Category Archive: அனுபவம்

புத்தாண்டு

சென்ற இரு ஆண்டுகளாக புத்தாண்டில் சந்திப்பது எந்த திட்டமும் இல்லாமல் நிகழ்ந்துவருகிறது. ஈரட்டியில் சந்தித்தோம். இம்முறையும் திட்டம் இருந்தது. ஆனால் நண்பர் ஆனந்தகுமார் அவர் ஆனைகட்டியில் நடத்திவரும் சத்-தர்சன் என்னும் அமைப்பின் சார்பில் கட்டப்படும் ஒர் இல்லத்தை நான் திறந்துவைக்க முடியுமா என அழைத்தார். அதையே புத்தாண்டுச் சந்திப்பாக ஆக்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஊட்டியிலிருந்து ஆனைகட்டிக்குச் சென்றேன் நண்பர்கள் சிலரை அழைத்திருந்தேன். இதை ஒரு பொது நிகழ்வாக அறிவிக்க விரும்பவில்லை, ஆகவே இணையதளத்தில் வெளியிடவில்லை. 30 நண்பர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129048

மீள்கை

விஷ்ணுபுரம் விழா எப்போதுமே ஒரு தனிமையை அளிக்கிறது. நண்பர்கள் புடைசூழ இருந்து பேசி, சிரித்து, களித்து மெல்ல உருவாகும் தனிமை அது. முதலில் உருவாவது ஒருவகையான சங்கடம். நான் இவ்விழாவில் என்னை முன்வைப்பதில்லை. எவ்வகையிலும் என் படைப்புக்கள் பேசப்படுவதே இல்லை. ஆயினும் ஒரு பெருமிதம் உருவாவதை தவிர்க்கமுடியாது. அப்பெருமிதம் ஒருநாள் நீடிக்கும். விழா மறுநாள் காலை உலகையே வென்றுவிட்டது போலிருக்கும். நண்பர்களும் நிறைவுடன் மிதப்புடன் இருப்பார்கள். அன்று மாலைக்குள் அது குறையத்தொடங்கும். குறைந்தாகவேண்டும். இவை என்னுடையவை அல்ல, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129022

விழா 2019

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் விஷ்ணுபுரம் விழாவுக்கு இம்முறை நேராக மலேசியாவிலிருந்து வந்துசேர்ந்தேன். விழா ஏற்பாடுகள் எதையும் என்னிடம் தெரிவிக்கவேண்டாம் என சொல்லியிருந்தேன். தெரிவிப்பதில் பெரிய பயன் ஏதுமில்லை என்பது ஒரு காரணம். நான் அவற்றில் சொல்ல ஏதுமில்லை. அமைப்பாளர்கள் செந்தில், ராம்குமார், விஜய்சூரியன், மீனாம்பிகை, செல்வேந்திரன், ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் அமைப்பாளர்களாகவே பல்லாண்டுகளாக பணியாற்றுபவர்கள். ஆகவே நாகர்கோயிலில் ரயிலில் ஏறிப்படுத்தபோதுதான் விஷ்ணுபுரம் விருது பற்றி நினைத்துக்கொண்டேன். அதுவரை மலேசியாவில் நான் ஆற்றிய உரைகளைச் சார்ந்தே என் உள்ளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129021

வாழ்க்கை எனும் அமுதத்துளி

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7855

காதலைக் கடத்தல்

  அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21281

மாறுதலின் இக்காலகட்டத்தில்…

தமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41

மீண்டும் ஒரு தனிமை

வெண்முரசின் ஒவ்வொரு நாவல் முடியும்போதும் வந்து சூழ்ந்துகொள்ளும் தனிமை ஒன்றுண்டு. நாவலை எழுதும்போது அடுத்த நாளைக்கான கதை, அதற்கான அகத்தேடல் மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தமாக நான் நாவல்களை பார்ப்பதில்லை. ஆனால் எழுதி முடித்ததும் ஒரே அலையாக வந்து நாவல் நம் மேல் மோதி நிலையழியச் செய்கிறது. இறப்புகள், வாழ்க்கையின் பொருள் அனைத்தையும் பொருளின்மையாக ஆக்கும் காலத்தின் விரிவு. அதிலிருந்து மீண்டு அடுத்த நாவலுக்கு, அடுத்த காலகட்டத்திற்குச் செல்ல சற்றுநேரமாகும். அது ஒரு பெருந்தத்தளிப்பு. எழுதுவதன் மேலேயே நம்பிக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119546

சிவஇரவு

 [சித்தர் காடு] சென்னை கட்டண உரை நிகழ்வுக்கு வந்து இங்கே நண்பர்களுடன் கொட்டமடித்துக்கொண்டிருந்தபோது ராஜகோபாலன் நான்காம்தேதி  சிவஇரவு என்று சொன்னார். அவர்கள் சென்ற ஐந்தாண்டுகளாகவே அன்று இரவு முழுக்க கார்களில் சென்னையைச் சுற்றி இருக்கும் சிவன்கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். சென்னையைச் சுற்றி அந்த அளவுக்கு தொன்மையான, முதன்மையான சிவன் ஆலயங்கள் உள்ளன. சென்னை எனக்கு அறிமுகமே இல்லாத ஊர். ராஜகோபாலன் சென்னையில் திளைப்பவர். அவருடன் சென்றுதான் சென்னையின் புறநகர்களை ஒட்டி இருக்கும் கோயில்களை பார்த்தேன். திருநீர்மலையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118908

எழுத்தாளனும் வாசகியும்

திருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அக்கா அனுப்பியிருந்த புத்தக பார்சலுடன் ,  கடலூரில் அந்த முகவரியை தேடி கண்டடைந்தேன் .  எண்பது கடந்த வயதில் தனித்து வாழும் பாட்டி .தள்ளாமை காரணமாக தற்போது எதோ உடற்பிணி அவர் யாரையும்,எந்த நேரமும்  தொந்தரவு செய்யும் , சூழல் மறந்து தன்னை மட்டுமே கருத்தில் கொண்ட நபர் அல்ல ,ஆகவே அவர் யார் உதவியையும் பெரும்பாலும் நாடுவதில்லை . வாசகி .குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சுகாவின் வாசகி . தகவல் அறிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117821

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு வணக்கம். நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம் பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றன என்று நம்புகிறேன். முதலாவது, பாலகுமாரனின் எழுத்துக்கள் வாழ்க்கையில் உதவின; அதனால் அவர் எழுத்து இலக்கியம் என்ற கருத்து. இது எப்படி இருக்கிறதென்றால் MGR படங்களை பார்த்து நான் தாய் பாசத்தை கற்று கொண்டேன். எனவே MGR …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3720

Older posts «