பெண்களின் எழுத்துக்கள்

அன்புள்ள ஜெமோ

சற்றுமுன்புதான் உங்கள் தளத்தில் கங்கா ஈஸ்வர் எழுதிய சிலநேரங்களில் சில மனிதர்கள் பற்றிய ஆழமான ஆய்வை [கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்] வாசித்தேன். உண்மையிலேயே ஜேகே பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். ஆசிரியரின் நோக்கம் என்ன என்பதை பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை என்பதுதான் அதன் மிகச்சிறந்த அம்சம் என நினைக்கிறேன். அதை ஒரு வாழ்க்கை மட்டுமே என்றுதான் கங்கா ஈஸ்வர் நினைக்கிறார். ஆகவே உண்மையான மனிதர்களைப் புரிந்துகொள்ள முயல்வது மாதிரி கங்காவையும் பிரபுவையும் வெங்குமாமவையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார். இதுதான் மிகச்சரியான வாசிப்பு.

இங்கே தமிழில் இலக்கியம் என்பது அந்த ஆசிரியரால் cobble செய்யப்படுவது என்ற எண்ணம் உண்டு. அதனால் எந்த எழுத்தையுமே ஆசிரியன் ஏன் இதைச் செய்கிறான் என்றே பார்க்கிறார்கள். அந்த அறிவிஜீவிநோய் இல்லாமல் நேரடியாக எழுதப்பட்டிருப்பதனால் தான் அவர்கள் எவரும் செல்லமுடியாத ஆழங்களுக்கு இக்கட்டுரை சென்றிருக்கிறது. வாழ்த்துக்கள்

சத்யமூர்த்தி

 

SR

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தில் பொதுவாகவே பெண்கள் அபாரமான வீச்சுடன் எழுதுகிறார்கள். அல்லது அவர்களை நீங்கள் முன்வைக்கிறீர்கள். நான் தனிப்பட்டமுறையில் சுசித்ராவின் வாசகன். ஒருநாள் முழுக்க அமர்ந்து சுசித்ரா வாசித்து எழுதிய கட்டுரைகளை வாசித்தபோது தமிழில் அவருக்கு சமானமாக எழுதும் அறிவுஜீவிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அடைந்தேன். ஆழமான விரிவான வாசிப்பும் படைப்புக்களைக் கூர்ந்து வாசிக்கும் கவனமும் உள்ளன. அதேசமயம் சில்லறை அரசியலை அல்லது கோட்பாடுகளை நோக்கிச் செல்வதும் இல்லை. அரசியல் இல்லாத வாசிப்பு என்பதனாலேயே அவை மிகமிகப் புதுமையாக உள்ளன. அதேபோல பிரியம்வதாவின் வாசிப்பும் சாரதாவின் வாசிப்பும் மிக நுட்பமானவை. சமீபமாக எழுதிய கங்கா ஈஸ்வரின் கட்டுரையையும் அவ்வாறே சொல்லலாம். இந்த வாசகிகள் தொடர்ந்து பொதுவெளியில் எழுதவேண்டும்,

எஸ், ஆறுமுகம்

***

அன்புள்ள ஜெ,

சுசித்ராவின் கடிதங்களையும் குறிப்புகளையும் ஒரே தொகுப்பாக அளித்திருக்கிறீர்கள். அது மிக உதவியாக இருந்தது. அவருடைய பார்வையை முழுமையாகவே பார்க்கமுடிந்தது. நிதானமான அணுகுமுறையும் கூர்மையான பார்வையும் அவரிடமிருக்கிறது. சொல்லவந்ததை மிகத்தெளிவான மொழியில் சொல்கிறார்கள். உங்கள் தளத்தில் சுபஸ்ரீ, சாரதா, பிரியம்வதா, கங்கா போன்றவர்கள் தொடர்ந்து எழுதுவதைப்பார்க்கிறேன். இவர்கள் வேறு இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதவேண்டுமென விரும்புகிறேன்.

திவ்யா மகாதேவன்

***

=================================================================

சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா

மலர் கனியும் வரை- சுசித்ரா

=================================================

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்

===================================================

சுசித்ரா கடிதங்கள்

மலர் கனியும் வரை- சுசித்ரா

செவ்வியலும் இந்திய இலக்கியமும்

கன்னியாகுமரி 3, -பெண்ணியம்

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்

கன்யாகுமரி கடிதங்கள்

நீலஜாடி -கடிதம்

கால்கள், பாதைகள்

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!

கொற்றவையின் தொன்மங்கள்

தாயார் பாதமும் அறமும்

வெள்ளையானையும் கொற்றவையும்

========================================================

ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் 

கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்

ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை

============================================

மேலும் இரு சிறுகதைகளைப் பற்றி…

மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25
அடுத்த கட்டுரைஎனது கணவனும் ஏனைய விலங்குகளும்