குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்

1

ஜெ அவர்களுக்கு

வணக்கம்.

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் உரை கேட்டேன்.

வித்தியாச அனுபவம். அமைதியாக பேசினீர்கள். கவிஞரின் வேடம் குறித்து பேசியது புதிய கோணமாய் இருந்தது.  எனக்குள் பல கவிஞர்களின் கவிதையையும், புகைப்படத்தையும் மனதில் ஓட விட்டேன். சென்ற வருடம் குமரகுருபரன் கவிதை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியது, கவிதை பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. இந்த விழா உரை வேறு ஒரு தளத்தில், கவிதைகள் பற்றி அமைந்தது.

புதிய கவிஞர்களை மனதார பாராட்டி பெருமைப்படுத்துவதில், அறிமுகப்படுத்துவதில் தமிழ் இலக்கிய உலகில் உங்கள் பங்கு முக்கியமானது. சபரிநாதன் பற்றி நீங்கள் கூறியது, அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பல இளையவர்களுக்கு உற்சாகமாய் இருக்கும்.

2

உங்களுடைய உரை, ஒரு சூத்திரம் போல, அழகான சித்திரம் போல் கச்சிதமாக அமைந்திருந்தது,

நன்றி..

பவித்ரா.

3

ஜெமோ,
ஆம். குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் உங்களை முதன்முதலாக நேரில் பார்த்ததும் எனக்குக் கிடைத்தது இந்த தரிசனம் தான். ஆடை, ஆபரணங்களற்ற அசலான சிற்பத்தைக் காண்பது தான் “நிர்மால்ய தரிசனம்” என்று நீங்கள் கவிஞர்களை அவதானிக்கும் விஷயத்தை இக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.

நான் உங்களைப்பற்றி வைத்திருந்த  எந்த ஒரு பிம்பத்தையும் கொஞ்சம்  கூட தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்காமல் நிர்மால்யமாக காட்சியளித்தீர்கள். விஷ்ணுபுரத்தின்,  “சாதரணமானவர்களைத் தான் மக்கள் தலைவர்களாக்குகிறார்கள். பின்பு அவர்களை அசாதாரணமவர்களாக்கி வணங்குகிறார்கள்”  என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

4

” ….என்ன எப்படி இருக்கீங்க?”  என்று வாஞ்சையாக  என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள்.  கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற்களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ  என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்?”

உங்கள் தளத்தில் வெளியிட்ட என்னுடைய கடிதங்கள், என்னை எழுதத்தூண்டும் உங்களுடைய எழத்துக்கள் மற்றும் தடம் தொடர்  குறித்து பேசியதில் சிறிது நேரம் பரவசம் நீண்டது.  அதற்குள் என் தோளுக்குப் பின்னாலிருந்து இரு கைகள் உங்களுடன் குலுக்கிக் கொள்ள நீணடது. அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நானகாவது வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.
5
விழாவின் நாயகன் சபரிநாதன் வந்ததும் அவரோடு சென்று அமர்ந்து விட்டீர்கள். தேவதேவனும், அசோகனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். மனுஷ்யபுத்ரன் வந்ததும் கூட்டம் தொடங்கியது.

முதல் கியரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் வணடியைப் போல நிகழ்வுகள் பயணிக்கத் தொடங்கின.  கொஞ்சம் கொஞ்சமாக நான் உங்கள் மீது கொண்டிருந்த பிம்பங்களும் உங்களிடமிருந்து உயிர்த்தெழ ஆரம்பித்தன. மனுஷ் பேசுவதற்கு முன் சபரிக்கு விருது வழங்கச் செய்தது, மேடையில் இருக்கும் speaker deskல் Mike with stand போடச் சொன்னது, இடையில் ஒலித்த தேவதேவனின் mobile phoneஐ கோபமாக  silent modeலோ அல்லது அணைத்தோ போட்டது என உட்கார்நது கொண்டே பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தீர்கள்.
6
குமரகுருபனைப் பற்றி மனுஷ் பேச ஆரம்பித்ததும் மனம் கனத்து சோர்வு அடைய ஆரம்பித்தது. சபரியின்  கவிதைகள் அவருடைய திரையை (canvass) வேகமாக விரிக்க முயலும் போது எழும் ஒலிகள் என மனுஷ் குறிப்பிட்டது அருமை. கவிதை இல்லா இடமில்லை என்றார் தேவதேவன். அசோகனின் பேச்சில் Bacardiன் நெடி  அதிகமாக இருந்தது. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Top gearல் வேகமெடுக்க ஆரம்பித்தது நீங்கள் பேச ஆரம்பித்ததும். கவிஞர்களைப் பற்றிய உங்களுடைய பார்வை, குமரகுருபனுடைய கவிதைகள் மற்றும் சபரி எனும் இளம் ஆளுமை என உங்கள் உரையை அருமையாகத் தொகுத்திருந்தீர்கள். உரையினுள் செல்லச் செல்ல நான் முன்னர் கொண்டிருந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தீர்கள். சற்று முன் என்னிடம் வாஞ்சையாக கை குலுக்கியவர் தானா இவர் என்று எண்ணினேன். நீங்கள் அசாதாரணமவரும் கூட என உணர ஆரம்பித்தேன்.
7
“காட்டை நிரப்பும் மனது….” என்ற கவிதை வரிகள் வழியாக குமரகுருபனை நினைவு கூர்ந்தீர்கள். அதைப்போலவே அறை முழுவதும் சிதறிப் பரவி நிறைத்திருந்தீர்கள் உங்கள் உரை மூலம்.  “எவற்றின் மலரகள் நாம்…” என்ற குமரகுருபனின்  வரியை நினைவு கூர்ந்தபோதெல்லாம் மௌனியின் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்….” எனற வரி என் முன் நிழலாடியது.

சபரிக்கு வழங்கும் இந்த விருது வளரும் கவிஞனை  தட்டிக் கொடுப்பதற்காக அல்ல. வளர்ந்த  கவிஞனை அங்கீகரிப்பதற்காக என்று ஆணித்தரமாக கூறியது விஷ்ணுபுரம் விருதுகளின் கறார்தன்மையை பறைசாற்றியது. இதைக்கேட்டதும் எழுந்த கைத்தட்டல்கள் அடங்க வெகுநரமாயிருந்தது.

9

சபரியின் கவிதைகளை உலோகத்தை தணணீரில் கலக்கும் ஆயுர்வேத வைத்தியத்தின் உவமையுடன் பொருத்தி விளக்கியது உங்களுக்கே உரிய புனைவுத் திறன். It is very analytical too. நீங்கள் பேசிய அனைத்தையும் இங்கே என்னால் கொணடுவர முடியவில்லை. அருவி மாதிரி பொழிந்து விட்டு போய்விட்டீர்கள். ஒன்றை எடுத்து அவதானிப்பதற்குள் மற்றொன்று. முழுவதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. உங்கள் உரையின் காணொளி பதிவேற்றத்திற்காக காத்திருக்கிறேன்.

*

குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் உங்களை முதன்முதலாக நேரில் பார்த்ததும் எனக்குக் கிடைத்தது இந்த தரிசனம் தான். ஆடை, ஆபரணங்களற்ற அசலான சிற்பத்தைக் காண்பது தான் “நிர்மால்ய தரிசனம்” என்று நீங்கள் கவிஞர்களை அவதானிக்கும் விஷயத்தை இக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.
நான் உங்களைப்பற்றி வைத்திருந்த  எந்த ஒரு பிம்பத்தையும் கொஞ்சம்  கூட தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்காமல் நிர்மால்யமாக காட்சியளித்தீர்கள். விஷ்ணுபுரத்தின்,  “சாதரணமானவர்களைத் தான் மக்கள் தலைவர்களாக்குகிறார்கள். பின்பு அவர்களை அசாதாரணமவர்களாக்கி வணங்குகிறார்கள்”  என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

” ….என்ன எப்படி இருக்கீங்க?”  என்று வாஞ்சையாக  என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள்.  கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற்களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ  என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்?”

