து ‘தூக்கு என்னை , என்னைத் தூக்கு’ என்று கத்தினான். நான் அருகே சென்று கம்பி இடுக்கு வழியாகக் கைவிட்டு அவனைத் தொட்டேன். கரிக்குவியலில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29242

Older posts «

» Newer posts