ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா?

dog

ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான்

.– என ஆரம்பித்து ஒரு கீற்று கட்டுரை. என் நூல்களின் விற்பனையை தோராயமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். . மறுஅச்சு , மறுபதிப்பு இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு தெரியாமலிருப்பதையும், பல்வேறு தகவல்களை தோராயமாக அடித்துவிட்டிருப்பதையும் தவிர்த்தால் உட்கார்ந்து வேலைசெய்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.

முதன்மையான எழுத்தாளர் என்று சொன்னவர்கள் எல்லாம் பெஞ்சின் மேல் ஏறுங்கள்…

***

அன்புள்ள ஜெ

கீற்று இணையதளத்தில் நீங்கள் எப்படி தமிழின் முதன்மையான எழுத்தாளராக ஆனீர்கள் என்று ஒரு கட்டுரை வந்துள்ளது. நீங்கள் எழுதிய நூல்கள் எவையுமே விற்றதில்லை. ஆகவே இது ஒரு இலுமினாட்டி சதி என நினைக்கிறேன். வெண்முரசு ஓர் இலுமினாட்டி சிம்பல். இலுமினாட்டிகள் உங்களை மெல்ல உந்தி மேலே கொண்டுவைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் கமலஹாசன் இரண்டுபேருமே இலுமினாட்டிகள். உங்கள் சினிமாக்கள் எதுவும் ஓடியதில்லை. ஆனால் ரஜினி கமல் இருவருக்குமே வசனம் எழுதினீர்கள். எவ்வாறு? இலுமினாட்டிகளின் சதி என்ற விஷயம் தவிர எந்தக்காரணமும் பொருந்துவதாக இல்லை

ஜெய்சங்கர்

***

முந்தைய கட்டுரைரியாஸ் -கடிதம்
அடுத்த கட்டுரையோகி