1
உங்கள் தளத்தில் வெளியிட்ட என்னுடைய கடிதங்கள், என்னை எழுதத்தூண்டும் உங்களுடைய எழத்துக்கள் மற்றும் தடம் தொடர்  குறித்து பேசியதில் சிறிது நேரம் பரவசம் நீண்டது.  அதற்குள் என் தோளுக்குப் பின்னாலிருந்து இரு கைகள் உங்களுடன் குலுக்கிக் கொள்ள நீணடது. அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நானகாவது வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.

விழாவின் நாயகன் சபரிநாதன் வந்ததும் அவரோடு சென்று அமர்ந்து விட்டீர்கள். தேவதேவனும், அசோகனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். மனுஷ்யபுத்ரன் வந்ததும் கூட்டம் தொடங்கியது.

முதல் கியரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் வணடியைப் போல நிகழ்வுகள் பயணிக்கத் தொடங்கின.  கொஞ்சம் கொஞ்சமாக நான் உங்கள் மீது கொண்டிருந்த பிம்பங்களும் உங்களிடமிருந்து உயிர்த்தெழ ஆரம்பித்தன. மனுஷ் பேசுவதற்கு முன் சபரிக்கு விருது வழங்கச் செய்தது, மேடையில் இருக்கும் speaker deskல் Mike with stand போடச் சொன்னது, இடையில் ஒலித்த தேவதேவனின் mobile phoneஐ கோபமாக  silent modeலோ அல்லது அணைத்தோ போட்டது என உட்கார்நது கொண்டே பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தீர்கள்.

2
விழா அமைப்பாளர்கள் சுரேஷ்பாபு, சௌந்தர், ராஜகோபாலன்- கவிதா சொர்ணவல்லியுடன்

குமரகுருபனைப் பற்றி மனுஷ் பேச ஆரம்பித்ததும் மனம் கனத்து சோர்வு அடைய ஆரம்பித்தது. சபரியின்  கவிதைகள் அவருடைய திரையை (canvass) வேகமாக விரிக்க முயலும் போது எழும் ஒலிகள் என மனுஷ் குறிப்பிட்டது அருமை. கவிதை இல்லா இடமில்லை என்றார் தேவதேவன். அசோகனின் பேச்சில் Bacardiன் நெடி  அதிகமாக இருந்தது. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Top gearல் வேகமெடுக்க ஆரம்பித்தது நீங்கள் பேச ஆரம்பித்ததும். கவிஞர்களைப் பற்றிய உங்களுடைய பார்வை, குமரகுருபனுடைய கவிதைகள் மற்றும் சபரி எனும் இளம் ஆளுமை என உங்கள் உரையை அருமையாகத் தொகுத்திருந்தீர்கள். உரையினுள் செல்லச் செல்ல நான் முன்னர் கொண்டிருந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தீர்கள். சற்று முன் என்னிடம் வாஞ்சையாக கை குலுக்கியவர் தானா இவர் என்று எண்ணினேன். நீங்கள் அசாதாரணமவரும் கூட என உணர ஆரம்பித்தேன்.

“காட்டை நிரப்பும் மனது….” என்ற கவிதை வரிகள் வழியாக குமரகுருபனை நினைவு கூர்ந்தீர்கள். அதைப்போலவே அறை முழுவதும் சிதறிப் பரவி நிறைத்திருந்தீர்கள் உங்கள் உரை மூலம்.  “எவற்றின் மலரகள் நாம்…” என்ற குமரகுருபனின்  வரியை நினைவு கூர்ந்தபோதெல்லாம் மௌனியின் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்….” எனற வரி என் முன் நிழலாடியது.
b
சபரிக்கு வழங்கும் இந்த விருது வளரும் கவிஞனை  தட்டிக் கொடுப்பதற்காக அல்ல. வளர்ந்த  கவிஞனை அங்கீகரிப்பதற்காக என்று ஆணித்தரமாக கூறியது விஷ்ணுபுரம் விருதுகளின் கறார்தன்மையை பறைசாற்றியது. இதைக்கேட்டதும் எழுந்த கைத்தட்டல்கள் அடங்க வெகுநரமாயிருந்தது.

