வெண்முரசு புதுவைக் கூடுகை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . எழுத்தாளர்  திரு. ஜெயமோகனின்  நிகழ்காவியமான  “வெண்முரசின் 14 வது கலந்துரையாடல் ”   26-04-2018வியாழக்கிழமை அன்று  நடைபெற  இருக்கிறது . அதில்  பங்குகொள்ள  வெண்முரசு  வாசகர்களையும்,  வெண்முரசுகுறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன் புடன்  அழைக்கிறோம்.. இந்த மாத கூடுகையின் தலைப்பு   “வெண்முரசு 2 வது நூல் மழைப்பாடல்”   பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்   மற்றும்   பகுதி ஏழு : நீள் நதி   26 முதல் 38 வரை உள்ள பகுதிகளைக் குறித்து நண்பர்  திரு. மயிலாடுதுறை   பிரபு  அவர்கள்   உரையாடுகிறார் . நாள்:-  வியாழக்கிழமை (26-04-2018) மாலை 6:00 மணி முதல் 8:30  மணிவரை  நடைபெறும் இடம்:-   கிருபாநிதி அரிகிருஷ்ணன், ” ஶ்ரீநாராயணபரம்”, முதல்மாடி, 27, வெள்ளாழர் வீதி , புதுவை-605001 Contact no:- 99-43-951908 , 98-43-010306.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/108638

தாசியும் பெண்ணும்

[மூவாலூர் ராமாமிருதத்தம்மையார்] இன்று ஆண்கள் சிலர் தனியாகக்கூடினால் பேச்சு முழுக்க சினிமா நடிகைகளைப்பற்றித்தான் இருக்கும். சினிமா தோன்றாத நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எதைப்பேசிக்கொண்டார்கள்? , தாசிகளைப்பற்றித்தான்.   இதற்கு நான் ஆதாரமாகக் கொள்வது வடுவூர் துரைசாமி அய்யங்கார் [ 1880 – 1942] அவர்களின் நாவல்களை. பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி அய்யங்கார் முழுநேர எழுத்தாளராக ஆனார். தன் நாவல்களை தானே அச்சகம் நடத்தி வெளியிட்டார். தன் நாவல்களை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாதஇதழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108621

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் -கடிதங்கள்

pey

அன்புள்ள ஆசானுக்கு ,   பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் படித்தேன். மிக சிறப்பாக எழுதப்பட்ட தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் வாசகனை கட்டி இழுத்து தன்னகத்தே வைத்துக்கொண்டது. விசேஷமாக என்னை ஆட்கொண்டது யட்சி சிறுகதை. மனது அந்த கதையுடனான ஒரு அழகிய இணைப்பை உணரத்தொடங்கியது. பனைமரத்து யட்சியின் கதையும் மிக மிக சாதாரணமாக ஒரு உறவில் நிகழக்கூடிய  சந்தோஷங்கள்,துக்கங்கள் சலிப்புகள், ஏமாற்றங்கள்  என்பன தத்ரூபமாக  ஆனால் ஒரு நுங்கின் 3 அறைகளுக்குள்ளே நிகழ்ந்திருக்கிறது . அத்தனை அழகு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108727

மயில்மார்க் குடைகள்

இரா முருகனின் இந்த சிறுகதை சமீபத்தில் நான் வாசித்த நல்ல படைப்புகளில் ஒன்று. சுந்தர ராமசாமியின் சீதைமார்க் சீயக்காய்த் தூளை தலைப்பிலிருந்தே நினைவூட்டுகிறது. கலை தன்னைச்  சூழ்ந்திருக்கும் வணிகத்தால், உலகியலால் சூறையாடப்படுவதன் சித்திரம் தொடர்ந்து தமிழில் எழுதப்பட்டு வருகிறது. இதுவும் அவ்வகை கதை   ஒரு பொது வாசிப்பில் ஒரு பாடகியின் வாழ்க்கையின் அவலம் என்றுதான் தோன்றும். ஆனால் மயில்மார்க் குடைக்கான விளம்பரம் முதல் கணவன் வரை எங்கெல்லாம் அவளுடைய இசை கசக்கி நுகரப்படுகிறது என்னும் அடியோட்டம் இதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108645

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-33

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ஏற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.” “விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான்? பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108582

வேங்கடராஜூலுவின் மொழியாக்கம்.

