Category Archive: அஞ்சலி

அஞ்சலி, குமரகுருபரன்

  இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, சலிப்பு, எவரிடமென்றில்லாத ஒரு கோபம். தொலைதூர அயல்நிலத்தில் இறப்புச்செய்தியைக் கேட்பது மேலும் அழுத்தம் அளிக்கிறது. மனுஷ்யபுத்திரன் காலையிலேயே அழைத்திருந்தார். அதைப்பார்த்தபோது உடனே பேசவேண்டும் என்று மனம் எழுந்தது. பின்னர்  மீண்டும் சலிப்பு குமரகுருபரன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88463

மணி-3

    மணியை கதாநாயகனாக வைத்து ஒரு சினிமா எடுக்க லோகி எண்ணியிருந்தார். பெரெச்சன் என்பது அதன் பெயர். காணாமல்போன எருமையைத்தேடி ஒரு கிராமத்திற்கு வரும் பெரெச்சன் என்னும் அயலவனின் கதை. அவன் ஒருவகை ஞானி. ஒருவகை மூடன். மணி அதைநடிக்க மிகவும் விரும்பினார். கஸ்தூரிமானுக்குப்பின் லோகி பொருளியல் சிக்கலில் இருந்தபோது இலவசமாக நடிக்கவும் முன்வந்தார். அன்று அவரது இடம் உச்சத்தில் இருந்தது. ஆனால் லோகி அவர் செய்தவற்றுக்கு மறுஉதவியாக அதைப்பெற தயங்கினார். ”அவன் என் தம்பி.. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85471

மணி -2

[ தொடர்ச்சி ] மிகச்சிறந்த நகைச்சுவையுணர்ச்சி கொண்டவர் மணி. படப்பிடிப்பரங்கில் சில நடிகர்களைச் சுற்றித்தான் கூட்டம் இருக்கும். முக்கியமானவர் கமல்ஹாசன். இன்னொருவர் மோகன்லால். பெரும்பாலான கதாநாயகர்கள் தனிமையை விரும்புபவர்கள். அது அவர்களின் உயரமான இடத்தைத் தக்கவைக்க உதவும். கமல் இருக்குமிடம் நகைச்சுவையால் வெடித்துக்கொண்டே இருக்கும். அவரது நண்பர்கள் அனைவருமே அவரது நகைச்சுவைக்கூற்றுக்களைத்தான் அவர் இல்லாதபோதும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வகைமையில் ஒருவர் மணி. படப்பிடிப்புக்கு மணி வருகிறார் என்பதே ஒரு பெரிய கொண்டாட்டம். பாபநாசம் படத்தின் ’பிரமோ’வில் மணி எனக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85462

மணி-1

கலாபவன் மணியை நான் முதலில் கண்டது ஒரு தங்கும்விடுதியின் மின்தூக்கிக்குள். அதன் கதவுகள் மூடப்போகும்கணத்தில் உள்ளே நெடுக்குவாட்டில் கால்பங்கு தெரிந்த லோகிததாஸ் என்னிடம் “வா வா, கேறு” என்றார். நான் காலைவைத்து அது மூடுவதைத் தடுத்து உள்ளே சென்றேன். லோகி என் தோளைத் தொட்டு “மெலிந்துவிட்டாயே” என்றார். அது அவர் எப்போதும் சொல்வது. குண்டாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் என நம்புபவர் அவர் .குண்டாக ஆவதற்காக வாழ்க்கைமுழுக்க முயன்றவர்.. அருகே நின்றவர் கலாபவன் மணி. நான் ஓரிரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85453

அஞ்சலி: கே.ஏ.குணசேகரன்

  நாட்டரியல் ஆய்வாளரும் , நாடக ஆசிரியரும், நடிகருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் இன்று பாண்டிச்சேரியில் அவரது இல்லத்தில் காலமானார் என்று அறிந்தேன். அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லை. அவரது நாடகமான பலியாடுகளை வாசித்திருக்கிறேன். தமிழகத்து தலித் இயக்கத்தின் முக்கியமான பிரச்சாரகர்களில் ஒருவர். தீவிரமாக அத்தரப்பை முன்வைக்கும் நாடகம் அது..அதைப்பற்றி ஒரு குறிப்பையும் எழுதியிருக்கிறேன்.   இருமுறை நிகழ்ச்சிகளில் சந்தித்து ஓரிரு மரியாதைச் சொற்கள் பரிமாறியிருக்கிறோம்.என் நூறுநாற்காலிகள் கதை வெளிவந்தபோது தொலைபேசியில் அழைத்து பேசிக்கொண்டிருந்தார். உரத்த சிரிப்பொலிகளுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83469

