மலேசியா கடிதங்கள்

l

அன்புள்ள ஜெமோ,

தங்களை சந்தித்து விடை பெறும்போது நிறைய நல்விதைகளைப் பெற்றுக்கொண்டு செல்வேன். அவ்விதைகள் அறிவுப்பரப்பில் தூவுவதற்காக மட்டும் அல்லாமல், பெற்றுக்கொள்பவரின் குறிப்பிட்ட பண்பு நலன்களின் மேம்பாட்டுக்கும் பெரிதும் தூண்டு கோலாக அமையும். ஏறத்தாழ தங்களை விரும்பி அணுகும் அனைவருக்குமே இப்படி ஒரு அனுபவம் இருக்கும்.

சிவப்புக்கண் தந்த தொடர் வேதனைகளை அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத்தான் நன்கு தெரியும், எந்த வலி வேதனையிலும் – அய்யா அப்துல் ரகுமானுக்கு அஞ்சலி குறிப்பு அனுப்ப தாமதமாகி விடக்கூடாது என்ற பரபரப்பு, கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வெண்முரசுக்குள் மூழ்கி விடுவது, உரையாற்ற அழைக்கும் நேரங்களில் வெகு சில நிமிடங்களில் I am ready என்று அங்கு தோன்றி விடுவது. கண்வலி உரைகளின் செறிவை கொஞ்சமும் பாதிக்க விடாமல் கவனமாக பார்த்துக்கொண்டது.

( ஒரு தொடர்ச்சியான Missed Call டார்ச்சரை சகித்துக்கொண்டது )

சிவப்புக்கண் – எனக்கு எதை உணர்த்தியது, தூண்டியது? தன்னை நம்பி அழைத்தவர்களை, தன்னைத் தேடி வந்தவர்களை ஒரு காலும் ஏமாற்றமடையச் செய்யக்கூடாது என்ற Extraordinary Commitment.

நிகழ்ச்சியில் யுவராஜ் சொன்னதுதான் நியாபகம் வருகிறது “ஜெயமோகன் பிறரினின்று வித்யாசமானவர் – டென்னிஸில் ரோஜர் பெடரர் மாதிரி, விரைவோட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட் மாதிரி என்று” கால்பந்தில் இத்தகைய அசாதாரணமானவர்களை குறிப்பிட ஒரு சொற்றொடர் பயன்படுத்துவார்கள் “Natural Footballer ” என்று.

எனக்குள் சொல்லிக்கொண்டேன் – நம்மவர் ஒரு Natural Writer என்று

நினைவுகளுடன்,

சபரி

சிங்கை

***

அன்புள்ள சபரி

கண்களுக்கு ஓய்வே கொடுக்கவில்லை என்பதனால் இன்னமும்கூட உறுத்தலும் நீர்வடிதலும் நீடிக்கிறது. சரியாகிவிடுமென நினைக்கிறேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

செயல் ஒரு தெப்பம் போல. அதைப்பற்றாமல் இவ்வலைகளைக் கடக்க முடியாது

ஜெ

***

வணக்கம் சார்.

எல்லா புகைப்படங்களையும் கீழே இணைத்துள்ளேன்.

1). குறுநாவல் பட்டறை – கோலாலம்பூர் ( 27-28 மே 2017 ) https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFTWJRY1gtRktwRjQ?usp=sharing

2). சுற்றுலா – கேமரன் மலை ( 30-31 மே 2017 )

https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFUW01d0pmRzZiMkk?usp=sharing
3). வழிபாடு – கூலிம் தியான ஆசிரமம் ( 01 ஜூன் 2017 )

https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFOGhUUHNLamM5RlE?usp=sharing
4). இலக்கிய கருத்தரங்கம் – கூலிம் ( 02-04 ஜூன் 2017 )

https://drive.google.com/drive/folders/0B1AWzZJ6RnIFMnIza1BYOElvdEk?usp=sharing

அன்புடன்,

இராவணன்.

***

அன்புள்ள ராவணன்,

நலம்தானே?

மலேசியா முழுக்க சாரதியாக உடன்வந்தீர்கள். ஆனால் நாம் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. உங்கள் புன்னகை நிறைந்த முகம் நினைவில் மாறாமலிருக்கிறது

ஜெ

***

முந்தைய கட்டுரையானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்
அடுத்த கட்டுரைநத்தையின் பாதை 1