ஒரு கதைக்கருவி

mm01 @ TBSC12

அன்புள்ள ஜெ..

அவ்வப்பொழுது கண்டு பிடிக்கும் தொழில் நுட்பத்தின் பிரயோகம் (?), ஊக்குவிக்கும் கட்டில்லா கருவியாக…

http://jamesharris.design/periodic/

கதைகளுக்காக ஒரு அட்டவணை.

மெண்டலீவின் பீரியாடிக் அட்டவணையை கருத்தில் கொண்டு அமைத்தது. கதைகளின் மூலக்கூறுகளை இப்படியும் புரிந்தது கொள்ளலாமே என்று தோன்றியது.

மிக எளிய தளத்தில், கதை எழுதுபவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம் என்று தோன்றியது.

அன்புடன்.

முரளி

***

அன்புள்ள முரளி

இந்தக்கருவியை பயன்படுத்தி கதை எழுத முயல்வதைப்பற்றி ஒரு சோக கதை எழுதலாம். காமெடியாக வரும்

என்ன சிக்கல் என்றால் இந்தவகையான கணித முறைமைகளை மூளையில் ஏற்றிக்கொள்பவர்களால் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாது. அவர்கள் வேண்டுமென்றால் கோட்பாட்டுவிமர்சனம் எழுதலாம்

ஜெ

***

முந்தைய கட்டுரைகலையும் அல்லதும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியவாதி வளர்கிறானா?