சபரியின் கவிதைகளை உலோகத்தை தணணீரில் கலக்கும் ஆயுர்வேத வைத்தியத்தின் உவமையுடன் பொருத்தி விளக்கியது உங்களுக்கே உரிய புனைவுத் திறன். It is very analytical too. நீங்கள் பேசிய அனைத்தையும் இங்கே என்னால் கொணடுவர முடியவில்லை. அருவி மாதிரி பொழிந்து விட்டு போய்விட்டீர்கள். ஒன்றை எடுத்து அவதானிப்பதற்குள் மற்றொன்று. முழுவதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. உங்கள் உரையின் காணொளி பதிவேற்றத்திற்காக காத்திருக்கிறேன்.

4

ஆனால் மனதில் நின்றவை, மரணம் தரும் சோர்வுகளிலிருந்து மீளும் உங்களுடைய உழைப்பு, குமரகுருபனின் “கனவுகளிலிருந்து மீளமுடியாதவனை” நினைவு படுத்தியது, சபரியை சமீப காலத்திய மிகச் சிறந்த கவி ஆளுமை என ஆணித்தரமாக நிறுவியது.

முதல் தொகுப்பு தேடல். இரண்டாம் தொகுப்பு தேடலைக் கண்டடைந்ததின் உச்சம்.  இது தான் வளர்ச்சி. இதற்கு மேல் சபரி வளர்ந்தாலும், அது ஊசி முனை தூரமாக மட்டுமே இருக்க முடியும் என்றது கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளார்ந்து புரிந்து கொள்ளும் உங்கள் திறனைத் தான் வெளிப்படுத்தியது.  சபரியின் இனி வரும் படைப்புகள், அவர் இதுவரை கணடடைந்ததின் நீட்சியாகத்தான் இருக்க முடியும் எனறது உங்களின் உச்சமான “விஷ்ணுபுரத்தையும்” “பின் தொடரும் குரலின் நிழலையும்” ஞாபகப்படுத்தியது.

a

வழக்கம்போல் எதிர்பாராமல் உரையை முடித்து அதி வேகத்தில் பயணித்த வணடியிலிருந்து குதித்து விட்டீர்கள். இனி சபரி முறை.  மிக லாவகமாக “கவிதையால் என்ன பயன்” என்ற கவிதை வாசிப்பின் மூலம் driver seatல் அமர்நது கொண்டார். தனது பதற்றத்தை மறைத்த சன்னமான குரல் மூலம் படிப்படியாக வணடியின் வேகத்தைக் குறைத்து நிகழ்ச்சியை முடிவுக்கு கொணடு வநதார்.

வழக்கம்போல், விஷ்ணுபுரம் இலக்கிய வாசக வட்டத்தினரின் “செய்வன திருந்தச் செய்” attitude மொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்தது.

3

நிகழ்ச்சி முடிந்த மறு நொடியே ராஜபார்வை கமல் போல கறுப்பு நிற coolers அணிந்து கொண்டு நீங்கள் செய்த atrocity (உங்களின் மீசைக்கு விளக்கம் கொடுத்தது) மறுபடியும் உங்களை சாதரணமானவராக்கியது. என்ன மாதிரியான ஆளுமை நீங்கள் என்று வியக்கிறேன். உங்களை ஒரு சட்டகத்தில் பொறுத்திப் பார்க்க முடியவில்லை. நதி போல் பரவி நிறைந்து வழிந்து ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்.

அடுத்து உங்களை எப்போது காண்பேன் என்ற நினைவுகளோடு, விடை பெற மனதில்லாமல் விடை பெற்று, வடபழனி மெட்ரோ இரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அன்புடன்
முத்து

muttu

photos

சுதர்சன் ஹரிபாஸ்கர்
சுருதி டிவி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20
அடுத்த கட்டுரைவெற்றி கடிதங்கள் 11