இஸ்லாம் அச்சம்

islam

ஜெ

இஸ்லாமியர்களுக்கு வீடு என்னும் கட்டுரையில் இஸ்லாமியர் குறித்த அச்சம் உங்களுக்கு உண்டு என எழுதியிருந்தீர்கள். அது என்னை மிகவும் புண்படுத்தியது. உங்கள் வாசகன் என்றமுறையில் இதை எழுதுகிறேன்.

எம்.ஹஸன்

***

அன்புள்ள ஹஸன்

அந்தக்கட்டுரையிலேயே நீங்கள் ஒன்றைப் பார்க்கலாம். நான் எப்போதும் மரபார்ந்த இஸ்லாமியருக்கு மிக அணுக்கமாகவே இருந்துவருகிறேன். குமரிமாவட்டத்தில் அப்படித்தான் வாழவும் முடியும். என் தந்தையின் தோழர் உம்ரா சென்றால் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி வணங்கி ஆசிபெறாமல் இருக்கமுடியாது இங்கே. இங்கே உள்ள கலாச்சாரம் இது. எழுத்தாளன் என்றவகையிலும் பலநூறு இஸ்லாமியநண்பர்கள் எனக்குண்டு. இருபதாண்டுகளுக்கும் மேலான நட்புகள்.

இஸ்லாம் இந்தியப் பண்பாட்டின் ஒரு பகுதி. வரலாறு அப்படித்தான், நாம் அதை மாற்ற முடியாது. இஸ்லாமியருக்கு இடமில்லாத அரசோ, அரசியலோ, இலக்கியமோ, தத்துவமோ இந்தியாவில் இருக்க முடியாது. எந்நிலையிலும் இஸ்லாமியருடன் இணைந்து மட்டுமே பிற இந்தியர் வாழமுடியும்.

இந்தியாவில் வரலாற்றுக்காலத்தில் இந்து முஸ்லீம் உறவு இருந்ததா என்று சிலர் கேட்பதுண்டு. வரலாற்றுக்காலத்தில் இந்துக்களிலேயே ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் நல்லுறவு இருந்ததில்லை. இன்றுள்ள இந்த நல்லுறவு நூறாண்டுகளாக மெல்ல மெல்ல உருவானது. நம் ஜனநாயகத்தின் ஒரு பகுதி இது. இந்தப் பண்பாடு பேணப்படவேண்டும்.

அந்தப் பண்பாடு இன்று எப்படி மிகச்சிலரால் அச்சமூட்டுவதாக ஆக்கப்படுகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். ஒரு மரைக்காயர் பண்பற்றவராக இருந்தால் பிறர் அதிர்ச்சி அடையக்கூடிய சூழல் இங்கே இருந்தது. இன்று பொதுவெளியில் இஸ்லாமியரின் குரல்கள் என எழுபவை என்ன?

ஒரு பத்துநாளில் எனக்கு வந்த உச்சகட்ட வெறுப்புக் கடிதங்கள், மிரட்டல்களை நான் வெளியிட்டால் அதை நம்ப மாட்டீர்கள். மேலும் பொதுவெளியில் அவை வெளிவரக்கூடாது. பொதுவெளியில் வந்த ஒன்றை சான்றுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

இதோ ஆளூர் ஷாநவாஸ் என்பவரின் முகநூல்பதிவு. ஊடகங்களில் இவர்தான் இன்று இஸ்லாமின் முகம். நான் என் முழு அகந்தையும் பணிய வணங்கும் கொடிக்கால் ஷேக் அப்துல்லா போன்றவர்கள் அல்ல. நான் கொள்ளும் அச்சத்தை  தன் வெற்றி என இவர் நினைக்கிறார். இதன்கீழே உள்ள ‘கமெண்டு’களைப்பாருங்கள். நான் இறந்தாகவேண்டும் என்றுவரை அறைகூவுகின்றது வெறுப்பு. நான் அஞ்சுவது இதைத்தான். நான் மட்டும் அல்ல சராசரி இந்துக்கள் அனைவருமே.