  அன்புள்ள ஜெ     மொழியாக்கம் குறித்து பேசுகையில் மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை தவிர்க்க முடியாது என கருதுகிறேன். நமமில பலர் சத்திய சோதனை தமிழாக்கத்தை சின்ன வயதில் படித்திருப்போம். மீண்டும  மீண்டும் படிப்போரும் உண்டு.  அந்த மீள் வாசிப்பு தமிழிலில்தான் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர். அதற்கு காரணம் வேங்கடராஜூலுவின் அற்புதமான மொழியாக்கம்.  காந்தியே நேரடியாக தமிழில் எழுதினாரோ என தோன்ற வைக்கும் மொழி பெயர்ப்பு.       ஆனாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108607

முதல் நாவல் விவாதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,..   ஒரு பழைய நாவலைப் புரட்டிக்கொண்டு இருந்தேன்..தீனதயாளு என்ற நாவல் . எழுதியவர் நடேச சாஸ்திரியார்.அதன் முன்னுரையில் இதுதான் தமிழின் முதல் நாவல் என்கிறார் அவர் ( 8.10.1902 ). ஆனால் தமிழின் முதல் நாவலாக இதை சொல்வதில்லையல்லவா..   அந்த காலத்தில் இது குறித்தி சர்ச்சை ஏதும் எழுந்ததா?   அன்புடன், பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சைக்காரன், நாவல் சிறுகதை நவீனகவிதை மூன்றிலுமே முதல் ஆக்கம் எது என்பது எப்போதும் சர்ச்சைக்கு இடமானதாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41915

இலட்சியக் காதலி -கடிதங்கள்

  இலட்சியக்காதலியின் வருகை   அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு   நலமாக இருக்கிறீர்களா? காலையில் இன்றைய பதிவுகள் படித்தவுடன் சொல்ல முடியாத சந்தோஷம். இடைவெளி விட்டதில் இருந்து மீண்டும் பதிவுகள் வந்தாலும் இன்றைக்குத்தான் பழைய ஆளாய் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறன். வெண்முரசு ஒரே வேதாந்தம். அதில் கொஞ்சம் பரிச்சயம் உள்ளவர்களுக்கு நன்றாய் இருக்கும். என் போன்றவர்கள் கொஞ்சம் கடினமாய் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. “ஏர் என்றால் வயலுடன் தொடர்புபடுத்திதானே யோசிக்கிறோம்? அதேபோலத்தான்.”  படித்ததில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108603

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-32

என் அறைக்குச் செல்வது வரை நான் தன்னிலையிலேயே இல்லை. சகதேவன் என் விழிகளை நோக்கி அப்படி சொன்னதும் விதிர்த்து விழிவிலக்கினேன். கால்கள் நடுங்கத்தொடங்கின. சூழ நின்றவர்கள் என் உணர்வுகளை அறிந்துவிடக்கூடாதென்பதனால் அப்படியே திரும்பிக்கொண்டு உறுதியான சீரான அடிகளை எடுத்துவைத்து எதுவும் பேசாமல் நடந்தேன். இடைநாழியில் எப்படி அவனிடம் அச்சொற்களை பேசினேன் என வியந்துகொண்டேன். அவன் என்னை சிறுமைசெய்யும் எதையும் சொல்லமாட்டான் என அத்தனை நம்பியிருக்கிறேன். அறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்தேன். சேடி வந்து பணிந்து “இன்நீர் கொண்டுவரவா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108566

கல்வியும் காதலும்

mada

    ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி காதல் மலரும்? கோயிலில் குளக்கரையில் அவர்கள் சந்தித்துக்கொள்ளலாம். கல்விச்சாலைகளில் சந்தித்துக் கொள்ளலாம். கண்ணும் கண்ணும் சந்திக்கும். ஓரிரு அன்புச்சொற்கள், கேலிகள். பின் காதல் தெரிவிக்கப்படும். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு பல நாவல்களில் காதல் மலர்வது ஆண் பெண்ணுக்கு எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுப்பதன் வழியாக! நூறாண்டுகளுக்கு முன்பு ஆண் தன் பெண்ணுக்கு எழுத்தறிவிப்பது என்பது பரமரகசியமாகச் செய்யவேண்டிய ஒன்றாக இருந்தது. வீட்டுப்பெரியவர்களுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ரகசியமான எந்தச்செயலும் கிளர்ச்சியூட்டக்கூடியதுதானே?   1877 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108594

சோர்பா கடிதங்கள்

சோர்பா    எனும்   கிரேக்கன் – அருண்மொழி நங்கை   அன்புநிறை ஜெ,   சோர்பா எனும் கிரேக்கன் நாவல் குறித்த பதிவை வாசித்தேன். தெளிவான நடையில் ஆழ்ந்த அவதானிப்புகளை எழுதியிருக்கிறார்கள். தத்துவம், வரலாறு, சமூகவியல், மதம் என விரியும் பார்வையில் நாவலின் விரிவும் தெரிகிறது, அருண்மொழி நங்கை அவர்களுடைய பரந்துபட்ட வாசிப்பும் தெரிகிறது. உபநிடத வரிகள் மற்றும் சார்வாக தரிசனத்தின் ஒளியில் இந்த கிரேக்க நாவல் வாசிக்கப்படும் போது கிடைக்கும் திறப்பு இலக்கியம் எப்போதும் மனித குலம் முழுமைக்குமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108591

Older posts «