இவ்வருடத்திற்கான இயல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் சுகுமாரனுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. [சுகுமாரனுக்கு இயல் விருது – 2016 ]தமிழிலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் குரல். கவிதையில் ஒரு புதியபோக்கின் ஊற்றுக்கண். சுகுமாரனுக்கு அளிக்கப்படும் இவ்விருது தமிழ்ச்சூழல் பெருமைப்படவேண்டிய ஒரு நிகழ்வு
புனைவிலக்கியத்திற்கான தமிழ்த்தோட்ட விருது சயந்தனின் ஆதிரை நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய இளைய படைப்பாளிகளில் அழுத்தமான இலக்கியப்படைப்புடன் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் சயந்தன். ஆதிரை குறித்து முன்பு சில குறிப்புகள் எழுதியிருக்கிறேன். விரிவாக எழுதவேண்டும்
கவிதைக்கான விருதை சங்கர ராமசுப்ரமணியன் ஆயிரம் சந்தோஷ இலைகள் தொகுதிக்காகப் பெறுகிறார். எளியநிகழ்வுகளை மெல்ல திருப்பி ஒளிக்குக் காட்டுவதனூடாக படிமமாக ஆக்கும் கலை நிகழும் கவிதைகள் அவருடையவை.
மொழியாக்கத்துக்கான விருதை சிங்கள மொழியிலிருந்து ’இறுதி மணித்தியாலம்’ என்னும் மொழியாக்கத்தைச் செய்தமைக்காக ரிஷான் ஷெரீஃப் பெறுகிறார்.
என் பிரியத்துக்குரிய மிஷ்கின் கலைத்துறை பங்களிப்புக்காக விருதுபெறுகிறார். அவருடைய தனித்துவம் கொண்ட திரைமொழி இவ்விருதை பெற்றுத்தந்துள்ளது
அனைத்துவகையிலும் நிறைவடையச் செய்யும் விருதுகள் இவை. விருதுபெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெயமோகன்
சுகுமாரன் பற்றி
பிரிவின் விஷம்
விஷம் தடவிய வாள்
பூனையும் புலியும்
கண்ணீருப்பின் கவிஞன்
சுகுமாரனுக்கு இயல் விருது – 2016
ஷங்கர ராமசுப்ரமணியன்
கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்
ரிஷான் ஷெரீஃப்
அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்