இந்துக்களின் இந்த அச்சத்தை இஸ்லாமியர் தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும். இந்து மதத்தை, தெய்வங்களை பொதுமேடையில் அவமதிப்பதன் அரசியல் பின்விளைவை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் பின்னூட்டங்களிலேயே நீங்கள் அதைப் பார்க்கலாம். அனைத்து இந்துக்களையும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்நோக்கித் தள்ளுவது இந்த வெறுப்பரசியல். அதன் இழப்பு இஸ்லாமியருக்கே. அதன் விளைவென்ன என்று அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் பார்த்திருக்கக்கூடும்.

வெறுப்பு இஸ்லாமியரை விலக்கும். விலக்கம் அவர்களை அரசியலில் இருந்து அகற்றும். குறுங்குழு அரசியல் நோக்கிக் கொண்டுசெல்லும் அரசியலதிகாரத்தை இஸ்லாமியர் இழப்பார்கள் என்றால் அனைத்துத் தளங்களிலும் அவர்கள் பின்னடைவுதான் பெறுவார்கள்.  கனிந்த உள்ளம் கொண்ட இஸ்லாமியப்பெரியவர்களுக்குப் பதிலாக வெறுப்பின் மொழியில் பேசும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தங்கள் முகமாக ஊடகங்களில் நிறுத்துவதை இஸ்லாமிய சமூகம் மறுபரிசீலனை செய்தாகவேண்டும்.

இஸ்லாமியர் இந்தியா என்னும் நெசவில் என்றுமிருக்கும் ஒரு இழை. அவர்கள் தங்களை இந்த வெறுப்பாளர்களுக்கு ஒப்புக்கொடுக்கக் கூடாது. நான் எழுதியது சாமானியனின் அச்சத்தை. அதைப்புரிந்துகொள்ளுங்கள். அது ஒரு எளிய இந்துவின் தாழ்மையான மன்றாடல், அவ்வளவுதான்.

-ஜெ

alur
ஆளூர் ஷாநவாஸ்

 

 

ஆளூர் ஷாநவாஸின் பதிவு

முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது அரிதாகி வருவது குறித்து ஜெயமோகன் கவலைப் பட்டிருந்தாலோ, முஸ்லிம் வெறுப்பை வெகுமக்களிடம் விதைத்து வரும் ஆர்.எஸ்.எஸ்.ஸை கண்டித்திருந்தாலோ, முஸ்லிம்களின் அரசியல் சமூக உரிமைகளுக்காக அறவழியில் போராடி வரும் பேராசிரியர் ஜவாஹிருல்லா போன்ற தலைவர்களை பாராட்டியிருந்தாலோ, உண்மையிலேயே சொல்கிறேன்; என் முதுகுத் தண்டில் ஓர் அச்சம் சிலிர்த்து பதறியிருப்பேன்.

ஏனெனில், அது ஆடு நனைவதை பற்றி ஓநாய் அழுத கதையாகியிருக்கும். அப்படி அல்லாமல், எப்போதும் போல் ஜெயமோகன் எழுதியிருப்பது கண்டு ஆறுதல் அடைந்தேன்.

“பாசிஸ்டுகள் பாராட்டினால்தான் நாம் பதறவேண்டும்” என்பது பெரியார் வாக்கு. அந்த வகையில் ஜெயமோகன் வெறுக்கிறார் எனில், முஸ்லிம்கள் சரியாகவே உள்ளனர் என்று பொருள்!
http://www.jeyamohan.in/96889#.WNzvK1hX7qB
Dr. MH. Jawahirullah

எதிர்வினைகள்

Ebrahim Ansari Masthan Samad புனிதமான எழுத்துப் பணியில் சில உள்நோக்கம் கொண்ட புல்லுருவிகள் புகுந்துவிடுவார்கள். அப்படிப் புகுந்தவர்தான் ஜெயமோகன். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் என்று சொன்னதும் முதுகுத் தண்டு சில்லிட்டது என்ற இவரது கருத்து கடும் கண்டனத்துக்குரியது. எதிரிகளால் கூட பண்பாளர் என்று போற்றப் படக் கூடியவர் பேராசிரியர். அவரைப் போய் இப்படி கணித்து வைத்திருக்கும் ஜெயமோகனை கூமுட்டை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

விரும்பு · பதிலளி · 30 · 30 மார்ச், 07:08 PM

Meejan Ilyasபத்தினி.யார்.என்று.கேட்டால்.கன்னகி சீதை. நளாயினி. பெயரை. கூறுகின்ற கிருக்கனுங்கள். தன். தாய்.மனைவி. மகள். பெயரைகூட. சொல்ல. யோக்கியதை.. அற்றவர்கள்.முஸ்லீம்களை பற்றி.பேச.அருகதை இல்லை.

