Found 118 search results for keyword: மகாத்மா காந்தி

காந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன்

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம்.   சென்ற வாரம் சென்னை வந்திருந்த குக்கூ சிவராஜ் அண்ணன் தொலைபேசியில் அழைத்தார். குரலில் அதீத உற்சாகம் “செந்தில் சென்னைலதான் இருக்கேன் புத்தகம் வந்துடுச்சி செந்தில் அதான் தொட்டுப் பார்த்துட்டுப் போக வந்தேன் செந்தில்..” என்று நெகிழ்ந்து பேசினார்.   எனக்கு அந்தக்கணமே அவரை  சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை, சிவராஜ் அண்ணன் கரங்களில் பார்க்கும்போது, வெளிநாட்டில் இருந்துவிட்டு வந்த தகப்பன் தன் குழந்தையின் மூடியிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127048

காந்திகள் வாழ்க!

இன்றைய காந்திகள் அன்புள்ள ஜெயமோகன்,   சுபாஷ் வங்காளியென கொண்டாடிய வங்காளியை பார்த்துள்ளேன், காந்தி  ஒரு குஜராத்தியென கொண்டாடிய குஜராத்தியையே இதுவரை பார்த்ததில்லை. இது உங்கள் தளத்திலுள்ள காந்தி பதிவுகள் , இன்றைய காந்தி, உரையாடும் காந்தி நூல்களை படித்தபின் காந்திபற்றிய தொடர்ச்சியான சிந்தனையில் ஒருநாள் இரவு உணர்ந்தது.இங்கு காந்தி எவருக்கும் சொந்தமில்லை எல்லாருக்கும் சொந்தம். காந்தியை தனியாய் தாங்கி பிடிக்க யாருமில்ல காங்கிரஸ் உட்பட. சிவகாமி சபதம் நாகநந்தி புத்தம் சரணம் கச்சாமி , சங்கம் சரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123271

இன்றைய காந்திகள் -கடிதங்கள்

இன்றைய காந்திகள் அன்புள்ள ஜெ இந்தத் தளத்தில் வெளிவந்த நவகாந்தியர்கள் பற்றிய கட்டுரைகள் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவை காந்தியம் என்றால் என்ன என்று காட்டுகின்றன. இதுவரைக்கும் நானே காந்தியம் என்பது ஒரு தரப்பு கம்யூனிசமும் திராவிடவாதமும் வேறு தரப்புக்கள் என்றே நினைத்துவந்திருந்தேன். ஆனால் காந்தியம் செயல்படுபவர்களின் தரப்பு. மற்றவை வெறுமே கருத்துசொல்பவர்களின் தரப்புக்கள் என்று இன்றைக்குத் தெரிந்துகொண்டேன். மற்றவர்கள் எதிரிகளை வசைபாடுகிறார்கள். தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். காந்தியம் சொல்வதற்கு சான்றாகச் செய்து காட்டுகிறது. எதையும் வசைபாடுவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123074

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்ட காந்தியர் பலர். லக்‌ஷ்மி சந்த் ஜெயின் என்னும் எல்.சி.ஜெயின் அவர்களுள் முக்கியமானவர். விடுதலைப் போராட்ட வீர தம்பதியினர் ஃபூல் சந்த் ஜெயினுக்கும், சமேலி (மல்லிகை) தேவிக்கும், 1925 ஆம் ஆண்டு, ஆள்வார் என்னும் சிற்றரசில் உள்ள பஹதூர்பூர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை ஃபூல் சந்த் ஜெயின், குலத் தொழிலான நகை வணிகத்தில் பயிற்சி பெற்றவர். ஆனாலும், விடுதலை வேட்கை, அவரை காங்கிரஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118276

எனது இன்றைய காந்தி –கடிதம்

அன்பின் ஜெ அவர்களுக்கு, தங்களின் பதில் கடிதம் பேருவகை தந்தது..கூடவே நம்பிக்கையையும்.. தங்களை வாசிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் என் அறிதலின் ஆகப் பெரிய தடையாக எனது முன் முடிவுகளும் (உங்கள் மொழியில் வெற்று நம்பிக்கைகள்)நானே அறியாமல் நான் கொண்டிருந்த போலியான முற்போக்கு பாவனைகளும் இருப்பதைக் கண்டு கொண்டேன். அதை உடைத்து மறுவார்ப்பு செய்தது தங்களின் எழுத்துக்களே, குறிப்பாக உங்கள் கட்டுரைகள்.. உங்களுடைய இன்றைய காந்தி நூலை வாசித்து வருகிறேன். பள்ளிக் கல்வி வாயிலாக நாங்கள் அறிந்திருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98894

