Category Archive: அஞ்சலி

அசோகமித்திரன் அஞ்சலிக்கூட்டம்

சிலேட் இதழ், படிகம் கவிதையிதழ், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் அசோகமித்திரனுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.   நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா அரங்கில் மாலை ஆறுமணி   எம் வேதசகாயகுமார், லட்சுமி மணிவண்ணன், கார்த்திகைப்பாண்டியன், போகன் சங்கர், நட.சிவக்குமார்,ராம், ஜெயமோகன் ஒருங்கிணைப்பு ரோஸ் ஆண்டோ [படிகம்]   அனைவரும் வருக    

Permanent link to this article: https://www.jeyamohan.in/96700

அசோகமித்திரனும் திருமாவளவனும்

  இன்று மாலை ஒரு மலையாள எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அசோகமித்திரனை மலையாளத்தில் வாசித்திருக்கிறார். “இங்கே அத்தகைய ஒரு மாபெரும் எழுத்தாளர் மறைந்தால் முதலமைச்சரே சென்று அஞ்சலி செலுத்தியிருப்பார். அத்தனை அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் சென்றிருப்பார்கள்” என்றார். “தமிழகத்தில் சினிமாநடிகர்கள் தவிர எவருக்கும் அந்த மரியாதை அளிக்கப்படுவதில்லை இல்லையா?” என்று கேட்டார். அது உண்மை. ஆனால் நிலைமை மிகமிக மாறிவிட்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எழுத்தாளர்கள் மறைந்தால் அது ஒரு செய்தியே அல்ல. நாலைந்து நாட்கள் கழித்து அந்த எழுத்தாளரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96691

அஞ்சலி -அசோகமித்திரன்

  நவீனத்தமிழின் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை இப்போது   அசோகமித்திரன் ஆளுமையை வரையறுத்தல் அசோகமித்திரன் விமர்சன மலர் நமது கோட்டையின் கொடி படிப்பறைப் படங்கள் எழுத்தாளரைச் சந்திப்பது… குகை ஓவியங்கள் -கடலூர் சீனு அசோகமித்திரனின் ‘இன்று’ அசோகமித்திரன் பேட்டி -ஒருவிளக்கம் பதினெட்டாவது அட்சக்கோடு இரு காந்திகள் அசோகமித்திரனுக்கு ஒருவாசகர் புலிக்கலைஞன் அசோகமித்திரனின் இரு கதைகள் கரைந்த நிழல்கள் வாசிப்பனுபவம் இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96641

வானதி -அஞ்சலிகள்

  திரு ஜெயமோகன் அவர்களுக்கு, செல்வி வானதி மறைவிற்கு வருத்தம். இந்த கடிதம் தசை இறுக்க நோய்க்கான மருந்துகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்காக. பொதுவாக மரபணுக் குறைபாட்டிற்கு மருந்துகள் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். அப்படி கண்டு பிடித்தாலும் அவைகளின் செயல்திறன் அல்லது பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக அமைவதில்லை. 2016ம் ஆண்டில் இரண்டு மருந்துகள் தசை இறுக்க நோய்களுக்கு பலன் செய்யலாம் என கருதி விற்பனை செய்ய அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 1.      nusinersen (brand name …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94635

அஞ்சலி : வானவன் மாதேவி

  சேலம் வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். தசையிறுக்க நோயால் அவதிப்பட்டுவந்த இருவரும் தங்கள் உடல்குறையை தன்னலமில்லாத சேவையால் கடந்துசென்றவர்கள். தங்களைப்போன்ற நோய்கள் கொண்டவர்களுக்காக அவர்கள் ஆற்றிய பணி மிகப்பெரியது. அவர்களின் ஆதவ் அறக்கட்டளை மிகப்பெரிய இயக்கமாக ஆகி பல குழந்தைகளுக்கான அடைக்கலமாக இன்று மாறியிருக்கிறது.   வானதி மிகச்சிறந்த இலக்கியவாசகி. வெண்முரசு குறித்து தொடர்ந்து அவரது எதிர்வினை வந்துகொண்டிருந்தது. அசாதாரணமான மன உறுதியும் வாழ்க்கைமேல் நம்பிக்கையும் கொண்டவர். கடும் வலியில். உடல்செயலின்மையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94511

