சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி
வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
* சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
* சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017.
* வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும்.
* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.
* அனுப்பி வைப்பவரின் நிஜப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
* கதையை தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்து தபால் மூலமும் அனுப்பலாம். கதைகள் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் அதைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைகளை அனுப்பவும்.
* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.
* தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிடப்படும்.
* தேர்ந்தெடுக்கப்படாத கதைகள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கான விளக்கங்கள் தரப்படமாட்டாது.
* கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே. புத்தகத்தின் காப்புரிமை கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்தது.
நிபந்தனைகள்:
* கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும் கதையாகவோ இருக்கலாம். சென்னையை மையமாகக் கொள்ளாத கதைகள் நிராகரிக்கப்படும்.
* சிறுகதைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
* மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.
* இக்கதைகள் இதுவரை எங்கும் (இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.
* கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.
* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
நடுவர்கள்:
எழுத்தாளர் இரா. முருகன்
எழுத்தாளர் கே.என். சிவராமன்
பரிசு விவரம்:
முதற்பரிசு: 7,500 ரூ
இரண்டாம் பரிசு: 3,000 ரூ
மூன்றாம் பரிசு: 1,500 ரூ
ஆறுதல் பரிசுகள் (பத்து கதைகளுக்கு): தலா 750 ரூ
இது போன்ற ஒரு போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்த கிழக்கு பதிப்பகம் திட்டமிட்டுள்ளது.
உங்கள் கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
அச்சுப் பிரதிகளை அனுப்ப விரும்புகிறவர்கள், கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 600014 என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும்போது, உள்ளே தெளிவாக, “இக்கதை கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கானது” என்று குறிப்பிடவும்.