தவில்

நாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணத்தில் தவில் பேரொலி எழுப்பியதைப்பற்றி கொஞ்சம் மனக்குறையுடன் எழுதியிருந்தேன். அதற்கு விரிவான விளக்கமாக நண்பர் கோலப்பன் சொல்வனத்தில் நல்ல ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அரிய விவரங்கள் கொண்ட கட்டுரை

கோலப்பன் இதழாளர். இலக்கிய-இசை ரசிகர். குறிப்பாக தவுல்-நாதஸ்வரம் மீது அபாரமான பிரியம் கொண்டவர். அவரது சொந்த ஊர் பறக்கை. பறவைக்கரசனூர் அல்லது பக்ஷிராஜபுரம் என்று புகழ்பெற்ற பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலில் ஐந்தாம்நாள் நாதஸ்வரக்கச்சேரி பலவருடங்களாக கோலப்பனின் முயற்சியில், செலவில் நடந்துகொண்டிருக்கிறது. மிக நுட்பமாகத் தேர்வு செய்யப்பட்ட மிகத்தரமான நாதஸ்வர நிகழ்ச்சி என அது இப்போது புகழ்பெற்றுவிட்டது. கலைஞர்கள் வந்தால் தங்குவதற்காகவே கோலப்பன் பறக்கையில் ஒரு வீட்டையே வைத்திருக்கிறார்

நாதஸ்வரம் சிறப்புற்றுவாழும் என கோலப்பன் நம்பிக்கையுடன் எழுதியிருக்கிறார். அவரைப்போன்ற ரசிகர்களே அந்த நம்பிக்கையை நிலைநிறுத்துகிறார்கள்.

முந்தைய கட்டுரைகார்ல்சகனும் சிவானந்த சர்மாவும்
அடுத்த கட்டுரைஈரோட்டிலே …