அஞ்சலி சார்வாகன்

  சார்வாகனின் கதை ஒன்றை கணையாழியில் எண்பதுகளில் வாசித்தேன். யானையின் சாவு என்னும் அந்தக்கதை அன்று உற்சாகமான வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருந்தது. குழந்தைகளின் உளவியலுக்குள் இயல்பாகச் சென்ற கதை. அவரைப்பற்றி சுந்தர ராமசாமி என்னிடம் பேசினார். அவர் எழுத்தாளர் என்பதை விடவும் தொழுநோயாளிகளின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சமூகசேவகர் என்னும் வகையிலேயே முக்கியமானவர் என்றார். சார்வாகன் அதிகம் எழுதியதில்லை. சார்வாகன் கதைகள் என ஒரு தொகுதியை நற்றிணை வெளியிட்டுள்ளது. இன்றைய வாசகருக்கு செக்காவ் காலத்தையவை என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82172

அஞ்சலி :கௌரிஷங்கர்

  கடைசியாக கௌரிஷங்கரைப் பார்த்தது தேவதச்சனிடம் விஷ்ணுபுரம் விருதை அவருக்கு அளிக்கவிருப்பதாகச் சொல்வதற்காகச் சென்றபோதுதான். தேவதச்சனின் வீட்டுக்கு அருகேதான் குடியிருந்தார். இறுதியாக நாகர்கோயிலில் உதவி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அப்போது சிலமுறை சந்தித்திருக்கிறேன்   முழுமையாக மாறியிருந்தார். நெற்றியில் குங்குமம் விபூதி. லேசான தாடி .ஓய்வுபெற்ற அரசதிகாரிகளுக்குரிய கொஞ்சம் நிமிர்வும் கொஞ்சம் அலட்சியமும் கலந்த பேச்சு. அவருக்கே உரிய அலட்சியமான இலக்கிய அபிப்பிராயங்கள். உற்சாகமாக நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தேவதச்சனைப்பற்றிய ஆவணப்படத்திலும் நடித்திருந்தார்   நான் தேவதச்சனை 1986ல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82130

அஞ்சலி அருண் விஜயராணி

  2009ல் நான் ஆஸ்திரேலியா சென்றபோது எழுத்தாளர் அருண் விஜயராணியைச் சந்தித்தேன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர். அங்குள்ள கலையிலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தார். அவரது மறைவை நண்பர் முருகபூபதி எனக்கு அறிவித்தார். அருண் விஜயராணிக்கு என் அஞ்சலி. முருகபூபதியின் செய்தி ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81818

அஞ்சலி .நொபுரு கரஷிமா

தமிழக வரலாற்றாய்வில் முக்கியமான திறப்புகளை உருவாக்கிய வரலாற்றாசிரியர் நொபுரு கரஷிமா மறைந்தார். ஆசிய உற்பத்திமுறை என்னும் கருத்தை மார்க்ஸிலிருந்து பெற்றுக்கொண்டு அதைவைத்து இந்தியாவின் அரசியல் பொருளியல் அமைப்பை புரிந்துகொள்ள மூர்க்கமாக மார்க்ஸியநோக்குள்ள வரலாற்றாசிரியர்க்ள் முயன்றபோது அதற்கு எதிரான விரிவான தரவுகளின் அடிப்படையில் மாற்றுச் சித்திரம் ஒன்றை முன்வைத்து ஒரு தொடக்கத்தை உருவாக்கியவர் நொபுரு கரஷிமா ஆசிய உற்பத்திமுறையின் ஆதரவாளர்கள் இந்தியசமூகம், தமிழ்ச்சமூகம் பெருநகரங்களில் மட்டுமே வளர்ச்சியும் பண்பாட்டு மேன்மையும் கொண்டிருந்தது என்றும் உற்பத்திமுறைகளில் உள்ள தேக்கம் காரணமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81216

வெங்கட் சாமிநாதன் – அஞ்சலிகள்

வெங்கட் சாமிநாதன் ஹரன் பிரசன்னாவின் அஞ்சலிக்கட்டுரை வெங்கட்சாமிநாதனுக்கு சேதுபதி அருணாச்சலம் அஞ்சலிக்கட்டுரை வெங்கட் சாமிநாதன் ஆர்.அபிலாஷ் அஞ்சலி வெங்கட் சாமிநாதன் எழுத்தாளர் அஞ்சலிகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/79945

Older posts «

» Newer posts