இன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்

  கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய நினைவுகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்றும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன.   இன்றைய காந்தி நூலுக்கான சுருக்கமான மதிப்புரைகளில் ஒன்று    

Permanent link to this article: https://www.jeyamohan.in/92859

காந்தியம் தோற்கும் இடங்கள் உரை – வீடியோ

தாங்கள் இன்று மாலை ஆற்றிய உரையின் காணொளித் தொகுப்பு எங்களது shruti.tv YouTube தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இத்துடன் அதன் சுட்டியை தங்களது பார்வைக்கு இணைத்துள்ளோம். இராமலிங்கர் பணி மன்றத்தின் 51 ஆம் ஆண்டு “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா #காந்தி விழாவில், ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் #ஜெயமோகன் உரை https://www.youtube.com/watch?v=CW9TyW3puQY     நன்றி Team Shruti.tv Rathinam editor

Permanent link to this article: https://www.jeyamohan.in/91099

சென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்

  வரும் ஞாயிறன்று சென்னையில் காந்தி குறித்து உரையாற்றவிருக்கிறேன். இராமலிங்கர் பணி மன்றத்தின்  51 ஆம் ஆண்டு  “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா” வருகின்ற 2016 அக்டோபர் முதல் வாரம் முழுக்க நிகழ்கிறது. அதில் அக்டோபர் இரண்டு அன்று பேசுகிறேன். இம்முறை ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற தலைப்பில் பேசலாமென ஓர் எண்ணம். நாள் :  2-10-2017 இடம் : சென்னை AVM இராஜேஸ்வரி திருமண மண்டபம் நேரம் : மாலை ஆறுமணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/91052

காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்

அன்புள்ள ஜெ, சிறுவயதில் ‘நல்ல வேளை சுட்டான். இல்லேன்னா நாட்ட இன்னுங்கெடுத்திருப்பான் பாவி’ என்ற என் பாட்டனாரின் கூற்றை அவ்வப்போது கேட்டதுமுதல் ஆரம்பித்தது காந்தியை உதாசீனம் செய்யும் மனநிலை. எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதையில் அவர் தாய் வெள்ளையர்கள் கடவுள் அவதாரமென்று நம்பியதையும் அவர்களே உலகை ஆளத்தகுதியுள்ளவர்கள் என்று கருதியதையும் எழுதியிருந்தார். என் பாட்டனார் அந்தவகையாக இருந்திருக்கலாம். பின் என் இருபதுகளின் மத்தியில் ஓஷோ எழுத்துக்களில் கிறங்கிக்கிடந்தபோது ‘காந்தி ஒரு போலி மகாத்மா’ என்பதாகக் கையில் கிடைப்பவர்களிடம் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89911

காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]

அரசாங்க ஆவணங்களில் மகாத்மா என்றும் மற்றவர்களால் மோகன்தாஸ் என்றும் அழைக்கப்படும் காந்தி பிற்பாடுவந்த பல காந்திகளில் காந்தி அல்லாதவர்களை வடிகட்டிவிட்டால் எஞ்சுபவர். வாசிக்கும் பழக்கம் இல்லாதவராதலால் இவர் ஏராளமாக எழுதி சிந்தனையாளராக ஆனார். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதற்காக முப்பதாண்டுக்காலம் பலவகையிலும் போராடி சம்பந்தமில்லாத வேறு ஒருவகை சுதந்திரத்தைப் பெற்று சம்பந்தமில்லாதவர்களின் கையில் கொடுத்தமையால் இவரை தேசப்பிதா என்றும் அழைக்கிறார்கள். இவர் தேசியவிடுமுறை நாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று குஜராத்தில் போர்பந்தர் ஊரில் ஒரு பனியா குடும்பத்தில் 1822ல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4431

Next page »