Category Archive: அஞ்சலி

அஞ்சலி : வீரப்பிரகாசம்

  எங்கள் நண்பரும், பயணத்தோழருமான ராஜமாணிக்கத்தின் தந்தை வீரப்பிரகாசம் அவர்கள் இன்று காலமானார். தமிழக சர்வோதய இயக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர். அவரைப்பற்றிய அஞ்சலிக்குறிப்பு. நண்பர் முரளி எழுதியது முதுமையிலும் தளரா செயல்வீரர்

Permanent link to this article: https://www.jeyamohan.in/118262

எழுத்தாளனுக்கான அஞ்சலி

அஞ்சலி:பிரபஞ்சன் பிரபஞ்சனும் ஷாஜியும் எழுத்தாளனாகவே வாழ்வது என்பது… பெருமரியாதைக்கு உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தாளனாகவே வாழ்வது எனும் கடலூர் சீனு அவர்களிடன் கடிதத்தை வாசித்தேன். எனக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மேல் பெரும் மரியாதை உண்டு. அவர் துயர் மிகுந்த இறப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட முகநூல் பதிவுகள், கட்டுரைகள் பலவற்றையும் வாசித்து அவரது தனிப்பட்ட ஆகிருதி என்னவென புரிந்துகொண்டேன். ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களின் யானை சிறுகதையை நண்பர்கள் அனுப்பிய சுட்டியின் மூலமாக வாசிக்கச் சென்றபோது ம.நவீன் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117464

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

அன்புள்ள ஜெ.. அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அஞ்சலிக்குறிப்புகள் எழுதுவது இல்லை . கலைஞர் , ஜெ போன்றோர்களுக்கே எழுதவில்லை என்றாலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம் எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து காங்கிரசுடம் உறவாடி பதவி சுகங்களை அனுபவிக்கும் கட்சிகள் மத்தியில் அவர் போன்ற லட்சியவாத தலைவர்கள் கோமாளிகளாக கருதப்பட்டு மறக்கப்படும் அபாயம் அதிகம் இந்திய ஜன நாயகத்தை மீட்டெடுத்தவர்களில் ஒருவரான அவரை நினைவில் கொள்வது அவசியம் http://www.pichaikaaran.com/2019/01/blog-post_29.html அன்புடன் பிச்சைக்காரன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/117748

பிரபஞ்சன் – மதிப்பீடுகள்

பிரபஞ்சனும் ஷாஜியும் http://vallinam.com.my/version2/?p=5854 ஜெ, பிரபஞ்சன் சிறுகதைகள் பற்றி நானும் உங்கள் மனப்பதிவையே கொண்டிருந்தேன். ஆனால் ஒரு அஞ்சலி கட்டுரையில் அது அவசியம் இல்லை எனும் ரகத்தில் சில மறுப்புகள் வந்தன. உங்கள் வாசிப்புக்கு. நன்றி. ம.நவீன் பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன் அன்பிற்குரிய நவீன் நல்ல கட்டுரை ஆனால் அசாதாரணக் கலைஞன் என்பது ஒரு பெரிய வார்த்தை அல்லவா? ஜெ அன்புள்ள ஜெ பிரபஞ்சன் பற்றிய குறிப்பும் ஷாஜியின் கட்டுரையும் ஆத்மார்த்தமாக அமைந்திருந்தன. நான் பிரபஞ்சன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117333

பிரபஞ்சனும் ஷாஜியும்

பிரபஞ்சனும் நானும் ஷாஜி இறந்தவர்களைப்பற்றி எழுதுவதற்கு தமிழகத்தில் ஒரு ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இறந்தவர் நல்லவர், இனியவர், சாதனையாளர், அரியவர் – அவ்வளவுதான். இதை எழுத தனக்கிருக்கும் தகுதி என்ன? எழுதுபவர் அவருக்கு எவ்வளவு அணுக்கமானவர், அவர் இவரை எவ்வளவு மதித்தார் என எழுதுவதுதான். சுந்தர ராமசாமி மறைந்தபின் வெளிவந்த ஏராளமான கட்டுரைகளைப் பற்றி அன்று ஒரு சுருக்கமான குறிப்பு எழுதினேன். அக்கட்டுரைகளை மூன்று அடிப்படைக் கருத்துக்களாக சுருக்கலாம். ‘சுரா இனியவர், நான் சென்றால் ரயில்நிலையம் வந்து வரவேற்பார். சுரா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117174