ஞானக்கூத்தன் – ஆவணப்படம்

கவிஞர் ஞானக்கூத்தனைப்பற்றி நண்பர் கே.பி.வினோத் எடுத்த ஆவணப்படம் இது. நண்பர் கெவின்கேர் பாலா -விஜி தயாரித்தது. 2014 விஷ்ணுபுரம் விருதை ஒட்டி இது எடுக்கப்பட்டுவிழாவில் திரையிடப்பட்டது. ஞானக்கூத்தனின் ஆளுமை, உடல்மொழி, வாழ்க்கைச்சுருக்கம், இலக்கியப்பங்களிப்பு ஆகியவை இதில் சுருக்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/89295

ஞானக்கூத்தன் மறைவு

தமிழ் நவீனத்துவத்தின் முதன்மையான துவக்கப்புள்ளி என ஞானக்கூத்தனை சொல்லலாம். நவீனத்துவத்துவத்தின் அடிப்படை இயல்புகளான எதிர்ப்பு, வன்மை, கசப்பு ஆகியவை நுட்பமான பகடியாக வெளிப்பட்ட கவிதைகள் அவருடையவை.  ஏறத்தாழ 30 ஆண்டுகள் சென்னயில் ஒரு இலக்கிய மையமாக அவர் திகழ்ந்தார்.  ஆத்மாநாமிலிருந்து தொடங்கி இரண்டு தலைமுறை கவிஞர்கள் அவரிடமிருந்து உருவாகி வந்தனர்.  தமிழில் ஒரு நவீனத்துவ அலையை உருவாக்கிய கசடதபற அவரது முன்முயற்சியால் வெளிவந்தது. ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.  தமிழின் முதன்மையான முன்னோடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89290

வே.சபாநாயகம்- அஞ்சலி

  வே.சபாநாயகம் தமிழ்ச்சிற்றிதழ்களைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்தவர். சிற்றிதழ்சேகரிப்பாளர். வெளிவந்த சின்னாட்களிலேயே மறக்கப்பட்டுவிடும் சிற்றிதழ்களை தொகுத்து அவற்றின் உள்ளடக்கம் குறித்து எழுதி ஒரு தொடர்ச்சியை உருவாக்க அவரால் முடிந்தது. அர்த்தபூர்வமான  தொடர்ச்சியையே நாம் வரலாறு என்கிறோம். அவ்வகையில் அவர் வரலாற்றை தொகுத்தவர். வே.சபாநாயகம் மறைந்த செய்தி சற்றுமுன் வந்தது. நவீன தமிழ் இலக்கியத்தின் ஆர்வலரும் பேராசிரியரும் எழுத்தாளரும் நல்ல பண்பாளருமாகிய திரு வே சபாநாயகம் (81 வயது) அவர்கள் இன்று (4.7.2016) காலை 5.30அளவில் நெஞ்சடைப்பு காரணமாக விருத்தாசலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88738

நல்லதோர் வீணை

  இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’   நல்லதோர்வீணைசெய்தே – சுகா கட்டுரை    

Permanent link to this article: https://www.jeyamohan.in/88477

குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்

  கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக அவர் இருந்தார்.  கடந்த வியாழன் அன்றுதான் குமாரை முதன் முதலில் சந்தித்தேன். இரவு ஒன்பதரை மணி வாக்கில் அழைத்து ஒரு மதுவிடுதிக்கு வரச்சொன்னார்.  இரவு பத்து மணி துவங்கி நள்ளிரவு வரை பியர் அருந்திக்கொண்டே கவிதைகள், புதிய நாவல்கள், ஊடக அனுபவங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88465

Older posts «

» Newer posts