சொல் -கடிதங்கள்

word

சொல்! சொல்!

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

சொல் சொல் கட்டுரையில் தமிழ் சொல் ஆராய்ச்சிகளை கிண்டல் செய்யும் உங்கள் அகம்பாவத்தை கண்டு இதை பகிர்கிறேன். உங்கள் நாள் இனிமையானதாக அமையட்டும்.

அபுனைவாக ஏதாவது படிக்கலாம் என்று இந்த வார இறுதியில் தேடினேன். ஒரு வருடத்துக்கு மேலாகவே நியூஸ்ஹன்ட் மற்றும் கிண்டலில் செயலியில் பரிந்துரையாக வந்து கொண்டு இருந்தது .

குமரி கண்டமா சுமேரியமா என்ற நூல்.

புத்தகம் திறந்த இரண்டாவது நொடியே என்ன வாழக்கை வாழுகிறேன் நான் இது எல்லாம் தெரியாமல் என்று தீவிர மனசோர்வுக்கு சென்று பின் அதிலேயே மூழ்கி புத்தகத்தை படித்து முடித்தேன்.

ஆசிரியர், தமிழர்கள் கடல் வழியாக வந்த சுமேரியர் என்றும், ஆரியர் பின் நடந்து வந்தவர்கள் என்றும் ஆணித்தரமாக சங்கபாடல் முதல் மரபணு அறிவியல் வரை, சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தையும் கொண்டு நிறுவி உள்ளார்.

உதரணத்துக்கு,

* மார்த்துக் என்ற தெய்வம் உருவாகிய நகரம் மதுரை. சுமேரியாவில் உள்ள எரிது நகரத்தின் அடைமொழி இனிமையானவர்கள் வாழுமிடம். இனிமை = மது, வாழுமிடம் = உறை, மதுறை மருவி மதுரை.

* யூபிரிட்ஸ் (பகுருளி), டைகிரிஸ்(குமரி ஆறு) இரண்டு ஆறும் கவட்டை போல் பாய்வதால் அதன் மையத்தில் அமைந்த நகரம் கவாடபுரம் என் ஆகி பின் கபாடபுரம் ஆகிற்று.

*சுமேரியரின் வேல் கானூஸ் தான் தமிழரின் முருகன்.

*மன்னன்அலுலிம் என்பது அழுலி, பின் வழுதி என் ஆகி அவனே காய்சின வழுதி.

*மன்னன் தரை வழியாக புறப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததே ஆற்றுபடுத்தபட்ட மக்கள் என்றும் பின் மருவி ஆரியர் என்றும் ஆயிற்று.

*இன்னும் பல பல ஆய்வுகள், முத்தாய்ப்பாக ஆசிரியரின் வீட்டில் உள்ள திருநீறு கொட்டி போலவே சுமேரியாவில் கிடைத்த ஒரு அகழ்வாராய்ச்சிபண்டம் . இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

இப்போது சொல்லுங்கள், தமிழ் சொல் ஆராய்ச்சி அவ்வளவு விளையாட்டு போல் தெரிகிறதா அய்யா?

என்றும் அன்புடன்,

பிரதீப்.


kathir

 

அன்புள்ள ஜெ,

இங்கே கோவையிலும் நல்ல மழை.

உங்களை வாசிக்க தொடங்கும் முன் என் மூடத்தமிழ் வெறியால் தமிழ் மொழி சார்ந்த கண்ணில் படும் புத்தகங்களையெல்லாம் விலை கொடுத்து வாங்கி பெரும்பாலும் வாசித்து விடுவேன்.

திரு ம.சோ.விக்டர்  மற்றும்   தமிழ் மையம் ஜெகத் கஸ்பர்  (சென்னை சங்கமம் புகழ்) இணைந்து உலகின் அனைத்து மொழிகளின் மூலம் தமிழே என்ற தொனியில் நிறைய் புத்தகங்கள் வெளியிட்டனர்.

தரமான கெட்டி அட்டை,நல்ல முகப்பு ஓவியங்கள் என கண் கவர்வெளியீடு, அனைத்தும் வாங்கி நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும்.கடைசியில் ஒரு தனித்தமிழ் ஆர்வலருக்கு பரிசாக அளித்தேன்சாகுடா மகனே என்றெண்ணி.

தமிழ் மற்றும் தமிழர் நலன் கருதி இவரை ஏன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்க்கு அனுப்ப கூடாது விண்தமிழ் ஆய்வுகள் மேற்கொள்ள?

கதிர் முருகன்

கோவை

***

சொல்! சொல்!

 

முந்தைய கட்டுரைஉரைகள்
அடுத்த கட்டுரைமுரகாமி, சராசரி வாசிப்பு