விரும்பு · பதிலளி · 8 · 30 மார்ச், 07:10 PM

உஸ்மான் காசிம் இவருடைய பதிவில் “வகாபியிஸம்” எதோ தீவிரவாத இயக்கம் போல் இப்போதுள்ள சில எழுத்தாளர்கள் சித்தரிக்கிறார்கள்…. இவ்வளவு கற்பனை பயம் உள்ளவர்களை எளிதில் தெளிய வைக்க முடியாது. மனசு எல்லாம் விஷம்….

விரும்பு · பதிலளி · 2 · 30 மார்ச், 06:27 PM

Shan Shanmu ண்மை என்னவென்றால் சில இஸ்லாமியர் தவறு செய்வதால் மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்குள்ள சில தலைவர்கள் மொத்த சமுதாயத்தையும் துணைக்கு இழுத்துக்கொண்டு மறைமுகமாக தவறு செய்தவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளீர்

விரும்பு · பதிலளி · 1 · 31 மார்ச், 12:57 PM

Esan Thandavaraj இது தான் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது,,, உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்து , அதை வைத்து மதவெறியை உங்கள் பதிவை படிக்கும் முஸ்லிம்களுக்கு திணிக்காதீர்கள்,,, Aloor Sha Navas

முழுவதுமாக படிக்காமல் அரைகுறையாக உளறுவது உங்களின் தனி கலை,,, கீப் இட் அப் …

இனி ஜெயமோகன் என்ன எழுதினார் என்பதை இங்கயாவதும் படித்து தெரிந்து கொள் ஷா நவாஸ்..

============================

இஸ்லாமியர்களில் இன்றுள்ள வலுவான வன்முறை அமைப்புகளை அனைவரும் அறிவார்கள். அவ்வமைப்புகளில் கணிசமானவர்கள் கட்டைப் பஞ்சாயத்தைத்தான் தொழிலாகச் செய்கிறார்கள். இஸ்லாமியர் மீது ஐயமோ விலக்கமோ எவருக்கும் இல்லை, இருந்திருந்தால் பொதுவெளியில் எல்லா தளங்களிலும் அது வெளியாகும் அல்லவா? விலகிச்செல்வது இஸ்லாமியர்தான், உடைகளால் பேச்சுகளால் மதவெறியால். இஸ்லாமியர் மேல் அச்சம் கண்டிப்பாக உள்ளது. அந்த அச்சமே வீட்டு விஷயத்தில் வெளியாகிறது

என்னை எடுத்துக்கொள்வோம், எனக்கு இஸ்லாமியர் மேல் அச்சம் உள்ளதா? கண்டிப்பாக ஆழமான அச்சம் உள்ளது. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமிய அமைப்புகளின் பின்புலம் உள்ளவரா என பலமுறை சோதித்துப்பார்க்காமல் நான் நெருங்கவே மாட்டேன். ஒருமுறை நான் பேசவிருந்த மேடைக்கு ஜவஹருல்லாவையும் அழைக்கலாமா என என்னிடம் கேட்டனர். என் முதுகுத்தண்டில் ஓர் அச்சம் சிலிர்த்தது. பதறி விலகிவிட்டேன்..

ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய ஒரு சாதாரணமான கருத்தை நான் எழுதியபோது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் எனக்கு, ஜாக்ரதையாக இருங்கள், இதையெல்லாம் எழுதவேண்டுமா என. இந்தியப் பொதுச்சமூகம் இந்த நவவஹாபிய அமைப்புக்களை எண்ணி அஞ்சிக் கிடக்கிறது. அதை வலுப்படுத்துவது போலவே நாளும் செய்திகள் வருகின்றன. அதை காணாதது போல நடிப்பதில் பொருளே இல்லை. அது ஓரு சமூக உண்மை

அந்த அச்சத்தைப் பொதுச் சமூகத்தின் உள்ளத்தில் விதைத்த அமைப்புக்கள் எவை? பொதுச் சமூகத்தில் இத்தனை அச்சத்தை உருவாக்குபவர்களை விட்டுவிட்டு அஞ்சுபவர்களை மீண்டும் கூண்டிலேற்றுவதில் என்ன பொருள்? இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது, ஓர் இஸ்லாமியர் [மரைக்காயர்] சிறிய அளவிலான லஞ்சம் வாங்கிய செய்தி வந்தது. லஞ்சம் சாதாரணமாகப் புழங்கிய அலுவலகச்சூழலே அதிர்ச்சி அடைந்தது. “மரைக்காயர்களெல்லாம் இப்படிச் செய்வார்களா என்ன?” என பலர் கேட்டனர்.. ஏனென்றால் நேர்மையற்ற, பண்பற்ற மரைக்காயர்களை பலர் கேள்விப்பட்டே இருக்கவில்லை.

மனுஷ்யபுத்திரன் தொழில்துறையில் கொஞ்சம் விசாரித்துப் பார்க்கவேண்டும், இன்று முஸ்லீம்களுக்கு முழு முன்பணமும் பெற்றுக்கொள்ளாமல் முஸ்லீம்கள் அல்லாத எவரேனும் சரக்கு கொடுப்பார்களா என்று. அந்த மாற்றம் எங்கே வந்தது? இஸ்லாமியர்கள் நட்பானவர்கள், சொன்ன சொல்லுக்குள் நிற்பவர்கள் என்னும் பிம்பம் எப்படிச் சிதைந்தது? அதற்கு எவர் பொறுப்பு?

இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.

#ஜெயமோகன்.

விரும்பு · பதிலளி · 5 · 31 மார்ச், 09:15 PM · திருத்தப்பட்டது

ஃபிரோஸ் கான் இவர்கள் இப்படித்தான் என்று பொது புத்தியில் பொத்தி வைக்கப்படும் எதிர்மறை சிந்தனைகளே வெவ்வேறு வெறிகளை பெற்றெடுக்கிறது.

யாரையும் வெறுக்காமல் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ இயலாத கிருமிகள் பெருகி வருகிறார்கள்.

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 12:15 AM

குமரன் சுப்பையா ஷா நவாஸ்..இதை நான் சமூக ரீதியாகவும் அணுகுகிறேன். என்னை மன்னிக்கணும்.. எந்த சமூகம் எல்லாம் அமைதியான சமூகம் (சாதி) எந்த சமூகம் எல்லாம் உழைக்கும் சமூகம் என்று தமிழகத்தில் போதிக்கப்பட்டு வந்ததோ அந்த சமூகத்தில் இருந்து வந்தவர்கள் தான் நாக்கிலும் பேனாவிலும் விஷம் தடவி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும்,இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் நுட்பமாக தங்கள் வன்மத்தையும் , சாதி மத வெறியையும் உமிழ்ந்து வருகிறார்கள். ஆனால் எந்த சமூகம் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்று போதிக்கப்பட்டதோ அவர்களுக்கு இந்த நுட்பம் எல்லாம் வராது. நேருக்கு நேர் மோதுவார்கள் ஆனால் அடுத்த நிமிடம் கட்டிப்பிடித்து அன்போடு நிற்பார்கள். அவர்களால் ஒரு போதும் ஆபத்து இல்லை. இன்று ஆர்.எஸ்.எஸ் , பாரதிய ஜனதாவை மூர்க்கமாக நேருக்கு நேர் எதிர்த்தும் நிற்கிறார்கள். எனவே பொதுத் தளத்தில் சில சமூகங்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பொய்களை உம்மைப்போன்றவர்கள் தான் உடைக்க வேண்டும்

