Found 430 search results for keyword: கடலூர் சீனு

பேய்களும் பாரதியும் – கடலூர் சீனு

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க இனிய ஜெயம்   எவ்வாரமும் போல இவ்வாரமும் மகிழ்சிகள் நிறைந்த வாரமாக அமைந்தது.   முதல் மகிழ்ச்சி   நீண்ட நாள் கழித்து [குமரகுருபரன் விருது விழாவுக்குப் பிறகு] உங்கள் குரலைக் கேட்டது. விஷ்ணுபுர உள்வட்ட வெளி வட்ட நண்பர்கள் மத்தியில் உலவும் நம்பிக்கை நான் தினமும் ஜெயமோகன் வசம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது. தினமும் பேச  கேட்க பல விஷயங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123850

இன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு

விமலரும் வராகரும் சமணத்தில் வராகர் வராகர் -ஒரு கடிதம் சமணம் வராகர் – கடிதங்கள்   இனிய ஜெயம்   இந்துத் தாலிபானியம் இங்கே வந்து விட்டதா எனும் கேள்விக்கு [ சமணம் வராகர் – கடிதங்கள்]அப்டித்தான் போல என்றே சொல்லத் தோன்றுகிறது.  பொதுத் தளத்தில் இது மூன்று அலகுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். ஒன்று இத்துப் பண்பாட்டு இயக்கம் மீதான அறியாமை.  அந்த அறியாமையில் நின்று இந்துக் காலாச்சாரக் கூறுகள் அனைத்தையும் உயிர் இயக்கத்திலிருந்து  துண்டித்து உறைநிலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122494

குரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி – கடலூர் சீனு

  இனிய ஜெயம்   மகிழ்சிகரமான மற்றொரு மூன்று நாட்கள்.  மூன்று நாட்கள் தீவிரமான விஷயங்களை மட்டுமே பேசியபடி இரவுகளில் பாடல்களும் சிரிப்புமாக என உண்மையில் இந்த மூன்று நாட்களும் ஓடிய வேகமே தெரியவில்லை.  திரும்புகையில் நண்பர்கள் உரையாடலிலும் இதையே தெரிவித்தனர். செறிவான கலந்துரையாடல்கள் அமைந்த கச்சிதமான நேரக்கட்டுப்பாட்டின் மீது அமைந்த கூடுகை.   எப்போதும்போல நாஞ்சில் சாரின் கம்பராமாயண அமர்வு கனவுகளை எழுப்பும் ஒன்றாக அமைந்தது.குளிக்கையில் உடல் தேய்க்க மேரு மலையை பயன்படுத்துபவன் கும்பகர்ணன் எனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121723

லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை

[ கடலூர் சீனு 4-5-2019 ஊட்டி குரு நித்யா ஆய்வரங்கில் பேசிய உரை] இவ்வெளிய உரை பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுக்கு வணக்கத்துடன்   ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம், நண்பர்களே, மங்கை ராகவன் குழுவினர் எழுதிய இந்த தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலினை முகாந்திரமாகக் கொண்டு, நமது பண்பாட்டில் மதங்கள் பரிணாமம் பெற்று வளர்ந்த விதம், அதன் பின்னால் செயல்பட்ட முறைமை, இதில் இந்திய அளவில் லகுலீச பாசுபதம் அமைந்த விதம்,அது ஆற்றிய பணி, அந்தப் பணியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121591

வாழ்நீர் – கடலூர் சீனு

நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க   நீர் நெருப்பு – ஒரு பயணம்     விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து  உள்நின்று உடற்றும் பசி.   வள்ளுவர்.     சில வாரம் முன்பு சிவகாசியில் குலதெய்வம் கோவில் கொடைக்கு சென்றிருந்தோம். விடுதியின் குளிர்பதன  அறைக்குள் நுழைந்த கணம், ஆரோ ஏழோ படிக்கும் தம்பிமகன் குளியலறைக்கு  ஓடிச் சென்று, உள்ளே குழாயை அருவியாக திறந்து விட்டு நீரினடியில் நின்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119856

