அஞ்சலி: கழனியூரன்

kazani

நாட்டாரியல் ஆய்வாளரான கழனியூரனை நான் நாலைந்துமுறை நெல்லையில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சவேரியார் கல்லூரியில் நிகழ்ந்த நாட்டாரியல் அரங்கில் பிறகு தி.க.சிவசங்கரன் அவர்களின் இல்லத்தில். சற்றே நாணத்துடன் தாழ்ந்த குரலில் பேசுபவர். உரையாடும்போது நம் கைகளைப்பற்றிக்கொள்ளும் வழக்கம் கொண்டவர்

கி.ராஜநாராயணனின் தாக்கத்தால் நாட்டாரியலாய்வுக்கு வந்தவர் கழனியூரன் என்னும் புனைபெயர் கொண்ட எம். எஸ். அப்துல் காதர். நாட்டார்கதைகளை சேகரிப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக பணியாற்றியவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைத்திரட்டுக்களின் ஆசிரியர்.கி.ராஜநாராயணனின் கதைச்சேகரிப்பில் கழனியூரன், பாரததேவி இருவரின் பங்களிப்பும் மிக அதிகம்

 

கழனியூரனுக்கு அஞ்சலி

 

கழனியூரன் இணையதளம்