பிரபஞ்சன் : கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், ஒரு மனிதனுக்காக எனது வாழ்நாளில் ஒருவரை நினைவுகூர்ந்து எழுதும் முதல் அஞ்சலி. எனது துறையில் ஒரு பெரிய ஆளுமையிடம் எனது அகங்காரத்தினாலும், அறியாமையினாலும், சல்லிதனத்தினாலும் அவரின் ஏசி அறையில் திட்டுவாங்கி துரத்தபட்டு வெளியேறுகிறேன். மனது முழுதும் வீராப்பும் கடுப்புமாக வியர்க்க வியர்க்க முதல் மாடியில் இருந்து படிகளில் இறங்கி வரும்போது திடீர் என வெள்ளை வேட்டியும் ஜிப்பாவுமாக ஒரு தேவதூதனை போல் ஒருவர் என்னை பார்த்து சிரிக்கிறார். இடது கையில் வேட்டியின் ஓரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116598

எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…

அஞ்சலி:பிரபஞ்சன் இனிய ஜெயம் ஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் ,  நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று  காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக நான் யாருடைய மறைவுக்கும் செல்பவன் இல்லை .உயிர் கொண்டு ,மொழி கொண்டு அவர் என்னுடன் உறவாடிய இறுதிக் கணம் மட்டுமே ,என் நினைவின் இறுதிச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம் . மாறாக பிரபஞ்சனின் இறுதிப் பயணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116569

அஞ்சலி: பேரா.சுஜாதா தேவி

 பேராசிரியர் சுஜாதாதேவி நேற்று [23- 6- 2018] அன்று மறைந்தார். மலையாளக் கவிஞர். ஆங்கிலப்பேராசிரியராகவும் சூழியல்போராளியாகவும் புகழ்பெற்றவர். மறைந்த கவிஞர் போதேஸ்வரனின் மூன்றாவது மகள். முதல்மகள் பேரா. ஹ்ருதயகுமாரி முன்னரே மறைந்தார். அடுத்தவர் புகழ்பெற்ற கவிஞரான சுகதகுமாரி. சுஜாதா மூவரில் இளையவர். இறக்கும்போது 72 அகவை. சென்ற சில ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருக்கும் தமக்கை சுகதகுமாரியுடன் தங்கி அவரை கவனித்துக்கொண்டிருந்தார் சுஜாதாதேவி. திடீரென்று ஒருமாதம் முன்பு மூளையில் கட்டி இருப்பது கண்டடையப்பட்டது. அதற்கான மருத்துவத்தில் இருந்தார். எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110473

அஞ்சலி: ம.இலெ.தங்கப்பா

  தமிழ் மரபிலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவரான ம.இலெ.தங்கப்பா மறைந்தார். புதுக்கவிதையின் எழுச்சியிலும் தொடர்ந்து மரபின் சந்தத்திற்கும் அணிகளுக்கும் ஆதரவாக நிலைகொண்டவர். மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். மரபான முறையிலேயே அவை அமைந்திருந்தன. கவிதைக்கான உள எழுச்சியைவிட சந்தத்தாலும் சொல்லழகாலும் உருவானவை அவை   ம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய குழந்தையிலக்கியப் படைப்புகளே குறிப்பிடத்தக்கவை. இறுதிக்காலத்தில் அவருடைய மொழியாக்கத்தில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பான  ‘LOVE STANDS ALONE அவருடைய வாழ்நாள் சாதனை என நினைக்கிறேன்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109683

அஞ்சலி மா.அரங்கநாதன்

தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவரான மா.அரங்கநாதன் மறைந்தார். குமரிமாவட்டத்தில் திருப்பதிச்சாரம் என்னும் திருவெண்பரிசாரம் இலக்கியரீதியாக முக்கியமானது. இங்கே மையமாக திருவாழிமார்பனின் ஆலயம் உள்ளது. இச்சிற்றூரிலிருந்து பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். எம்.சிவசுப்ரமணியம் [எம்.எஸ்], குமரித்துறைவன், அச்சுதன் அடுக்கா என. கிருத்திகாவின் கணவர் பூதலிங்கம் இவ்வூர்க்காரர். இதுதான் வாசவேஸ்வரமாக கிருத்திகாவின் நாவலில் வெளிப்பட்டது. திருப்பதிச்சாரத்தில் எம்.சிவசுப்ரமணியத்தின் தம்பியாகப் பிறந்தவர் மா.அரங்கநாதன். பெரும்பாலும் திருப்பதிச்சாரத்தைச் சுற்றியே மா.அரங்கநாதனின் கதைகள் அமைந்தன. அவருடைய கதாபாத்திரங்களில் தன்னிலையில் பேசுபவை முத்துக்கருப்பன் என்ற மாறாப்பெயரில் விளங்கின. மெல்லியநகைச்சுவையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97488

Older posts «