கடவல்லூர் அன்யோனியம்:கடிதங்கள்

ஜெ..
கடவல்லூர் அன்யோன்யம் ரொம்ப நல்லாயிருந்தது – மொழியாக்கம் – அம்மாவும், பசும்புல் வாசமும், கன்றுக் குட்டியின் துள்ளலும் கண்களும் மனதுள் ஒரு கணம் வந்து போயிற்று. அதேபோல் சீதாராமின் மாடு தன் வால் சுழற்றலில் சூரியனை விரட்டியடிப்பது noddy என்னும் கார்ட்டூன் கதைகளை நினவுறுத்தியது – ஷாஜியின் இளையராஜா பற்றிய கட்டுரையின் மொழி பெயர்ப்பிலும் உணர்ந்திருக்கிறேன் – தமிழில் எழுதியது போலவே ஒரு ஜீவன் – உம் அம்மாவும் வலக்கரத்தில் முத்தமிட்டிருக்கவேண்டும். 20 ஆண்டுகள் ஈரோட்டில் வசித்தும், அருகிலுள்ள ராசிபுரம் மலையை அறிந்ததில்லை. தண்டேன் நுகரா மண்டூகம்!!

அன்புடன்
பாலா

அன்புள்ள பாலா
அப்படி ஒரு பெயரும் உங்களுக்கு உண்டா என்ன? சொல்லவே இல்லையே

88

அன்புள்ள ஜ
யாக்கூப் அவர்களின் கவிதையும் சீதாராமின் கவிதையும் மிகச்சிறப்பாக இருந்தன. என் அம்மாவின் தொப்புள்கொடி சாதாரண அரிவாளால் அறுக்கப்பட்டது ஆகவே என் சொற்களில் கூர்மை என்ற வரி மிக தீவிரமானது. அதைப்போல போய் மறையும் சூரியன் கடைசியில் கோலத்தில் பூவாகவும் கழுத்து மணியில் கடைசி ஒளியாகவும் மிஞ்சுவதும் அற்புதமான கற்பனை. அருமையான விஷுவல். நல்ல கலைஞர்களுக்கு உரிய கண் அத
ஞானம
888

அன்புள்ள ஜெ
கடவல்லூர் அன்யோனியம் கட்டுரை படித்து சில விஷயங்களைச் சிந்திக்க முடிந்தது. நம் நாட்டிலும் வேத பரிஷத்துகள் இருந்தன. சில பாடசாலைகள் இப்போதும் இருக்கின்றன. அந்த ஞானத்தை ஒரு சாதிச்சடங்காக அல்லாமல் ஆக்குவதற்கு என்ன தடை இங்கே உள்ளது? யார் தயங்குகிறார்கள்? நான் நினைப்பது என்னவென்றால் இங்கே உள்ள பிராமணர்கள் ஒரு சிறுபான்மை அச்சத்திலே உள்ளனர். முஸ்லீம்களிடம் இருக்கும் அதே அச்சம். அச்சம் கொண்ட சமூகம் அடிப்படைவாதம் நோக்கிச் செல்லும் என்பதை நாம் அறிவோம். இங்கே பிராமணச் சாதியில் பெரும்பகுதி ரகசியமான அடிப்படைவாதம் நோக்கிச் சென்றிருக்கிறது. ஆகவேதான் கடவல்லூர் அன்யோன்யம் போன்ற நிகழ்ச்சிகள் இங்கே நடக்க முடியவில்லை. இங்கே உள்ள திராவிட இயக்கம் அவர்களை அச்சுறுத்தி அவமானப்படுத்தி அந்த எல்லை நோக்கி தள்ளுகிறது. அதை கேரள மார்க்ஸிஸ இயக்கம் செய்யவில்லை என்று தெரிகிறது. ஆகவேதான் அந்த சபையில் மார்க்ஸிஸ¤டுகளும் கலந்துகொள்ளுகிறார்கள் என்று நினைக்கிறேன்
ராஜேந்திரன்
சென்னை

கடவல்லூர் அன்யோன்யம்

முந்தைய கட்டுரைபார்வதிபுரம் மணி
அடுத்த கட்டுரைதோன்றாத்துணை:மேலும்கடிதங்கள்