அசைவைக் கைப்பற்றுதல் -கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன்,

அசைவைக் கைப்பற்றுதல் வாசித்தேன்

தாராசுரத்தின் அந்த சிற்பத்தை நேரில் பார்த்தபோது உணரமுடியாத நடன சுழல் அசைவுகளை இப்போது உணர முடிந்தது. நன்றி.

‘படி இறங்கிய பெண்’ ஓவியத்தை இணையத்தில் தேடியபோது கிடைத்தது இது. இதுதானா?

unnamed

Nude descending a staircase no 2

(மார்செல் துஷாம்ப்) Marcel Duchamp

https://en.wikipedia.org/wiki/Nude_Descending_a_Staircase,_No._2

பா ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

அசைவைக் கைப்பற்றுதல் முக்கியமான கட்டுரை. இதுவரை கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் ஐந்து உடல் ஒரே தலை கொண்ட நடனக்காரி, மூன்று உடல் ஒரே தலை பசுமாடு என்றெல்லாம்தான் கைடுகள் இதை அறிமுகம் செய்வார்கள். நீங்கள் சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறது. தாடகை அம்புபட்டு விழுவதை இடைக்குமேல் அந்த உடல் விசிறிபோல இருப்பதாகவே செதுக்கியிருப்பார்கள். சரியும் காட்சிதான் அது

நம் பண்பாட்டின் ஒரு சின்ன விஷயங்கள்கூட நமக்குத்தெரியாமல் இருக்கிறதை எண்ணினால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது

பாலசந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
அடுத்த கட்டுரைவெண்முரசும் விக்கிப்பீடியாவும் -கடிதங்கள்