விரும்பு · பதிலளி · 2 · 31 மார்ச், 09:00 AM

Haji Faz ஜெயமோகன் காலத்தை புரிந்து வைத்துள்ளார்.. இப்படி உள்ளவர்கள் தான் இப்போது உலக நாடுகளால் கண்ணியப் படுத்தப் படுகின்றனர். பதக்கங்களும், பதவிகளும் கிடைக்கிறது… இது போன்றவர்களைதான் மேலைநாடுகள் தேடிகொண்டுள்ளது… அனேகமாக இவருக்கு ஏதேனும் உயரிய விருதுகள் இந்திய அரசால வழங்கப்படலாம்…! உங்களுக்கு விருது வேண்டுமா..? வேண்டாமா..? என்ற கேள்வியினூடே மறைமுக சக்தி ஒன்று …இது போன்றவர்களை உந்துகிறது என்றே கூறலாம்.

விரும்பு · பதிலளி · 2 · 31 மார்ச், 07:32 AM

பி.எம். இப்ராகிம் வண்டியே ஓட்டத்தெரியாத அசோகமித்ரன், டிரைவர் வேலை பார்த்ததாக சொன்னாரே அந்த ஜெயமோகனா இவர்?

விரும்பு · பதிலளி · 10 · 30 மார்ச், 06:01 PM

அம்பேத்கர் பித்தன் ஈசுவரன் தப்பு செய்தால்தான் பதறுவான் நீ தவறு செய்கிறாய் உன் பயத்தை போக்க எந்த தாயத்தும் இல்லை இஸ்லாமியரகளை தீவிரவாதி பயங்கரவாதி என்றால் இந்து தீவிரவாதி பயங்கரவாதி இல்லையா எந்த இஸ்லாமியன் சங்கரை கோகுல் ராஜை கொன்றவன் உலக பயங்கரவாதி ராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக வணங்கும் உங்களை கண்டு 37கோடிக்கு மேல் உள்ள தலித் &இஸ்லாமியர் அச்சம் கெள்கிறோம் நாட்டை சீரழிக்கும் சிந்தணை

விரும்பு · பதிலளி · 11 · 30 மார்ச், 09:04 PM

4 Replies

Gnani Tharma இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவன் பதிவைப் போடுகிறீர்களே.. மானங்கெட்ட பயல். தன்னை விளம்பரப்படுத்தி வியாபாரம் தேட முயல்கிறான். நச்சுப் பாம்பு.

விரும்பு · பதிலளி · 6 · 30 மார்ச், 06:43 PM

Jai Jayan Jayan இவன் ஒரு ஆளு, அப்ப பொண்டாட்டியும், தங்கச்சியையும் ஒரே கண்ணோட்டத்துலதான் பாப்பான் போலிருக்கு.

விரும்பு · பதிலளி · 6 · 30 மார்ச், 06:04 PM

Mohammed Iqbal இவனை பார்த்தாலே #ஓநாய் மாதிரி தான் இருக்கிறது. இவனையும் #எழுத்தாளன் என்று சமீபகாலத்தில் உங்களை போன்றவர்கள் பரப்புவது தான் காலத்தின் கோலம். நவாஸ்.

விரும்பு · பதிலளி · 1 · 30 மார்ச், 07:27 PM

Jafar Sathik பெரியாரின் வாக்கு யோசிக்க தான் தவிர வழிநடத்த அல்ல. எதிரிகளுடைய முன்புறம் தெரிந்தால் போதாது பின்புறமும் பார்த்து செயல்பட வேண்டும்.

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 08:40 AM

நல்லவனும் கெட்டவனும் கல்வியில் தீண்டாமை

கல்வியிலும் இந்த தீண்டாமை தொடருது. சிவகாசி பகுதி நாடார்கள், தேவர்கள், நாயக்கமார்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என கலந்து வாழும் ஊரு தான். இங்கு கல்வியை பொறுத்தவரை நாடார்களால் நடத்தப்படும் கல்வி கூடங்கள் தான் அதிகம். கிட்டத்தட்ட இஸ்லாமியர்கள் கூட நாடார்களின் பள்ளியில் தான் பெரும்பாலும் படித்து வந்தார்கள்.

