அட்டைகள்

aanaan

மலையாளத்தில் பாஷாபோஷினி ஆண்டுமலரில் வெளிவந்த யானைடாக்டர் குறுநாவலை பத்து பதிப்பகங்கள் வெளியிடவிருக்கின்றன. மாத்ருபூமி பதிப்பு வெளிவந்துவிட்டது. மதிப்புரைகளும் பாராட்டுரைகளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு சேவை நிறுவனமான சைக்கிள் புக்ஸ் வெளியிட்டுள்ள எளிமையான முகப்பு ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது.

நூறுநாற்காலிகள் இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் அட்டைகளை பார்க்கையில் அதிலிருக்கும் வேறுபட்ட வாசிப்புகள் ஆச்சரியமூட்டுகின்றன. தொடக்கத்தில் அந்நாவல் நாற்காலிகளின் கதையாக வாசிக்கப்பட்டு மெல்ல அன்னையின் கதையாக ஆகிவிட்டதைக் காணமுடிகிறது. யானை டாக்டர் எடுத்த எடுப்பிலேயே யானைக்கும் புழுவுக்குமான சமன்பாடாக வாசிக்கப்பட்டுவிட்டது. அட்டைகள் என்ன சொல்கின்றன என்று ஆறுமாதங்களுக்குப்பின் பார்க்கவேண்டும்.

w3

 

wuwu2wrwwnu

முந்தைய கட்டுரைமேற்கோள் திரிபு, அம்பேத்கர்…
அடுத்த கட்டுரைஎங்கெங்கு காணினும் சக்தியடா..