உரைகள்

Jaya mohan,writer in his home at Nagarkovil,Tamilnadu

ஜெ அவர்களுக்கு

வணக்கம்..

ஜெ,

உங்களுடைய உரைகள் நிறையக் கேட்டேன்.. யூ டியூபில் கிடைத்தது.. பல தலைப்புகளில் உங்கள் ஆளுமை மிளிர்கிறது.. அவசியம் சொல்ல வேண்டும் என்று நினைத்தது, டச் ஸ்கிரீன் கவிதை பற்றி பேசிய உரை.. மிக அழகாக கவிதைகள் குறித்த ஒரு சரியான பார்வையை ஏற்படுத்தி விட்டீர்கள்..

மிகவும் ரசித்தது.. அராத்து புத்தக வெளியீட்டு விழா பேச்சு… அத்தனை இலகுவாக தாங்கள் இதுவரை பேசவே இல்லை என்று தோன்றியது..

நன்றி

பவித்ரா

***

அன்புள்ள ஜெ

உங்கள் உரைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் உங்கள் மென்மையான குரல் நீங்கள் பேசும் விஷயங்களுடன் சம்பந்தமில்லாமல் ஒலிப்பதாகத் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் பின்னர் அது செவிக்குப்பழகிவிட்டது. அதன்பின்னர் இப்போது உங்கள் எழுத்துக்களை படிக்கும்போதும் உங்கள் குரலே காதில் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அது ஒரு நல்ல அனுபவம்

உங்கள் உரைகளில் எனக்கு மிகவும் பிடித்தது குறுந்தொகைபற்றிய உரைதான். அது சங்க இலக்கியம்பற்றிய என்னுடைய மனநிலையையே தலைகீழாக ஆக்கிவிட்டது

மாதவி சுகுமார்

என் உரைகள், காணொளிகள்

முந்தைய கட்டுரைஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைசொல் -கடிதங்கள்