சின்னஞ்சிறு அதிசயம்!

rahman_2633264f

 

மணி படம். அஜி வேலைபார்த்த படம். ஆகவே நான் ஓக்கே கண்மணியை மூன்று முறை பார்த்தேன். பாடல்களை பலமுறை கேட்டேன். ஆனால் இன்றுகாலை என்னை இந்தப்பாடல் ஒருமாதிரி ஆட்கொண்டுவிட்டது. என்ன ஒரு மகத்தான பாடல். எத்தனை உள்மடிப்புகள். எத்தனை எதிர்பாராத நுட்பங்கள். அலையலையென விரிகிறது. சென்ற பல ஆண்டுகளில் இதற்கிணையான ஒரு பாடலைக் கேட்டதில்லை. ஒரு சினிமா வந்துபோகும். அதில் இடம்பெறும் ஒரு பாடலில் இத்தனைபெரும் தவத்தை அமைக்க தன் கலையன்றி பிறிதறியாத பெருங்கலைஞனால் மட்டுமே முடியும். ஏ.ஆர்.ஆருக்கு உடனே ஒரு மின்னஞ்சல் போட்டேன். நூறுமுறை கேட்டிருப்பேனா?

 

பெரும்பாலான தமிழ்ப்பாடல்களில் எனக்குப்பிரச்சினையே அபத்தமான பலசமயம் ஆபாசமான அதைவிட மோசமாக ஒலியுறுத்தல் மிக்க பாடல்வரிகள்தான். இந்தப்பாடல்வரிகளில் உள்ள அர்த்தமும் அதைவிட இனிய அர்த்தமின்மையும் கவிஞனின் இருப்பை காட்டுபவை. தமிழில் வந்த அரிய பாடல்களில் ஒன்று இது

 

நானே வருகிறேன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
அடுத்த கட்டுரைமின்நெடுஞ்சாலையில் புத்தர்