சமீப காலங்களில், முஸ்லிம்களுக்கு நாடார் பள்ளிகளில் இடம் அளிப்பது வெகுவாக குறைக்கபடுகிறது. இந்த ஆண்டு, சிவகாசியில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் கிட்டத்தட்ட 700 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டதில் வெறும் 10-க்கும் குறைவான முஸ்லிம்களுக்கு தான் இடம் கிடைத்து உள்ளது, அதிலும் தனிச்சிறப்பு என்னவென்றால் அதில் ஒரு பெண் பிள்ளைக்கு கூட இடம் இல்லை.

எனது சொந்தகாரர் குடும்பத்தில், சிவகாசியில் உள்ள பிரபல மெட்ரிக் பெண்கள் பள்ளியில், அப்ளிகேஷன் வாங்க நிற்கும் போதே, அந்த பள்ளியின் பியூன் வந்து உங்களுக்கு இங்க இடம் இல்லமா, நீங்க கிளம்புங்க, என சொல்லியுள்ளார். மற்றவர்கள் எல்லாம் நிற்க, அவரை மட்டும் கிளம்ப சொல்லியுள்ளது அந்த பள்ளி நிர்வாகம். இப்படியான சூழல் தான் சமீப காலங்களில் நிலவுகிறது.

சிவகாசியில் (தமிழகத்தில்) என்ன நடக்குது… இதற்கு முன்னெல்லாம் இப்படி இல்லையே… இப்ப என்னாச்சு… எல்லோரும் பாஜக கட்சியில் சேர்ந்துட்டாங்களா என யோசிக்க வைக்கிறது.

நாடார்கள் கீழானவர்கள் என்கிற நிலையில் இருந்து, போராடி, எதிர்த்து நின்று, கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேறியவர்கள் தான். ஆனால் இன்று அவர்களே இன்னொரு சமூகத்திற்கு அப்படியொரு கீழ்மையை திணிக்கிறார்களோ என்ற உணர்வு உள்ளது. நான் ஒட்டுமொத்த நாடார் மக்களையும் சொல்லவில்லை, இன்றும் என் நெருங்கிய நண்பர்கள், பள்ளி தோழர்கள் எல்லாம் நாடார்கள் தான், ஒரு சில கல்வி தந்தைகள் அப்படி இருக்கிறார்கள். இனிவரும் காலம், இப்படி இல்லாத காலமாக மாறும் என்ற நம்பிக்கையை வைப்போம்…

விரும்பு · பதிலளி · 1 · 31 மார்ச், 07:15 PM

Millat Ahmad ஜெயமோகன் என்பவன் மனநோயாளி… பித்துப்பிடித்து தானே அலைந்ததாக தனது பதிவில் கூறியுள்ளான். முதுகுதண்டு இல்லாதவன். சக எழுத்தாளர்கள் மேல் காழ்ப்புணர்ச்சிக் கொண்டவன். சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர்களை விமர்சனம் செய்து காவல்துறையில் புகார் செய்யப்பட்ட ஈனப்பிறவி. இப்படிப்பட்ட பிறவியை ஈன்ற பாவத்திற்காக தற்கொலை செய்துகொண்டனர்.

விரும்பு · பதிலளி · 2 ஏப்ரல், 06:04 AM

Abdul Vahithu ஆமாம் ஜவஹிருல்லா மனிதர் அல்லவா நீ ஒரு மனிதன் போர்வையில் வாழ்ளும் மிருகம் இல்லையா உனக்கு அச்சம் இல்லை என்றால் தன் வியப்பு

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 04:02 PM

Fayaz Ahmed நம் மீது இவர்களின் அச்சம் எல்லாம் இயற்கையின் சீற்றம் வறும் போது மறைந்து விடும் மனிதாபிமானததில் உதவும்போது் பின்னர் மீண்டும் துளிர் விடும் ஆனால் எமக்கு அச்சம் எண்பது அல்லா ஒறுவனக்கே.

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 11:43 PM

Mathanagopal Santhanam Matham enbathu naam iraivanai thedum vazhi avlavu thaan…. mattrapadi naam sagotharargal thaan … entha fascist kalum ithai matraa mudiyathu ….

