அஞ்சலி : சு கிருஷ்ணமூர்த்தி

சு.கிருஷ்ணமூர்த்தி

வங்கமொழியில் இருந்து தமிழுக்கு ஏராளமான முக்கியமான புனைவிலக்கியங்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்த மூத்த மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் காலமானார். சிறிது காலமாகவே உடல்நலமின்றி இருந்தார்

தமிழில் வங்க இலக்கியங்கள் பெரிய பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன. பாரதி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர் ஷண்முகசுந்தரம் போன்றவர்கள் முன்னொடி மொழிபெயர்ப்பாளர்கள்.

சமகாலத்தில் அவர்களின் இடத்தை நிறைத்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. அவரது மொழியாக்கத்தில் வந்த நீலகண்டப்பறவையைத் தேடி, கொல்லப்படுவதில்லை போன்ற நாவல்களை முக்கியமான ஆக்கங்களாகச் சொல்லலாம். இறுதிவரை மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தவர் அவர்

சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

நீலகண்டப்பறவையைத் தேடி

கொல்லப்படுவதில்லை

முந்தைய கட்டுரைசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20