முங்கிக்குளி -கடிதங்கள் 2

fukoka
ஃபுகோகா

ஜெ

முங்கிக்குளி வாசித்தேன். நீங்கள் எந்த அர்த்த்த்தில் சொன்னீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் மசானபு புகுகோகா இந்தவகையான வாழ்க்கைதான் மிகச்சிறந்த வாழ்க்கை என்று சொல்கிறார். சோம்பல் என்று நாம் சொல்வது காண்டம்ப்லேட்டிவ் மனநிலை. அதை அடைவதற்கான விவசாயமே இயற்கை விவசாயம். அதை ஒன்றும் செய்யாவேண்டிய தேவையில்லாத விவசாயம் என்று அவர் சொல்கிறார்.

முன்பு ஜப்பானில் விவசாயிகள் அப்படிப்பட்ட ஓய்வான வாழ்க்கைதான் வாழ்ந்தர்கள். அத்னபின் நவீன வேளாண்மைதான் அவர்களை சுறுசுறுப்பானவர்களாக ஆக்கியது. அதோடு அவர்களின் மகிழ்ச்சியே போய்விட்டது என்று சொல்கிறார். முங்கிக்குளிவாழ்க்கை சிறந்ததே. எங்கிருந்தாலும் அப்படி ஒருவாழ்க்கையை அமைத்துக்கொள்வதே மிகச்சிறந்தது. நல்லுணவு நல்ல காற்று நல்ல நீர் நல்ல தூக்கம் நல்லசிந்தனை தானாகவே வரும்

மகேந்திரன்

***

லாரன்ஸ்
லாரன்ஸ்

அன்புள்ள ஜெமோ

ஐரோப்பாவில் பல சிற்றூர்களில் இதேபோல முங்கிக்குளி வாழ்க்கை இருப்பதைக் கண்டிருக்கிறேன். இதை அங்கே பப் வாழ்க்கை என்பார்கள். சீரான அழகான சின்ன வாழ்க்கை. சின்ன ஊர். ஆனால் எது மிஞ்சுகிறது என்றால் நம்மூரில் ஒரு காஸ்மிக் அம்சம் உள்ளது. இங்கே இயற்கையுடன் உறவு வேட்டை, மீன்பிடிப்பது என்றுதான். இந்தியாவில் அது ரிலிஜியஸ் ஆக இருக்கிறது. அது முழுமையான மனநிலையை அளிக்கிறது.

டி.எச்.லாரன்ஸ் இதே விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ஒரு இலட்சிய வாழ்க்கை என்பது அவர் சொல்வதைப் போலப் பார்த்தால் சரியான முங்கிக்குளிதான். அவர் அதற்கு இந்தியாவிலுள்ள வாழ்க்கையே சிறந்தது என்று சொல்கிறார். லாரன்ஸ் நம் மக்கள் நால்தோறும் நீரில் நீராடிக் குளிப்பதையும் மதச்சடங்குகள் வழியாக சூரியனையும் வானையும் வணங்குவதையும் சிறிய ஊருக்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதையும் மிகமிக முன்னுதாரணமான வாழ்க்கை என்று சொல்கிறார்

ஜெயச்சந்திரன்

***

ts
டி எஸ் எலியட்

 

ஜெ

ஒரு நல்ல எழுத்தாளருக்கு பொருத்தமான வாழ்க்கை என்பது நீங்கள் சொல்லும் இந்த முங்கிக்குளி வாழ்க்கைதானா? டி.எஸ்.எலியட் இலக்கியவாதி சீரான, சம்பவப் பரபரப்புகளே இல்லாத வாழ்க்கையே நல்ல வாழ்க்கை என்று சொல்வதை நான் கல்லூரியிலே வாசித்திருக்கிறேன். அது இதுதானே? ஆனால் உலகம் இன்றைக்கு சமூகவலையாக விரிந்து நம்மைச் சுழ்ந்துள்ளது. நாம் ஒரே நிலத்தில் மானசீகமாகச் சுருங்குவது கஷ்டம்

குமார் முத்துசாமி

***

முந்தைய கட்டுரைஅம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
அடுத்த கட்டுரைகாமசூத்திரத்தின் பின்புலம்