கரிமை படிந்த கல்விளக்கில்

mukam

 

மாமலர் எழுதத் தொடங்கியதுமே என் செல்பேசியில் இந்தப்பாடலைத்தான் வைத்திருக்கிறேன். மூகாம்பிகை ஆலயத்திற்குச் செல்வதற்கும் முன்பே. மலையாளச்செவிகளுக்கு மட்டுமே ஒருவேளை இது நல்ல பாடலாகத் தெரியக்கூடும். மெட்டு அவ்வளவு நன்றாக இல்லை என இசை தெரிந்த நண்பர் சொன்னார். எனக்கு வரிகளே முக்கியம். எந்தப்பாடலிலும் வரிகள்தான் முதன்மை

 

 

 

சௌபர்ணிகாம்ருத வீஜிகள் பாடுந்நு

நின்றே சகஸ்ர நாமங்கள்

பிரார்த்தனா தீர்த்தமாடும் என் மனம் தேடும்

நின்றே பாதாரவிந்தங்கள் அம்மே

ஜகதம்பிகே மூகாம்பிகே

கரிமஷி படரும் ஈ கல்விளக்கில்

கனகாங்க ரூபமாய் விரியேணம் நீ

அந்தராளமாய் தெளியேணம்

 

[சௌபர்ணிகையின் அமுத அலைகள் பாடுகின்றன

உன் ஆயிரம் பெயர்களை

பிரார்த்தனையின் நீரிலாடும் என் மனம் தேடுகின்றது

உன் பாதத்தாமரைகள்

உலகின் அன்னையே மூகாம்பிகையே

கரிமை படர்ந்த இந்த கல்விளக்கில்

பொன்னுருவாக நீ விரியவேண்டும்

உள்ளத்தில் ஆழத்தில் தெளியவேண்டும்]

 

சௌபர்ணிகா – கொல்லூர் வழியாக ஓடும் ஆறு

முந்தைய கட்டுரைநமது செய்திக்கட்டுரைகள்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் ஒரு குறிப்பு