திருவாரூரில்..

thir

அன்பின் ஜெ,

வணக்கம்.

250வது ஸ்ரீ தியாகபிரம்ம ஜெயந்தி உற்சவம் 28.04.2017 முதல் 03.05.2017 வரை திருவாரூரில் நடைபெறுகிறது. அருண்மொழி அவர்களின் வீட்டாருக்கு அழைப்பு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனது தந்தையார் (“கலைமாமணி” தலைச்சங்காடு ராமநாதன்) பங்குபெறும் இசை நிகழ்ச்சி 29.04.2017 மாலை 6 மணிக்கு.

நான் பேரார்வத்துடன் கலந்துகொள்ளும் சில இசை விழாக்களில் இதுவும் ஒன்று. இம்முறை காவிய முகாம் அதனை பின்தள்ளியுள்ளது.

விழா அழைப்பிதழை தங்களின் தளத்தில் பகிர வாய்ப்பிருக்குமேயின் அது பரவலான இசை ஆர்வலர்களை சென்றடையும்.

நட்புடன்,

யோகேஸ்வரன்.

***

அன்புள்ள யோகி

இந்தமுறை அமையவில்லை. இன்னொருமுறை உங்கள் தந்தையின் நாதஸ்வர நிகழ்ச்சியைக் கேட்கவேண்டும்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஅனந்தமூர்த்தி, பைரப்பா, தாகூர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87