நந்தலாலா இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நந்தலாலா பற்றிய உங்கள் கருத்துக்களை சரி என்றே எடுத்துக்கொள்வோம், மிஷ்கின் ஒரு meeting-இல் “என் படத்தை இந்த அரங்கத்தில் உள்ள 100 பேர் பார்த்து ரசித்தால் போதும் என்றார், அந்த meeting 7th channel manikam narayanan arrange செய்த ஒரு film festival ,இந்த மாதிரி festival என்றாலே கலைப்படங்களை மட்டுமே பார்த்து ரசிக்க கூடியவர்கள், அந்த 100 பேரில் நானும் ஒருவன். so kikujiro -வின் copy paste நந்தலாலா- வை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்

மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் கலைப்படங்கள் எடுக்ககூடியவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படியொரு நோக்கில் கலைப்படம் எடுக்கும் இயக்குநர்களின் சாதனையாக கருதுவது உலக சினிமாக்களோடு போட்டி போட்டு இன்டர்நேஷனல் film festivals வாங்குவதுதான்.so நந்தலாலா மாதிரியான படங்களை வெட்கப்படாமல் உலக அரங்கில் எப்படி எடுத்துச்செல்வது , தேரிந்துவிடாதோ?

“நான் கொரிய இயக்குநர் kim-ki-duk -இன் வெறியன் (அடிமை என்று கூட சொல்லாம் ) அவர் படங்களில் காட்டப்படும் கொரிய கலாச்சாரம்,வாழ்வியல் முறை,மனநிலை,e.t.c, அவைகளை திரைப்படம் என்னும் ஊடகம் வழியாக பார்த்து கொரியர்கள் மீது ஒரு பெரிய ஈடுபாடு வந்திருக்கிறது, kim-ki-duk படங்களை பார்த்து நான் கொரியனாக பிறக்கவில்லையே என்று கவலைப்பட்டேன்,இது அல்லவா ஒரு இயக்குநரின் சாதனை”

மிஷ்கின் இப்படியொரு படத்தை எடுத்துவிட்டு “நான் kikujiro இயக்குநர் takeshi kitano -வுடன் நந்தலாலா-வை பார்க்க வேண்டும்” என்று சொல்கிறார். மிஷ்கின் நேர்மையாக இருந்தால் atleast “this story is copied(adopted is not the right word here) from the film kikujiro directed by takeshi kitano” என்று படத்தின் title card-இல் சேர்த்திருக்க வேண்டும்மல்லவா?

மிஷ்கின் நந்தலாலா-வை நோர்வே அரங்கில் ஸ்க்ரீன் செய்திருக்கிறார், அரங்கில் படம் பார்த்த எத்தனை பேர் kikujiro படத்தை பார்த்தார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.
நல்ல வேலை மிஷ்கின் kim-ki-duk படங்களை பார்ப்பது இல்லை போலும்,அது kim-ki-duk-இன் நல்ல நேரம்.

பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும்

kishore(asst.editor)

அன்புள்ள ஜே

நந்தலாலா பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தபோதே ஊகித்தேன், நீங்கள் கிக்குஜிரோ பார்க்கவில்லை. அதன்பின் நீங்கள் எழுதிய குறிப்பில் எனக்கு முழுமையான கருத்துமுரண்பாடு இருக்கிறது. நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் ஒரு படத்தை சுட்டு எடுப்பதை நியாயப்படுத்திவிடாது ஜெ.

கிக்குஜிரோ படத்தின் மையக்கருவில் இருந்தோ அல்லது அதைக் காட்சிப்படுத்திய விதத்தில் இருந்தோ இன்ஸ்பையர் ஆகி வேரு ஒருபடத்தைஎ டுப்பதில் எந்த பிழையும் இல்லை. கிக்குஜிரோவேகூட அப்படி இன்னும் இரு ஜப்பானிய படங்களின் இன்ஸ்பிரேஷன்தான். ஆனால் இங்கே அந்தபடத்தில் உள்ள காட்சியமைப்புகள் , கதையமைப்புகள் அப்படியே திருப்பி எடுக்கப்பட்டிருக்கின்றன. மூலத்துக்கு நன்றிகூட தெரிவிக்கப்படவில்லை. இது தப்பு

நீங்கள் சொல்வது சரி. உள்ளூரில் ஒரு நல்ல படத்தை ரசிப்பதற்கான ஒரு மனநிலையை இந்த படம் உருவாக்குகிறது. ஆனால் அது மட்டும் போராதே. கலைப்படம் என்றால் அதிலே சில முக்கியமான விசயங்கள் உள்ளன. அது முதலில் நம்முடைய பண்பாட்டையும் வாழ்க்கையையும் நமக்கும் நம்மை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கும் காட்டவேண்டும். அதுக்குத்தான் கலைச்சினிமா. கமர்ஷியல் சினிமாக்கள் அப்படி காட்டுவதில்லை. அவை காட்டுவது மிகை. அதனால்தான் அரவிந்தன் அடூர் போன்றaவர்கள் தேவைப்படுகிறார்கள். மிஷ்கினின் இந்தபடத்துக்கு அந்த தகுதி உண்டா ?

அதேமாதிரி கலைப்படம் என்றால் நமக்கு அதைப்பற்றி ஒரு பெருமை வரவேண்டும். இதோ நாங்களும் நல்ல படம் எடுத்திருக்கிறோம் என நாமே நினைக்கவேண்டும். நாமே நாலுபேரிடம் சொல்ல வேண்டும். மலையாள ஆசாமிகளிடம் சொல்ல வேண்டும். அடூர் இப்படி ஒரு படம் எடுத்து ஒரு மலையாளத்தான் நம்மிடம் பேசினால் விட்டு விடுவோமா? அப்ப அந்த பெருமையும் இல்லை. நாளை இந்தப்படம் தேசிய விருதுக்கு போகும் என்றால் வடக்கத்தி மீடியாக்கள் பிரித்து மேய்ந்திவிடுவார்கள்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று புரிகிறது. ஒருவர் வணிக நோக்கம் இல்லாமல் ஒரு சினிமாவை எடுக்கிறார். அதுக்காக தன் சொந்தப்பணத்தை ஏராளமாக செலவழிக்கிறார். அந்தப்படம் நன்றாக இருக்கிறது. அந்த முயற்சி ஜெயித்தால் நல்லது. ஆகவே அதை ஆதரிக்கிறீர்கள் இல்லையா? நல்ல நினைப்புத்தான். ஆனால் அதுக்கு ஒரு எல்லை இருக்கிறது ஜெ

சாமிநாதன்

முந்தைய கட்டுரைஅ.முத்துகிருஷ்ணன் பாலஸ்தீனப் பயணம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்