சமண வழி – கடலூர் சீனு

சென்ற வெள்ளி மாலை, நண்பர் இதயத்துல்லா அழைத்திருந்தார் உங்கள் தளத்தில் மேல் சித்தாமூர் சார்ந்த பதிவுகளையும்,வாசகர்களின் பயணக் கடிதங்களையும் வாசித்திருக்கிறார்.”சார் இங்கதான் சார் இருக்கு போலாமா” என்று வினவினார். சனிக்கிழமை காலை ஏழரை மணி அளவில் பண்ருட்டியில் இருந்து, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம். மார்ச் மாத வெக்கை துவங்கி,காற்று உறைந்து நின்று விட்ட புழுக்கம் நிலவும் தட்பவெப்பம். கிளம்பினோம். வழக்கமான பாதைகளை தவிர்த்து குறுக்குப் பாதைகள் எதேனும் உண்டா என்று கூகிள் வரைபடத்தை துழாவ, அது பண்ருட்டி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119112

டு லெட்டும் விமர்சகர்களும் – கடலூர் சீனு

இனிய ஜெயம், பொதுவாக பிரமாதமாக டெம்ப்ட் கொடுக்கப்பட்டு, வெளியாகி அதை விட பிரமாதமாக அப்படம் தோல்வி கண்ட பிறகு, படப்பிடிப்பு துவங்கும் முன் டெம்ப்ட் கொடுப்பதற்காக, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அளிக்கப்படும் பேட்டிகளை, பின்னால் தேடி சென்று வாசிப்பது எனது பொழுது போக்குகளில் ஒன்று . உதாரணமாக, சுறா எனத் திமிறத் தயாராகி விட்டார் விஜய். சுறா சொல்லிப் பாருங்களேன். வேகம், மூர்க்கம், ஓய்வே அற்ற சுறுசுறுப்பு, தான் இருக்கும் கடலை ஆளும் ராஜா இன்னும் என்னென்னவோ மனசுல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118696

செழியனின் டு லெட் – கடலூர் சீனு

கடந்த வருடம் புதுச்சேரி திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசியவர் செழியன். அந்த விழாவில் டு லெட் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது.  அதில் அந்தப் படம் திரை விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டது என்றும், கேளிக்கை சினிமா அம்சங்கள் இதில் கிடையாது ஆகவே, பொது திரையரங்கம் நோக்கி இது எடுக்கப்பட வில்லை,இருப்பினும் இதில் உள்ள வாழ்கையை அனைவரும் ரசிக்கும் வண்ணம், டிசம்பர் இறுதிக்குள், மக்கள் பார்வைக்கான திரை அரங்குகளில் பார்க்கக் கிடைக்கும் என கூறி இருந்தார்.  இந்த பெப்ரவரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118692

இருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு

மத்தி [கவிதைத்தொகுதி ] வாங்க  இலக்கியம் எங்கு, என்ன வகையில்,எதை நோக்கி தொழில்படுகிறது என அவதானித்தால் அதன் அடிப்படையை இவ்வாறு வரையறை செய்யலாம். சித்தம் எனும் அமைப்பின் மீது ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷுப்தி,துரியா எனும் அலகுகளின் தொகை கொண்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் மனத்துக்கு, மொழி எனும் படிமப் பெருவெளியே சாரமாக இலங்குகிறது. இந்த சாரம், நாம் கொண்டிருக்கும் உடல் எனும்  ஜடம் கொண்டு , புலன்கள் வழியே புறவயமான தூல ஜடப் பிரபஞ்சத்துடன் நிகழ்த்தும்  முரண் இயக்கம் வழியே கிடைத்ததாகஇருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118490

ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு

மாற்றி வையகம் புதுமையுறச்செய்து ,மனிதர்கள்தம்மை அமரர்கள் ஆக்கவே …   சி.சுப்பிரமணிய பாரதி.     மேற்கண்ட வரிகளை எழுதிய இந்த பாரதி ,வேறொரு இடத்தில்  எல்லோரும் அமரநிலை எய்தும் நன்னெறியை இந்தியா உலகினுக்கு அளிக்கும் என்று எழுதுகிறார் . உலகப்பண்பாடு எனும் கருதுகோள் முகிழ்ந்துவரும் சூழலில் ,உலக்குக்கு இந்தியா அளிக்கும் கொடை இதுவாக இருக்கும் என்பது பாரதியின் கனவு . அதாவது அவரது முன்னோடி சிதம்பரம் ராமலிங்கம்பிள்ளை எனும் வடலூர் வள்ளலார் கண்ட கனவின் நீட்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115385

Next page »