விரும்பு · பதிலளி · 1 ஏப்ரல், 06:59 AM

Bakshu Reshu Shame to realize as writer. Writer means aesthetic lover.but he? Religious fanaticமொழிபெயர்ப்பைக் காணவும்

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 11:12 PM

Prathap Anburaj ..tha avalavu tha evanga

விரும்பு · பதிலளி · 1 · 30 மார்ச், 05:33 PM

A Rahumath Ulla சமுதாயத்தில் மிகவும் கீழ தர மனிதர் இந்த ஜெயமோகன்

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 06:40 PM

Naseer Ahamed நீங்க வேற இதை ஷேர் செய்து பிரிபலமாக்கனுமா?

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 06:04 PM

Bajlul Rahman சமூகத்துக்கு பெரிய அறிமுகம் இல்லாத இவர்களை பற்றிய பதிவே தேவையில்லாதது.

விரும்பு · பதிலளி · 3 · 30 மார்ச், 06:11 PM

Jaheer Hussain Jayamohan மனதிலுள்ள வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்

விரும்பு · பதிலளி · 1 · 31 மார்ச், 10:04 AM

Shamsudeen Ameer ஜெயமோகன் நி மிக கேவளமனவன்

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 01:27 AM

Batcha Ibnu Malick

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 12:54 AM

Thomas Amburose நீ லூசா இல்லை லூசாங்கிறேன்.நீ எல்லாம ளெக்கெண்ணெய் எழுத்தாளன்

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 04:54 PM

Karthikeyan Kathiresan யார் இந்த jaymohhan?????

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 03:07 AM

Abdul Kader Fasturd Guy. J.m.மொழிபெயர்ப்பைக் காணவும்

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 12:36 AM

Mohammed Asif கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 06:10 PM

Basith Vadakarai இவன் ஒரு R.s.s.ஸ்லிப்பர்செல். . .

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 11:31 PM

உளுந்தூர்பேட்டை ஹாரிஸ்இவர்கள் மரணிக்கும் வரை திருந்தவே மாட்டார்கள்….

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 07:32 AM

Abu Irfhan

Translated from ஆங்கிலம்

சூப்பர் சகோதரர்அசலைப் பார்க்க

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 05:30 PM

Amanulla Musthak M தயவுசெய்து இது போன்ற மனநோயாளிகளைப் பற்றி பதிவிடவேண்டாம்

விரும்பு · பதிலளி · 1 · 30 மார்ச், 10:35 PM

நான் நாத்திகன் இல்லை ஏன் நவாஸ். இந்த மதவெறி

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 08:35 AM

Dharmaraj Dharmaraj Dharmaraj அருமை

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 06:45 PM

Esan Thandavaraj ஷூ நவாஸ் ,,, அந்த தஸ்லிமா நஸ்ரின்,,,,!!!!

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 08:03 PM

Farook Hani

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 08:05 AM

Ashagoldcovering Ashagoldcovering Super

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 10:04 PM

Farook Hani namma thappu namma thappu

விரும்பு · பதிலளி · 31 மார்ச், 08:05 AM

நான் இந்தியன் இது ஒரு வகையில் நமக்கு பலம் தான்

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 05:39 PM

Mansur Vrk Correct annaமொழிபெயர்ப்பைக் காணவும்

விரும்பு · பதிலளி · 30 மார்ச், 05:23 PM

 

===============================================================

பழைய கட்டுரைகள்

 

இஸ்லாம்-வஹாபியம்

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

உரையாடல்களின் வெளி

பஷீரும் ராமாயணமும்- கடிதம்

பஷீரும் ராமாயணமும்

வளரும் வெறி

பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி

அரசியல்சரிநிலைகள்

வஹாபியம்- கடிதம்

சூஃபியிசம்

இஸ்லாம் – கடிதம்

மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்

இந்தியா இஸ்லாம்-கடிதம்

இஸ்லாம், மார்க்ஸ்:ஒரு கடிதம்

இஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்

கொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை

உரையாடல்களின் வெளி

இரு எல்லைகள்

யாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்

யாகூப் மேமன் என்னும் தேசநாயகன்

 

 

முந்தைய கட்டுரைஅப்துல் சமத் சமதானி
அடுத்த கட்டுரைபாகுபலியின் வெற்றி