கன்யாகுமரியில்…

venpu

இன்று [25- ஜூன் 2017] மாலை கன்யாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறேன். “எனது அடையாளம் தோல் அல்ல- நான்’ என்பது நிகழ்ச்சியின்  பெயர். வெண்புள்ளிகள் [leucoderma] நோய் அல்ல, அது தொற்றாது, பரம்பரையாக வராது என்னும் கருத்துக்களை முன்வைத்து நிகழும் ஒரு நூல்வெளியீடு. கே.உமாபதி எழுதிய வெண்புள்ளிகளைப்பற்றிய விளக்கநூல் வெளியிடப்படும்.

இடம் சுனாமி பூங்கா, கன்யாகுமரி

நேரம் மாலை 4 மணி

நாள் 25 6 2017

கவிஞர் தேவேந்திரபூபதி, ஜி.தர்மராஜன் ஐபிஎஸ், மயன் ரமேஷ்ராஜா, மலர்வதி. டி.இ.திருவேங்கடம், பொன்னீலன், நாஞ்சில்நாடன், அ.கா.பெருமாள். எச்.ஜி.ரசூல், மீரான் மைதீன் போன்றவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

விரல்கள் நுண்கலைகளுக்கான அரங்கம் சார்பில் கூட்டு ஓவியம் வரையும் நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது

*

இரண்டுநாட்களாக கண் ஒவ்வாமை நிலைமீண்டு காட்சிகள் தெளிவாக ஆரம்பித்திருக்கிறது. கன்யாகுமரிக் காற்று என்ன செய்யும் என்று கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது. ஆனால் கறுப்புக்கண்ணாடியில் நான் திராவிடர் இயக்க ஆதரவாளன் போலத் தெரிவதாக சொன்னார்கள். அப்படி தோற்றமளித்து வைப்போம், எதிர்காலத்திற்காக என்று நினைக்கிறேன்.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32
அடுத்த கட்டுரைமனுஷியும் வளர்ச்சியும்