Found 11 search results for keyword: டி.எம்.கிருஷ்ணா

இசை,டி.எம்.கிருஷ்ணா-கடிதங்கள்

    அன்புள்ள ஜெ,இவ்விவாதத்தின் முழு பரிமாணத்தையும் பொறுமையாகவும் விரிவாகவும் தொட்டுக்காட்டிள்ளார் நண்பர் கார்திக் அவருக்கு என் வாழ்த்துகள் பதிப்பித்ததற்காக உங்களுக்கு நன்றிகள். கர்நாடக இசைச்சூழலில் உள்ள  குறைப்பாடுகள் பலதையும் டி.எம். கிருஷ்ணா விவாதித்துள்ளார். வேறெந்த கர்நாடக இசைக்கலைஞரும் அநேகமாக இதுவரை அடையாளப்படுத்தாதவை இவை.  ஏறக்குறைய டி.எம்.கிருஷ்ணாவின் முன் வைக்கும் எல்ல விஷயங்களையும் கார்திக் விளக்கமாகவே எழுதிவிட்டார். விவாதம் நிதானமடைந்திருக்கும் நிலையில் அதன் முழுமை கருதி,  நண்பர் கார்திக்கின் கடிதத்திற்கு ஒரு கூடுதல் இணைப்பாக, அதில் விடுபட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89455

இசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்

  அன்பு ஜெ , டி.எம்.கிருஷ்ணா விக்கு மெக்சசே விருதளித்தது பற்றிய உங்கள் கட்டுரை பார்த்தேன் நீங்கள் எழுதியதுதானா என்று சந்தேகமே வந்துவிட்டது , சும்மா விளாசியிருந்தீர்கள்.அவர் அந்த விருதுக்கு தகுதியானவராக அந்த விருதின் தகுதி என்ன , எதன் அடிப்படையில் அந்த விருது அளிக்கப்படுகிறது,எந்தெந்த பிரிவுகளில் அளிக்கப்படுகிறது என்பதெல்லாம் நியாயமான கேள்விகளே .ஆனால் நீஙகள் அதன் பொருட்டு ஒரு கலைஞனான / இசைஞனாக அவர் மீது வைக்கும் மதிப்பீடுகள் அதன் இலக்கை பெரும் வித்தியாசத்தில் தவறிவிட்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89435

சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா

    ஜெ, வணக்கம். இன்று டி எம் கிருஷ்ணா விருது பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். ஈரோடு புதியவர்கள் சந்திப்பில் கிருஷ்ணா பற்றி பேச்சு எழுந்த போதும் ஒரு காட்டமான பதிலையே அளித்தீர்கள். என் கேள்வி இந்த விருது பற்றியோ, கிருஷ்ணாவின் இசை பாண்டித்தியம் பற்றியோ அவர் இந்துவில் எழுதும் கட்டுரைகள் பற்றியோ அல்ல. கேள்வி இதன் அடி ஆழத்தில் இருக்கும் பிரச்சனை மீது. கிருஷ்ணா ஏன் இப்படிச் செய்கிறார்? இன்று தமிழகத்தில் கர்நாடக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89353

டி.எம்.கிருஷ்ணா -கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நலம் தானே. தங்களது சிங்கப்பூர் assignment அங்குள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என உளமார நம்புகிறேன். உங்களுக்கும் ஒரு இனிய அனுபவமாக இருக்கட்டும்.. இன்று டி.எம் கிருஷ்ணாவிற்கு, விருது கிடைத்தது பற்றிய தங்களது பதிவினைப் பார்த்தேன். உங்கள் கருத்துக்கள் சரியானதே. உலகமெங்கும் விருதுகள் வழங்கப்படுவது இப்படித்தான். தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுவதும், விளம்பர வேடதாரிகளுக்கு விருதுகள் அளிக்கபபடுவதும் வாடிக்கை தானே. ஆனால் உங்களது பதிவு மிகவும் கூர்மையாக இருப்பதாக எனக்கு நெருடுகிறது. மகாபாரதத்தில், வேதத்தின் பொருளை, உபநிடதத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89344

டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே

  டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில் வந்தது. உண்மையில் இவ்விருது எதற்காக என்றே புரியவில்லை. அவர் ஒரு பாடகர், அதற்காக என்றால் தமிழில் இன்று மரபிசை பாடுபவர்களில் மிகமிகச்சுமாரான் பாடகர் அவர். அவரது எந்தக்கச்சேரியையும் இரண்டாம்முறை கேட்கமுடியாது. படித்துவைத்ததைப் பாடுவார், அதற்கு பாட்டுவாத்தியார்த்தனம் என்று பெயர். சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்   ஆனால் விருது அவரது ‘மனிதாபிமானச்’ செயல்பாடுகளுக்காக எனத்தெரிகிறது.என்ன மனிதாபிமானச் செயல்பாடுகள் என்று தேடினால் இந்து ஆங்கில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89307

இசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ, நலமாக இருப்பீர்கள் என்று ஆசைப்படுகிறேன். தங்களின் காடு நாவலை ஒருவழியாக பெற்று வாசித்துக்கொண்டு இருக்கிறேன். அதை வாசித்த பின்பு எழுத வேண்டும் என்று இருந்தேன். இருப்பினும் இப்பொழுது எழுத தோன்றியது இரு நாட்கள் முன்பு தமிழ் இந்து இணையத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது என்று கண்டவுடன் எனக்கு வருத்தமே ஏற்பட்டது. அந்த விருதின் மேல் இருந்த மதிப்பே போய்விட்டது என்று சொல்வேன். கிரண் பேடிக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம். அதுவும் திஹார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89379

பண்பாட்டுக்கு மேலிருக்கும் பருந்துகள்

வணக்கம். உங்களின் டி எம் கிருஷ்ணா பதிவு மிகவும் ஏற்புடையதாகப்பட்டது எனக்கு.  எதிர்பார்த்தபடியே அநேக பேர் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய சிந்தனைக்கு ஒத்திசைவாக இருந்தது உங்கள் எழுத்து. நானும் என் கருத்தை வேறொரு கோணத்தில் பதிவு செய்தேன், நாலைந்து பேர் தவிர ஒருவரும் வாசிக்கவில்லை. ஏதோ ஒரு Tabooவைத் தகர்த்தெறிந்த சாதனை மாதிரி கொண்டாடுகிறார்கள். ஒரு மரக்கதவை உடைத்தெறிந்தால் போதுமா? இதுக்குப் பின்னால், பதினாறாயிரம் இரும்புக்கதவுகள் இருக்கின்றன. ஹ்ம்ம்ம்ம்ம் நேரம் கிடைத்தால் என்னுடைய பதிவைப் படிக்கவும். நன்றி ஸ்ரீனிவாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89408

இசையை அறிதல்

ஜெ, நீங்கள் அடிக்கடி இசையைப்பற்றி பெரிய அறிதல் இல்லாதவர் என உங்களைச் சொல்லிக்கொள்கிறீர்கள். பெரும்பாலான கட்டுரைகளில் இந்த டிஸ்கிளெய்மர் உள்ளது. ஆனால் இப்போது டி.எம்.கிருஷ்ணாவைப்பற்றி இப்படி கடுமையான ஒரு மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறீர்கள். இதைப்பற்றி இன்று ஒருசாரார் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் நண்பர் ஜடாயு கடுமையாக எழுதியிருக்கிறார் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். அருண் *** அன்புள்ள அருண், பெரும்பாலான இசைவிவாதங்கள் இங்கே ராக நுட்பங்களை, அதாவது அதில் போடப்படும் சங்கதிகளையும் பிடிகளையும், சார்ந்தே நிகழ்கின்றன. சொல்லப்போனால் ராகங்களைக் கண்டுபிடிப்பதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89383

சகிப்பின்மை -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், சிரித்து மாளவில்லை. சுருக்கமாக சில குறிப்புகள். அமெரிக்காவில் இன்று டிரம்ப் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இன வெறுப்பு என் போன்றோரைக் கவலை கொள்ளச் செய்வதே. நான் பி.ஏ.கே வுக்கு எழுதிய குறிப்பிலும் சொன்னேன் டிரம்ப் குறித்து எழுத நினைத்து உட்காரும் போது ஆமிர் பிர்ச்சினை வெடித்தது. முதலில் நான் அதைப் புறந்தள்ளவே நினைத்தேன். மேலும் அவர் ‘வெளியேறி விடுவேன்’ என்றுப் பேசியிருக்கக் கூடாதென்றே என்றே நண்பனுடன் வாதிட்டேன். பிறகு அந்தக் காணொளியைப் பார்த்தப் பின் அவர் பேசியதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81190

நமது கலை நமது இலக்கியம்

ஜெ, நம்முடைய கலை மரபின் உச்சமென்று நாம் மதிக்கக் கூடிய படைப்புகளுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை என்பது மகத்தான தரிசனமும் அதை வெளிபடுத்தும் கவித்துவ வெளிப்பாடும், அதை நிலை நிறுத்தும் தத்துவ அடித்தளமும் இவை அனைத்தும் சரியாக ஒருங்கமைந்து வெளிப்படும் கலைத் திறனும் ஒரே படைப்பில் வெளியாவது. மேற்கத்திய நவீனத்துவ மனமும் அதை அப்படியே இங்கே பிரதி செய்யும் கலைஞர்களும் பெரும்பாலும் முயல்வது இவை அனைத்தையும் அறுத்து ஒவ்வொன்றிலும் எங்கே இருக்கிறது உயிர் என்று தேடுவதைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63541

Next page »