படைவீரன் -கடிதங்கள்

 

padai

அன்பு ஜெ ,

 

ஊட்டி சந்திப்பும் புகைப்படங்கள் பார்த்தேன் சிரிப்பும் தீவிரமும் நட்பும் இணைந்த முகங்கள் .நிறைய புது முகங்கள் , கலந்துகொண்ட நண்பர்களும் மிக உற்சாகமான அனுபவங்களாகவே பகிர்ந்துகொண்டனர்.

 

தனாவின் படைவீரன் விழாவும் ஒரே நாளில் அமைந்தது சிலர் கலந்துகொள்ள இயலாது போயிருக்கிறது . பட விழாவில் தனா உங்களுக்கும் விஷ்ணுபுர நண்பர்களுக்கும் தனது நன்றியை உரித்தாக்கியிருந்தார் .

 

படைவீரன் பாடல்களை தனா பகிர்ந்திருந்தார் , பாடல்கள் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

 

https://m.youtube.com/results?q=padai%20veeran%20songs&sm=1

 

சினிமாவில் முதல் முயற்சிகள் எவ்வளவு பதட்டமானவை என்று நீங்கள் அறிந்திருப்பீர். தனாவின் முதல் முயற்சி குறித்து நீங்கள் ஒரு சிறு குறிப்பு எழுதினால் அது பெரும் ஊக்கமாகவும் ஆசியாகவும் இருக்குமென்று நம்புகிறேன்.

 

அன்புடன்

கார்த்திக்

 

அன்பின் ஜெ,
சமீபத்தில் நம் நண்பர் தானாவின் படைவீரன் ஆடியோ பட ரிலீஸ் யூடுப் வீடியோ பார்த்தேன் …. தவறிக்க முடியாத காரணங்களால் நம் ஊட்டி இலக்கிய முகாம்  போதே அந்த நிகழ்வும் ….நம் நண்பர்கள் யாரும் கலந்து கொள்ள இயலவில்லை …அந்த சபையில் உங்கள் பெயர் சொல்லி தானா பேச  துவங்கும் போது சந்தோசமாய் இருந்தது … நான் அறிந்த வரை இது பெரும் முயற்சி… சொந்த தயாரிப்பு … பாடல்கள் நான் அறிந்த வரை நல்ல ரீச் உண்டு…. ஆடியோ ரிலீஸ் வீடியோவை  உங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன் …

விஜய் சூரியன்

 

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–95
அடுத்த கட்டுரைசூல் –ஒரு பார்வை