அழகியே- ஒரு நகல்

 

வேடிக்கையான காணொளி. என்ன வேடிக்கை என்றால் மிகமிக சீரியஸாக எடுத்திருக்கிறார்கள். சினிமா தெரிந்தவர்களால் இந்த படப்பிடிப்புக்கான செலவு என்ன என்று ஊகிக்க முடியும். ட்ரோன் , ஜிம்மிஜிப் கிரேன்  எல்லாம் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பல காட்சிகளில் விரிவான ஒளியமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்முறை படத்தொகுப்பு. தொழில்முறை நடனக்கலைஞர்கள், தேர்ந்த நடனப்பயிற்சி. டிஐ கூட செய்திருக்கிறார்கள்

 

இத்தனைக்கும் ஒரு கல்யாண வீடியோ இது.  வருங்காலக் கணவனும் மனைவியும் ஆடும் டூயட். ஒருவகையான கேனத்தனம். ஆனால் இளமை கொண்டாட்டம் என்றாலே ஒரு சின்ன கேனத்தனம் இருந்தால்தான் அழகுபோல.

 

இதில் கவனிக்கவேண்டியது என தோன்றியது சினிமா சர்வசாதாரணமாக ஆவதுதான். இதையே கணிசமானவர்கள் செய்யத் தொடங்கினால் தயாரிப்புச் செலவு குறையும். சொந்தவாழ்க்கையையே சினிமாவாக எடுத்து வைக்கலாம். இதில் உள்ள நகல்செய்யும் போக்கு இல்லாமல் ஆகும் என்றால், புதிய படைப்பூக்கங்கள் உள்ளே வரும் என்றால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று கற்பனை செய்யவே வியப்பாக இருக்கிறது

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
அடுத்த கட்டுரைகிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு