அவ்வளவு சிறியது…

aso

 

அவ்வளவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை
இல்லையா?

நாம் எதையும்
திரும்பபெற முடியாத அளவு
திருத்திக்கொள்ள முடியாத அளவு

எந்த அன்பையும்
எந்தப் பரிசையும்
பதிலுக்குத் தரமுடியாத அளவு

சொல்ல வந்தது
தொண்டையிலே நின்று விடும் அளவு

மின்மயானத்தில்
பத்து வினாடிகளில்
சாம்பலாகிவிடும் அளவு

ஒரு சிறிய ஸ்டாம்பின்
பன்புறம் எழுதக்கூடிய அளவு

எவரும் எவரிடமும்
திரும்ப வர முடியாத அளவு

அவ்வளவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை எனில்
சிறிய அன்பும்
சிறிய வருத்தங்களும்
சிறிய திருட்டுகளும்
நமக்குப்
போதும்தானே..

 

மனுஷ்யபுத்திரன்

23.3.2017
இரவு 11.58

 

முந்தைய கட்டுரைஇந்நாள்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனும் திருமாவளவனும்