Found 23 search results for keyword: நாராயண குரு எனும் இயக்கம்

நாராயண குரு எனும் இயக்கம்-2

தொடர்ச்சி நடராஜகுரு   நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7524

நாராயண குரு எனும் இயக்கம் -1

  நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7522

அனாசார உலகம்

இந்த இணையப்பக்கத்தில் நடராஜகுருவைப்பற்றிய பலவகையான நினைவுக்குறிப்புகள் உள்ளன. நடராஜகுருவின் வாழ்க்கை சுவாரசியமானது. அவருடைய An autobiography of an absolutist ஒரு பக்கம் கட்டற்ற அலைச்சலாகவும் மறுபக்கம் எங்கும் செல்லாத யோகியாகவும் அமையும் ஒரு மனிதனின் வாழ்க்கையின் சித்திரம். துறவிகளை இருவகையாக பிரிக்கலாம். ஆசாரத்துரவி, அனாசாரத் துறவி. ஆசாரத்துறவிகள் ஓர் அமைப்பின் உறுப்பினர்கள் பின்னர் தலைவர்கள். அவர்களை துறவியர் என்பது அவர்கள் நாம் வாழும் குடும்பவாழ்க்கையை வாழவில்லை என்பதனால்தான். மற்றபடி அவர்களுக்கும் அனைத்துவகையான உலகியல் சிக்கல்களும் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98241

ஆத்மானந்தா

கிருஷ்ணமேனனின் பேச்சு உரையாடல் போன்றது. அவர் எவருக்காகவும் பேசவில்லை என்று தோன்றும். ஒன்றில் இருந்து ஒன்றாக தொட்டுச் செல்லும் கேள்விகளும் விடைகளுமாக அது நீண்டு இயல்பான முடிவை அடையும். அபாரமான ஆங்கிலத்தில் மூளையைச் சொடுக்கும் கவித்துவச் சொற்றொடர்களுடன் அவை அமைந்திருக்கும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7446

விடுதலையின் முழுமை- அய்யன்காளி

    [1]   அய்யன்காளியின் பெயரை என்னிடம் முதலில் சொன்னவர் மலையாள நாவலாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான பி.கே பாலகிருஷ்ணன். 1988-89 களில் நான் அவரை அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை அவர் வழக்கமாக அமரும் உதரசிரோமணி சாலையில் உள்ள சிறிய மதுக்கடையில் சந்தித்தேன். அப்போது அவர் மது அருந்துவதை நிறுத்திவிட்டிருந்தார். வழக்கம்போல கொதிப்பும் கொந்தளிப்பும் வசைபாடலுமாக பேசிக்கொண்டிருந்தார். அய்யன்காளியின் பெயர் அவர் நாவில் எழுந்தது. அதுவும் அப்பெயர் எனக்கு நன்கு பழக்கமிருக்கும் என்பது போல.   நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127733

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

அன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119191

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து

  நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில் வழிகாட்டுதலுக்காகவும் நாடினீர்கள் என்றால் அதுவே பேரிலக்கியம் ஆகும்.” தல்ஸ்தோய், தாமஸ் மன், ஐசக் பாஷவிஸ் சிங்கர், வைக்கம் முஹம்மது பஷீர், தாராசங்கர் பந்தோபாயாய ஆகியோரின் நூல்களை வெறும் பொழுதுபோக்குக்காக, வேடிக்கைக்காக நான் படிப்பது உண்டு. தல்ஸ்தோயில் மிகவும் தமாஷான பல பகுதிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/134

ஊடகக் கறையான்கள்

  தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும் வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில் சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாம நோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையே எழுதியிருக்கிறேன். சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாக இருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும் அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94596

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி செல்லும் இந்த தேசத்தில், அது மேலும் பிளவு உருவாகவே வழி வகுக்கும். விமரிசன தளத்துக்கு அப்பால் வாசக தளத்தில் இப்பிரிவினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/370

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

(சந்திரிகா – மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை) 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும் தமிழுக்கும், மலையாளத்துக்குமான ஒற்றுமைக் கூறுகள் கலாசாரரீதியில் இன்றும் தொடர்ந்து வருபவை. பழந்தமிழர் மரபின் அனைத்து சிறப்பு தினங்களும் கேரளத்தில்தான் இன்றும் கொண்டாடப்படுகின்றன. பழந்தமிழின் அற்புதமான வேர்சொற்கள் இன்றும் மலையாளத்தின் பயன்பாட்டு மொழியில் காணக்கிடைப்பது , சற்று மொழியைக் கவனிப்பவர்களுக்கும் தெரியும். 400 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78364

Next page »